Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மகனுக்கு பெண் பார்க்க போன அமைச்சர் பி.மூர்த்தி.. ஷாக் தந்த உறவினர்கள்.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

மதுரை : என் மகனுக்கு திருமணம் முடிந்துவிட்டதாக ஓராண்டுக்கும் மேலாகப் பரவிய தவறான தகவலை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை ஆனால் இப்போது எனது மகனுக்குப் பெண் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில் உறவினர்களே 'உங்கள் மகனுக்குத் திருமணம் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டதே' என்று கேட்கும் அளவுக்கு வதந்தி பரப்பி உள்ளனர் என அமைச்சர் பி.மூர்த்தி வேதனை தெரிவித்துள்ளார்.

இதை எங்களால் ஆதாரப்பூர்வமாக எப்படி மறுப்பது என தவித்துக் கொண்டிருந்த நிலையில் அதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது என்று அமைச்சர் பி.மூர்த்தி விளக்கம் அளித்துள்ளார்.

பத்திரப்பதிவு அலுவலகத்தில் மதுரை வெளிச்சநத்தத்தைச் சேர்ந்த எனது பெயரில் உள்ள வேறு ஒருவரின் மகனுக்கு நடந்த திருமணத்தை, என் மகனுக்கு நடந்த திருமணம் என்று சிலர் தவறாக புரிந்து கொண்டுள்ளனர். அதை அரசியல் காழ்ப்புணர்ச்சி உடன் பரப்பி உள்ளனர். இப்போது என்ன நடந்தது என்பது வெளியில் தெரியவந்துள்ளது என்று அமைச்சர் மூர்த்தி கூறினார்,

திருமணம்

திருமணம்


வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் இதுபற்றி பேசுகையில், "எனது மூத்த மகன் பி.எம்.தியானேஷ் (26). இவருக்கு திருமணம் ஆகிவிட்டதாகவும், அதைப் பதிவும் செய்துவிட்டதாகவும் சிலர் எங்கள் உறவினர்களிடம் பொதுமக்களிடமும் பரப்பி வந்தார்கள்.

குழப்பத்தில் இருந்தோம்

குழப்பத்தில் இருந்தோம்

ஆரம்பத்தில் இந்த வதந்தியை நாங்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால் ஓராண்டுக்கு மேலாக இந்த வதந்தி பரவிகொண்டே இருந்தது. இதன் பின்னணி என்ன என்று தெரியாததால் என்ன செய்வதென்று குழப்பத்தில் இருந்தோம். இதற்கிடையே தற்போது எனது மகனுக்குப் பெண் பார்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம்.

ஏற்கனவே திருமணம்

ஏற்கனவே திருமணம்

அப்போதுதான் "உங்கள் மகனுக்குத் திருமணம் ஏற்கெனவே நடந்து முடிந்துவிட்டதே" என உறவினர்கள் நேரடியாக கேட்கத் தொடங்கினார்கள். இதை எங்களால் ஆதாரப்பூர்வமாக எப்படி மறுப்பது என்று விசாரணையில் இறங்கினோம். அப்போதுதான் சில தகவல் எங்களுக்கு தெரியவந்தது. அதை உங்களிடம் தெரிவிக்க விரும்புகிறோம்-

பத்திரபதிவு

பத்திரபதிவு

மதுரை அருகே பூவந்தி கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக் கவுன்சிலர் முருகன் மனைவி சாந்தி. எனது உறவினரான இவர் நிலக்கோட்டையில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகத்துக்குத் திருமணப் பதிவு தொடர்பாக சென்றார். அதே அலுவலகத்தில் வெளிச்சநத்தத்தைச் சேர்ந்த என் பெயர் உள்ள பி.மூர்த்தி மகனுக்குப் பதிவு திருமணம் நடந்துள்ளதாக கூறியிருக்கிறார்கள். இதை சாந்தி எங்களிடம் தெரிவித்தார்.

பாண்டி மகன்

பாண்டி மகன்

இதனால் அதிர்ச்சியடைந்த நாங்கள் இதுகுறித்து நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தபோது உண்மை என்ன என்பது தெரியவந்தது. வெளிச்சநத்தத்தைச் சேர்ந்தவர் பாண்டி மகன் மூர்த்தி. இவரது மகன் விஜி வழக்கறிஞராக உள்ளார். இவர் கோவையைச் சேர்ந்த சரவணன் மகள் பிரதீபா என்பவரை நிலக்கோட்டை பத்திரப்பதிவு அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்து கொண்டுள்ளார். இருவரும் வெவ்வேறு சமூகத்தினர். ஓராண்டுக்கு முன்னர் நடந்த இந்தத் திருமணம் குறித்த தகவல் 2 நாட்களுக்கு முன்புதான் எங்களுக்கு தெரிந்தது.

தவறான தகவல்

தவறான தகவல்

இதுகுறித்து விஜியின் தந்தையிடம் கேட்டபோது தனது மகனுக்கு பதிவுத் திருமணம் நடந்தது உண்மைதான். அதற்கான ஆவணங்களையும் காண்பித்தார். வெளிச்சநத்தம் பி.மூர்த்தி என்றாலே பலருக்கும் எனது நினைவுதான் வரும். திருமணம் முடித்தவரின் தந்தையின் பெயர் மூர்த்தி. இவரது தந்தையின் பெயர் பாண்டி என்பதால் பி.மூர்த்தி எனப் பதிவு செய்திருக்கிறார். எனது தந்தை பெயர் பெரியண்ணன். பி.மூர்த்தி என்ற பெயரில் வேறு ஒருவர் எங்கள் கிராமத்தில் இருப்பதே இப்போதுதான் நாங்கள் உள்ளிட்ட பலருக்கு தெரியவந்துள்ளது.

மூர்த்தி விளக்கம்

மூர்த்தி விளக்கம்


இந்தப் பெயர் குழப்பத்தின் பின்னணியில் எனது மகன் திருமணம் குறித்த தகவல் தவறாகப் பரப்பப்பட்டிருக்கிறது. அறியாமையாலும், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவும் இதுபோன்ற தகவலை பரப்பி உள்ளார்கள். உண்மையை இப்போது வெளிப்படுத்தி உள்ளோம். இனிமேல் இதுபோன்ற தகவலைப் பொதுமக்களும், உறவினர்களும் நம்பத் தேவையில்லை" இவ்வாறு அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+