மதுரைக்கே ராஜா நான் தான்! கெத்தாக பேசிய ‘மாஜி’! ஓட்டையை போட ரூட் போட்ட ஓபிஎஸ்! ’அவர்’ வர்றாரா?
மதுரை : அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமியை விட ஓ.பன்னீர்செல்வத்தை மிகவும் அதிகமாக விமர்சித்தவர் அவரது ஆதரவாளராக இருந்த ஆர்.பி.உதயகுமார். இந்நிலையில் அவருக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில் மேலும் பல நிர்வாகிகளை மதுரையிலிருந்து இழுக்க ஓபிஎஸ் தரப்பு தயாராகி வருவதாகவும் இதற்கு இரண்டு முக்கிய நிர்வாகிகள் ஓகே சொன்னதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் தொடர்பாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான ட்விஸ்ட்டுகள் நடந்து வருகிறது. சினிமா போல பரபரப்புகளுக்கும் விறுவிறுப்புகளுக்கும் பஞ்சமில்லாமல் நிகழ்வுகள் நடந்தேறி வருகிறது.
இது ஒரு புறம் நடந்து கொண்டிருக்க எடப்பாடி தரப்பிலிருந்து நிர்வாகிகளை இழக்கும் முயற்சியில் ஓபிஎஸ் தரப்பு தீவிரமாக ஈடுபட்டு இருக்கிறது. நிர்வாகிகள் ஓரளவு ஆதரவு இருந்தாலும் எடப்பாடிக்கு கொடுக்கும் நெருக்கடி போதவில்லை என கருதுகிறது ஓபிஎஸ் தரப்பு

உசிலம்பட்டி ஐயப்பன்
முதற்கட்டமாக மாவட்ட செயலாளர்கள் மற்றும் எம்எல்ஏக்களை தங்கள் தரப்புக்கு கொண்டுவர எடுத்த முயற்சியின் முதல் பலனாக உசிலம்பட்டி ஐயப்பன் வந்து சேர்ந்தார். இதனால் உற்சாகத்தில் இருக்கும் ஓபிஎஸ் தரப்பு அவரை காண்பித்து மற்ற எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்களை தங்கள் தரப்புக்கு இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அதற்கு ஓரளவு பலனும் கிடைத்துள்ளதாக கூறுகின்றனர். இந்த நிலையில் மற்ற மாவட்டங்களில் எப்படியோ தன்னுடன் இருந்து தற்போது தன்னையே மிக தீவிரமாக விமர்சித்து வரும் ஆர்பி உதயகுமாரின் மதுரை மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகளை அழைத்து வரவேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்.

ஆர்பி உதயகுமார்
காரணம் கடந்த ஆண்டுகளில் ஓபிஎஸ் மிகவும் விசுவாசத்திற்குரிய அதுவும் ஒரே சமூகத்தைச் சேர்ந்த அமைச்சரான ஆர்பி உதயகுமார் திடீரென எடப்பாடி பக்கம் திரும்பி அவரையே விமர்சிக்க தொடங்கியதுதான். கடந்த சில நாட்களுக்கு முன்பு அதிமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தேனிக்கு தலைமை தாங்கியவர் ஆர்பி உதயகுமார். அவரது சொந்த மாவட்டத்திலேயே ஆயிரக்கணக்கில் ஆட்களை திரட்டி ஓபிஎஸ்ஐ கடுமையாக விமர்சித்தார்.

கடும் விமர்சனம்
அப்போது பேசிய அவர்,""முல்லைப் பெரியாறு அணையை கட்டிய பென்னிகுயிக்கை தெய்வமாக வழிபடுபவர்கள் தேனி மாவட்ட மக்கள். அப்படி விஸ்வாசமான மக்கள் உள்ள தேனி மாவட்டத்தில் ஓ.பி.எஸ் போன்ற துரோகிகள் இருப்பது வருத்தமளிக்கிறது. ரவீந்திரநாத்-திற்கு மக்கள் செல்வாக்கு இருந்தால் தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும். நான் அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன் அதிமுக தலைமை கழக அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவம் கண்ணில் ரத்தம் வர வைக்கிறது. உங்கள் வீட்டை சூறையாட எவ்வளவு நேரமாகும் எனத் தெரியவில்லை." எனப் பேசினார்.

தக்க பதிலடி
இதனால் ஓ.பன்னீர்செல்வம் தரப்பு கடும் அதிர்ச்சியில் இருந்த நிலையில் ஆர்பி உதயகுமாருக்கு தக்க நேரத்தில் பதிலடி கொடுக்க தயாராகி வந்தனர். அதில் முதல் பதில் தான் உசிலம்பட்டி எம் எல் ஏ ஐயப்பனின் வரவு. இதேபோல அடுத்தடுத்து பல நடவடிக்கைகள் ஆர்பி உதயக்குமாருக்கு எதிராக முன்னெடுத்துச் செல்லப்பட இருக்கும் நிலையில் தற்போதைய சூழலில் மதுரையைச் சேர்ந்த இரு மூத்த நிர்வாகிகள் ஓபிஎஸ் தரப்புக்கு தாவ தயாராக இருக்கின்றனர். மேலும் மாவட்ட செயலாளர் அளவிலான நிர்வாகி ஒருவரும் ஓபிஎஸ் தரப்புக்கு வர சம்மதம் தெரிவித்திருப்பதால் மதுரையிலேயே இந்த சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி ஆர்பி உதயகுமாருக்கு நெருக்கடி கொடுக்க தயாராகி வருகிறது ஓபிஎஸ் தரப்பு.
-
அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல்.. எடப்பாடி முதல் 23 பேர் களமிறங்கும் தொகுதிகள் அறிவிப்பு -
அதிமுக வேட்பாளர் பட்டியலில் இதை கவனிச்சீங்களா! ஆதிதிராவிடர்கள் இல்லையே.. ஷாக் ரிப்போர்ட் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
அதிமுக, பாஜக நேரடி போட்டியில்லை.. பெரம்பூரில் தவெக விஜய்க்கு சாதகம்? களமிறக்கிவிடப்பட்ட பாமக! -
எல்லாமே வேஸ்ட்.. பல லட்சம் போச்சே.. புலம்பி தள்ளிய கெளதமி.. போனை கூட எடுக்காத எடப்பாடி! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி! எடப்பாடி எடுத்த ஸ்மார்ட் முடிவு! வாக்குறுதிக்கு பின்.. இவ்வளவு பிளானிங்கா! -
அதிமுகவில் இருந்து முன்னாள் MLA விலகல்.. நாங்குநேரி தொகுதி அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டதால் அப்செட்! -
"தாமரை சின்னத்தில் தமாகா 1 சீட் கூட ஜெயிக்காது”.. ஜி.கே.வாசன் முடிவுக்கு எதிராக கொதித்த நிர்வாகிகள்! -
எடப்பாடி ரொம்ப மாறிட்டாரே.. இது எதிர்பார்க்காத வேகம்.. அதே ஜெயலலிதா ஸ்டைல்.. கவனிச்சீங்களா? -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
பாஜக தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கிய எடப்பாடி.. மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர் தமிழிசை செளந்தரராஜன்? -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா?












Click it and Unblock the Notifications