மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கு ஆதரவான ஃபேஸ்புக் பதிவு- மதுரை இளைஞர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- 16 ஆவணங்கள் பறிமுதல்

Google Oneindia Tamil News

மதுரை: ஐ.எஸ்.ஐ.எஸ்.தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட புகாரில் கைது செய்யபப்ட்ட மதுரை இளைஞர் செந்தில்குமார் என்ற முகமது இக்பால் வீட்டில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று 7 மணிநேரம் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பென் டிரைவ், சிம் கார்டு உள்ளிட்ட 16 ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும் இக்பாலுடன் தொடர்பில் இருந்த திருப்பூர் இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர்.

Recommended Video

    ஐ.எஸ்.ஐ.எஸ்.-க்கு ஆதரவான ஃபேஸ்புக் பதிவு- மதுரை இளைஞர் வீட்டில் என்.ஐ.ஏ. சோதனை- 16 ஆவணங்கள் பறிமுதல்

    இந்தியாவில் 24 மணிநேரத்தில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 4,092 பேர் மரணம்! இந்தியாவில் 24 மணிநேரத்தில் 2.81 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று- ஒரே நாளில் 4,092 பேர் மரணம்!

    மதுரை காஜிமார் தெருவை சேர்ந்த செந்தில்குமார் என்ற முகமது இக்பால் கடந்த ஆண்டு தம்முடைய ஃபேஸ்புக் பக்கத்தில், தூங்கா விழிகள் ரெண்டு காஜிமார் தெருவில்.. என பதிவிட்டிருந்தார். இந்த பதிவு தொடர்பாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கபட்டது.

    இக்பால் மீது வழக்கு

    இக்பால் மீது வழக்கு

    இந்த பதிவை வெளியிட்ட இக்பாலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பிருக்கலாம் என்கிற சந்தேகத்தின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு கடந்த ஏப்ரல் மாதம் தேசிய புலனாய்வு ஏஜென்சியான என்.ஐ.ஏ.-க்கு மாற்றப்பட்டது.

    என்.ஐ.ஏ.வால் இக்பால் கைது

    என்.ஐ.ஏ.வால் இக்பால் கைது

    இதையடுத்து இக்பாலை என்.ஐ.ஏ. அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் மதுரையில் காஜிமார் தெரு, கே. புதூர், பெத்தானியாபுரம், மகபூப்பாளையம் ஆகிய பகுதிகளில் கேரளாவில் இருந்து வந்திருந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் நேற்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தினர்.

    மதுரையில் அதிரடி சோதனை

    மதுரையில் அதிரடி சோதனை

    இக்பால் மற்றும் அவரது நண்பர்கள் வீட்டில் நடந்த இந்த சோதனை பிற்கபல் 1 மணி வரை நீடித்தது. இந்த சோதனையின் போது பென் டிரைவ், சிம் கார்டுகள் உள்ளிட்ட 16 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

    திருப்பூர் இளைஞரிடம் விசாரணை

    திருப்பூர் இளைஞரிடம் விசாரணை

    மேலும் வாட்ஸ் அப் குழு ஒன்றில் திருப்பூரை சேர்ந்த இளைஞருடன் அதிக நேரம் இக்பால் உரையாடி இருந்தார். இதனையடுத்து திருப்பூரை சேர்ந்த அந்த இளைஞரிடமும் நேற்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் சுமார் 8 மணிநேரம் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின் முடிவில் திருப்பூர் இளைஞர் விடுவிக்கப்பட்டார்.

    English summary
    National Investigation Agency conducted searches at 4 places in Madurai for Youth's Facebook Post.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X