கொரோனா சமயத்தில் சர்ச்சை டுவிட்.. ‛தேஷ்துரோகி’ பட நடிகர் கமல் ஆர்.கான் 2 ஆண்டுக்கு பின் கைது!
மும்பை: கொரோனா சமயத்தில் 2 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்ட சர்ச்சை டுவிட்டர் பதிவு தொடர்பான வழக்கில் துபாயில் இருந்து விமானத்தில் திரும்பிய இந்தி நடிகர் கமல் ஆர்.கானை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்தி திரைத்துறையை சேர்ந்தவர் கமல் ரஷித் கான். நடிகரான இவர் கேஆர்கே என அழைக்கப்பட்டு வருகிறார். இவர் பாலிவுட் திரைத்துறை, நடிகர்கள் பற்றி கருத்துகள் கூறி அடிக்கடி சர்ச்சையில் சிக்குவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
இவர் ‛தேஷ்துரோகி' என்ற படத்தில் நடித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பிரபலமானார். மேலும் இவர் யூடியூப் சேனல் நடத்தி வருகிறார்.

சர்ச்சை நடிகர்
இந்த யூடியூப் சேனலில் கமல் ரஷித் கான் திரைப்படங்களை விமர்சனம் செய்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். மேலும் சமூக வலைதளங்களிலும் திரைப்படம் பற்றியும், நடிகர்கள் குறித்தும் கருத்து தெரிவித்து வருகிறார். இவர் பிரதமர் நரேந்திர மோடி பற்றியும் கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார். அதாவது பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் கணக்கை அமெரிக்க வெள்ளை மாளிகை பின்பற்றுவதை நிறுத்தியது பற்றி கருத்து தெரிவித்து சர்ச்சையில் சிக்கினார்.

நடிகர்கள் பற்றி சர்ச்சை
இதற்கிடையே கடந்த 2020ம்ஆண்டு கொரோனா பரவிய சமயத்தில் மறைந்த நடிகர்கள் ரிஷி கபூர், இர்பான் ஆகியோர் பற்றி கமல் ரஷித் கான் சர்ச்சைக்குரிய வகையில் டுவிட்டரில் கருத்துகள் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பாக யுவ சேனா அமைப்பின் உறுப்பினர் ராகுல் கணல் என்பவர் மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மலட் பகுதி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் கமல் ரஷித் கான் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

லுக்அவுட் நோட்டீஸ்
அதன்படி கமல் ரஷித் கான் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் அவர் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு விமான நிலையங்களில் லுக்அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்நிலையில் தான் துபாயில் இருந்து விமானம் மூலம் கமல் ரஷித் கான் நேற்று இரவு மும்பைக்கு வந்தார்.

2 ஆண்டுக்கு பின் கைது
இதுபற்றி அறிந்த மலட் போலீசார் விமான நிலையத்தில் கமல் ரஷித் கானை கைது செய்தனர். 2020ம் ஆண்டு செய்த டுவிட்டர் பதிவால் அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கமல் ரஷித் கானை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications