Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருப்பரங்குன்றம் தீப வழக்கில்.. பைபிள் வாசகத்தை பயன்படுத்திய நீதிபதிகள்.. சொன்னது என்ன?

Subscribe to Oneindia Tamil

மதுரை: மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன், இன்று திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பளித்தபோது பைபிள் வாசகத்தை குறிப்பிட்டு உள்ளனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயசந்திரன். கேகே ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

Thirupparankundram bjp

நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் உத்தரவு செல்லும் என்று அவர்கள் தீர்ப்பில் குறிப்பிட்டு உள்ளனர். நீதிபதி ஜி ஆர் சுவாமிநாதன் தீர்ப்பிற்கு எதிராக இரண்டு நீதிபதிகள் அமர்வில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்த மனுவில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.

பைபிள் வாசகம்

மதுரை உயர் நீதிமன்றக் கிளையின் நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன், இன்று திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பளித்தபோது, பைபிளில் இருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டினர்: "கடவுள் வெளிச்சம் உண்டாக்க வேண்டும் என்றார்.. அதனால் வெளிச்சம் உண்டாயிற்று".

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் இத்தீர்ப்பு வழங்கப்பட்டது. ஒரு தர்காவிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது குறித்த சர்ச்சையை இத்தீர்ப்பு கையாண்டது.

"God said Let there be light and there was light", என்ற வரிகளோடு இந்த தீர்ப்பு எழுதப்பட்டு உள்ளது. ஆதியாகமம் 1:3-இல் உள்ள இந்த புகழ்பெற்ற பைபிள் வசனம், கடவுள் வெளிச்சத்தை உருவாக்கினார் என்பதைச் சுட்டுகிறது. இது படைப்பு, நம்பிக்கை, தெய்வீக சக்தி ஆகியவற்றுக்கான குறியீடாகவும் அமைகிறது, என்று தீர்ப்பின் தொடக்கத்தில் கூறப்பட்டு உள்ளது.

தீர்ப்பில் இருப்பது என்ன?

இந்த தீர்ப்பில், இரு தரப்பினர் இடையே பிரச்னையை ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்பட்டு உள்ளது. சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும், இதனால் தீபம் ஏற்ற முடியாது என்று அரசு சொல்வது நகைப்பிற்கு உரியது.

ஒவ்வொரு கார்த்திகையின் போதும் தீபம் ஏற்ற வேண்டும். மலை உச்சியில் தீபம் ஏற்றும் போது கோவில் நிர்வாகம் பொதுமக்களை அனுமதிக்க கூடாது. திருப்பரங்குன்றத்தில் பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு அரசே காரணம். கோயிலுக்கு சொந்தமான இடத்தில் தீபம் ஏற்றுவதால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்பது அர்த்தமற்றது. பொது அமைதிக்கு ஏற்பட்ட பிரச்னைக்கு அரசே காரணம்., என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயசந்திரன். கேகே ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

என்ன வழக்கு?

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற தனி நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோவில் செயல் அலுவலர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கை கடந்த மாதம் இருநீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரணை செய்தது. அனைத்து மேல்முறையீடுகளும் நீதிபதிகள் ஜி ஜெயச்சந்திரன் மற்றும் நீதிபதி கே.கே. ராமகிருஷ்ணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் பட்டியலிடப்பட்டன.

மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங்

திருப்பரங்குன்றம் வழக்கில், மதுரை மாவட்ட அதிகாரிகள் மற்றும் காவல்துறை சார்பில் மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் நீதிமன்றத்தில் வாதங்களை முன்வைத்தார். அதில் .திருப்பரங்குன்றம் வழக்கில் சூழ்நிலை எவ்வளவு துரதிஷ்டமானது என்பதை கோர்ட் விரைவில் உணரும்.

நீதிபதி சுவாமிநாதன் விரைவில் அரசியலுக்குள் வருவார். நீதிபதி சுவாமிநாதன் விரைவில் தேர்தலில் நிற்பார். நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்தை பற்றி நான் பேசவிரும்பவில்லை. ஆனால் நீதிபதி சுவாமிநாதன் அரசியலமைப்புப்படி செயல்பட்டுள்ளாரா என்ற கேள்வி உள்ளது, என்று பரபரப்பு வாதம் வைத்தார்.

நீதிபதி சுவாமிநாதன்

முன்னதாக தனி நீதிபதி சுவாமிநாதனின் உத்தரவைச் சுட்டிக்காட்டிய மூத்த வழக்கறிஞர் விகாஸ் சிங் , விளக்கு ஏற்றுவதன் நோக்கம். ஆனால் அதை தீபத்தூண் மீதுதான் ஏற்ற வேண்டும் என்கிறார்கள். அங்கே ஏற்றிய வழக்கமே இல்லை.

தீபத்தூண் என்ற சொல் ரிட் மனுதாரர்களின் அசல் கோரிக்கையிலோ அல்லது முந்தைய வழக்குகளிலோ ஒருபோதும் இல்லை என சிங் வாதிட்டார். இந்தக் கருத்து நீதிமன்றத்தால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டது, வழக்கில் தொடர்புடைய தரப்பினரால் எழுப்பப்படவில்லை என்றார்.

தீபத்தூண் வார்த்தையே இல்லை

இந்த தூணுக்கு செல்லப்படும் இடத்திற்கு படிகள் வழியாக செல்ல வேண்டும். இந்த படிகள் இஸ்லாமிய சொத்துக்குரியவை. ஆனால் தனி நீதிபதி அதை கருத்தில் கொள்ளவில்லை. அருகிலுள்ள தர்காவின் உரிமைகளைப் பாதிக்காமல் விளக்கை ஏற்ற முடியுமா என்பதை உத்தரவு கருத்தில் கொள்ளவில்லை என்றும் வாதிட்டார்.

பொது ஒழுங்கை மதிப்பிடவும் பராமரிக்கவும் மாநிலமே சிறந்த அதிகாரம் கொண்ட அமைப்பு. அரசு தனது கடமையில் தவறினால், நீதிமன்றம் தலையிட்டு பொது ஒழுங்கைப் பாதுகாக்கலாம். நீதிபதி உத்தரவால் பொதுஒழுங்கு கெட்டுவிட்டது. அவரின் உத்தரவால் பொது அமைதிக்கு பதிலாக.. சூழ்நிலை மோசமாகி உள்ளது., என்று வாதம் வைத்தார்.

இதற்கு நீதிபதி ஜெயசந்திரன், நீங்கள் இதை கோர்ட்டில் கூறினார்களா? நீதிபதியிடம் இதை பற்றி கூறினீர்களா?, என்று கேட்டார். இதற்கு சிங், எங்களுடைய பல வாதங்கள் கருத்தில் கொள்ளப்படவில்லை.

விளக்கு ஏற்ற அனுமதி அளிக்கப்பட்டால், லட்சக்கணக்கானோர் அந்த குறுகிய படிகளைப் பயன்படுத்த முயற்சிப்பார்கள் என சிங் நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். இத்தகைய நிலைமை கடுமையான சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை உருவாக்கும். ஒரு குறிப்பிட்ட அனுமதி கூட, இயற்கையாகவே ஏராளமான பக்தர்களை மலைக்கு ஈர்க்கும் எனவும் அவர் வாதிட்டார்.

தனி நீதிபதி லட்சக்கணக்கான மக்களை மலைக்குச் செல்ல உத்தரவிடவில்லை என நீதிமன்றம் பதிலளித்தது. அந்த உத்தரவு, கோயில் நிர்வாகிகளை விளக்கு ஏற்றுமாறு மட்டுமே அறிவுறுத்தியதாக தெளிவுபடுத்தியது.

ஆனால், விளக்கு ஏற்றப்படுவதை ஒரு சைகையாகக் கருதி, நடைமுறையில் பக்தர்கள் பெரும் எண்ணிக்கையில் கூடுவார்கள் என சிங் மறுத்துரைத்தார். இதுவொரு பெரிய நடைமுறைச் சவால் என்றார் , இந்த நிலையில்தான் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜெயசந்திரன். கேகே ராமகிருஷ்ணன் உத்தரவு பிறப்பித்து உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+