மதுரை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

செல்லூர் ராஜூ, உதயகுமார் வெல்ல வாய்ப்பு.. சரவணனுக்கு பின்னடைவு.. மதுரை களநிலவரம்

Google Oneindia Tamil News

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில், திருமங்கலம், மதுரை மேற்கு, மதுரை கிழக்கு, திருப்பரங்குன்றம், மேலூர் உள்ளிட்ட தொகுதிகளில் அதிமுக வெல்ல அதிக வாய்ப்பு உள்ளதாக சத்தியம் டிவி கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது

திமுக, மதுரை தெற்கு, மதுரை கிழக்கு, மதுரை மத்தி. உசிலம்பட்டி, சோழவந்தான் ஆகிய ஐந்து தொகுதிகளில் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுகவைவிட அதிக வாக்குகளை அமமுக பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலத்தில் அமைச்சர் உதயகுமார் போட்டியில் உள்ளார். இதேபோல் மதுரை மேற்கு தொகுதியில் அமைச்சர் செல்லூர் ராஜு போட்டியில் உள்ளார். இருவரும் வெல்ல வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதேபோல் மதுரை மத்திய தொகுதியில் திமுகவின் பழனிவேல் தியாகராஜன் போட்டியில் உள்ளார். அவரும் வெல்ல வாப்பு உள்ளதாம். மதுரை வடக்கு தொகுதியில் பாஜகவின் சரவணன் வெல்ல வாய்ப்பில்லை என்கிறது கணிப்பு.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம்

மதுரை மாவட்டத்தில் உள்ள திருமங்கலம் தொகுதியில் அதிமுக 45சதவீதம்; திமுக 41சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 7சதவீதம்; நாம் தமிழர் 3சதவீதம்; மக்கள் நீதி மய்யம்- 2சதவீதம் வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது. திருப்பரங்குன்றம் தொகுதியில் அதிமுக 37சதவீதம்; சி.பி.எம்- 35சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 16சதவீதம்; மக்கள் நீதி மய்யம் 6சதவீதம் நாம் தமிழர் 4சதவீதம் வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது.

சோழவந்தான்

சோழவந்தான்

மேலூர் தொகுதியில் அதிமுக 30 சதவீதம்; காங்கிரஸ் 29சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம்- 29சதவீதம்; நாம் தமிழர் 1சதவீதம் மக்கள் நீதி மய்யம் 1சதவீதம் வாக்குகளை பெற வாய்ப்பு உள்ளது, சோழவந்தான் தொகுதியில் திமுக 49 சதவீதம்; அதிமுக 44 சதவீதம்; நாம் தமிழர் 3சதவீதம்; தேமுதிக 2சதவீதம் பெற வாய்ப்பு உள்ளதாம்.

மதுரை மத்தி

மதுரை மத்தி

உசிலம்பட்டி தொகுதியில் திமுக -33சதவீதம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 29சதவீதம்; அதிமுக 18சதவீதம்; நாம் தமிழர் 8சதவீதம் பெற வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது,. மதுரை மத்திய தொகுதியில் திமுக (பழனிவேல் தியாகராஜன்) 49சதவீதம்; அதிமுக 33சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 4சதவீதம் நாம் தமிழர் 3சதவீதம் பெறக்கூடும்.

மதுரை தெற்கு

மதுரை தெற்கு

மதுரை வடக்கு தொகுதியில் திமுக -45சதவீதம்; பாஜக 35சதவீதம் (சரவணன்); மக்கள் நீதி மய்யம்- 8சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5சதவீதம்; நாம் தமிழர் 2சதவீதம் பெறக்கூடும். மதுரை தெற்கு தொகுதியில் மதிமுக 39சதவீதம்; அதிமுக 35சதவீதம்; மக்கள் நீதி மய்யம்- 9சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 5சதவீதம் பெறலாம்.

மதுரை மேற்கு

மதுரை மேற்கு

மதுரை கிழக்கு தொகுதியில் அதிமுக 32சதவீதம்; திமுக 31சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 29சதவீதம்; நாம் தமிழர் 3சதவீதம் பெற வாய்ப்பு உள்ளது.
மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக (செல்லூர் ராஜூ) 48சதவீதம்; திமுக 45சதவீதம்; அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் 3சதவீதம்; நாம் தமிழர் 3 சதவீதம் வாக்குகள் பெற வாய்ப்பு உள்ளது.

English summary
Sathiyam opinion poll 2021 report that sellur Raju, Udayakumar have a chance to win but saravan likely not win in madurai north. Madurai district deatials .
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X