மதுரையில் பரபரப்பு! திருப்பரங்குன்ற தீபம் விவகாரம்.. விபரீத முடிவை எடுத்த இளைஞர்! தீக்குளித்து பலி
மதுரை: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம் கடந்த சில நாட்களாகவே தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. இது தொடர்பாக இரு வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் இருக்கிறது. இதற்கிடையே திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றவில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்த இளைஞர், விபரீத முடிவை எடுத்துள்ளார். அங்குள்ள பெரியார் சிலை அருகே அவர் தீக்குளித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கார்த்திகை மாதம் தீபம் ஏற்றப்படும். அது வழக்கமாக அங்குள்ள உச்சி பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்படும். ஆனால், கார்த்திகை தீபத்தை மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என ராம ரவிக்குமார் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரைக் கிளை நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் மலை உச்சியில் தீபம் ஏற்ற ஆணையிட்டார். இருப்பினும், உச்சி பிள்ளையார் கோயிலுக்கு அருகிலேயே இந்தாண்டு தீபம் ஏற்றப்பட்டது. இந்த விவகாரத்தில் இப்போது இரு வழக்குகள் நிலுவையில் உள்ளது. முதலில் மலை உச்சியில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரதான வழக்கின் மேல்முறையீடு. இதை நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் விசாரிக்கிறார்கள்.
இதற்கிடையே மலை உச்சியில் தீபம் ஏற்றவில்லை என்பதால் மன உளைச்சலில் இருந்த இளைஞர் தவறான முடிவை எடுத்துள்ளார். மதுரை மாநகர் அவுட்போஸ்ட் பகுதியில் உள்ள பெரியார் சிலை அருகே போலீஸ் பூத்திற்குள் சென்று இளைஞர் உடலில் பெட்ரோல் ஊற்றித் தீக்குளித்து உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இது தொடர்பாக தல்லாகுளம் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறார்கள்..
முதற்கட்ட விசாரணையில் உயிரிழந்த நபர் மதுரை மாநகர் நரிமேடு மருதுபாண்டியர் தெரு பகுதியைச் சேர்ந்த பூர்ண சந்திரன் (40) என்பது தெரிய வந்தது. எம்பிஏ பட்டதாரியான இவர், மருந்து விற்பனை பிரதிநிதியாகவும் வேலை செய்து வந்துள்ளார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பரங்குன்றம் விவகாரத்தாலேயே இந்த முடிவை எடுத்தாக சொல்லி, அந்த இளைஞர் ஆடியோ ரெக்கார்டு செய்து நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டே இந்த விபரீத முடிவை எடுத்தாக சொல்லப்படுகிறது. இது குறித்து போலீசார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர்.
திமுக அரசின் மதவெறியால் தீபத்தூணிற்கு பதிலாகத் தீப்பிடித்து எரியும் தமிழர்கள்!
— Nainar Nagenthran (@NainarBJP) December 18, 2025
திருப்பரங்குன்ற தீபத்தூணில் கார்த்திகை தீபமேற்ற உயர்நீதிமன்றமே உத்தரவிட்ட பிறகும் கூட, தங்கள் அரசியல் காழ்ப்புணர்ச்சிக்காகத் திமுக அரசு அதை செயல்படுத்த மறுத்ததைக் கண்டித்து, மதுரை நரிமேடு பகுதியைச்… pic.twitter.com/LPgvRmdOuN
அவர் அங்குள்ள போலீஸ் பூத்திற்கு சென்று, உள்ளே பூட்டிக்கொண்டு தனது உடலில் பெட்ரோல் ஊற்றிக் கொண்டு தீக்குளித்ததாகக் கூறப்படுகிறது.. அலறல் சத்தத்தைக் கேட்ட அப்பகுதி மக்கள் தீயை அணைத்து இளைஞரைக் காப்பாற்ற முயன்றனர். மேலும், இது குறித்துத் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தீயை அணைத்து இளைஞர் சடலத்தை மீட்டனர். இளைஞரின் சடலம் அருகே உள்ள அரசு மருத்துவமனைக்குப் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
தற்கொலை என்பது எந்தவொரு பிரச்சினைக்கும் தீர்வு இல்லை.. தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் தோன்றினால் உடனடியாகச் சினேகா தற்கொலை தடுப்பு உதவி எண்: 044 -2464000 (24 hours), மாநில தற்கொலை தடுப்பு உதவி எண்: 104 (24 hours), ஐகால் (iCall Pychosocial) உதவி எண்e - 022-25521111 ( Mon - Sat, 8am - 10pm) எண்களுக்குத் தொடர்பு கொள்ளவும்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications