மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா- தமிழர்கள் வாழும் தாராவியிலும் 9 பேருக்கு பாதிப்பு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இன்று மேலும் 431 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5649 ஆக உயர்ந்துள்ளது.

Recommended Video

    அதிகரிக்கும் கொரோனா... எப்படி இருக்கிறது மும்பையின் தாராவி?

    நாட்டில் கேரளாவில்தான் கொரோனாவின் தாக்கம் தொடக்கத்தில் அதிகமாக இருந்தது. பின்னர் மகாராஷ்டிராவில் மிக மோசமான பாதிப்பு இருந்து வருகிறது.

    431 new Coronavirus cases in Maharashtra.

    மகாராஷ்டிராவில் இன்று ஒரே நாளில் 431 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5649 ஆக அதிகரித்திருக்கிறது. அத்துடன் இன்று கொரோனாவுக்கு 18 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 269 ஆகும்

    மும்பையில் தமிழர்கள் அதிகம் வாழும் தாராவியில் மேலும் 9 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையும் 189 ஆகியுள்ளது. மகாராஷ்டிராவில் 789 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

    சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 10,000-த்தை தாண்டியது- ஒரே நாளில் 1,016 பேருக்கு நோய் தொற்று உறுதி சிங்கப்பூரில் கொரோனா பாதிப்பு 10,000-த்தை தாண்டியது- ஒரே நாளில் 1,016 பேருக்கு நோய் தொற்று உறுதி

    மகாராஷ்டிராவை தொடர்ந்து 2-வது இடத்தில் குஜராத் உள்ளது. இம்மாநிலத்தில் இன்று மேலும் 94 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையானது 2,272 ஆக அதிகரித்தது. டெல்லியில் 2156 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது.

    மத்திய பிரதேசத்தில் 1,587 ; ராஜஸ்தானில் 1868; தமிழகத்தில் 1629; உத்தரப்பிரதேசத்தில் 1337 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நாடு முழுவதும்.....

    covid19india.org புள்ளி விவரப்படி நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20, 990 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 654 ஆகவும் அதிகரித்துள்ளது.

    English summary
    431 new Coronavirus cases and 18 deaths have been reported today in Maharashtra.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X