ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்டு.. கொல்லப்பட்ட நபர்.. நண்பர்களே முதுகில் குத்திய சோகம்
மும்பை: ரூ.4 கோடி இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டதால் தனது சக நண்பர்களால் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் மகாராஷ்டிரா மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் வசித்து வந்தவர்தான் 46 வயதான அசோக் பலேராவ். இவர் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று சாலையோரத்தில் இறந்து கிடந்தார்.

இவர் இறந்ததையடுத்து அடையாளம் தெரியாத வாகனத்தின் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் ஓராண்டு ஆகியும் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.
இந்நிலையில், உயிரிழந்த அசோக் பலேராவின் சகோதரர் ஒருவர் காவல்நிலையத்திற்கு வந்து சில தகவல்களை கூறினார். இதனையடுத்து அசோக் பலேராவின் நண்பர்கள் ஆறு பேரும் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இது குறித்து காவல்துறையினர் விளக்கமளித்துள்ளனர். அதாவது, "எங்களுக்கு கடந்த செப்டம்பர் மாதம் 2ம் தேதியன்று கிடைத்த தகவலின் அடிப்படையில் அசோக் பலேராவின் உடலை சாலையோரத்தில் கைப்பற்றினோம். இவர் அதிகாலையில் நடைப்பயிற்சி செய்யும் பழக்கம் கொண்டவர். எனவே நடைப்பயிற்சியின்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்திருக்கலாம் என வழக்குப்பதிவு செய்தோம்.
இந்நிலையில் ஓராண்டு கழித்து அசோக் பலேராவின் சகோதரர் எங்களிடத்தில் வந்து தனது சகோதரரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி சந்தேக நபர்களின் பட்டியலை கொடுத்தார். இதனை அடிப்படையாக கொண்டு விசாரித்ததில் எங்களுக்கு பல அதிர்ச்சி தகவல்கள் தெரிய வந்தன. அதாவது, அசோக் பலேராவ் ரூ.4 கோடிக்கு இன்சூரன்ஸ் எடுத்திருந்தார். இந்த தொகையை எப்படியாக பெற வேண்டும் என்பதுதான் அசோக் பலேராவ் மற்றும் அவருடைய நண்பர்களின் நோக்கம். எனவே தன்னுடைய இன்சூரன்ஸை முறைகேடாக பெறுவதற்கு தன்னை போன்ற ஒருவரை கொலை செய்ய அசோக் பலேராவ் தனது நண்பர்களுடன் திட்டம் தீட்டினார்.
ஆனால் இவர்கள் எவ்வளவோ முயற்சித்தும் அசோக் பலேராவ் போல ஒருவரை கண்டு பிடிக்க முடியவில்லை. இதனையடுத்து திட்டத்தை கைவிடுவதாக அசோக் பலேராவ் கூறியுள்ளார். ஆனால் அசோக் பலேராவுக்கு தெரியாமல் அவரது நண்பர் 6 பேரும் மற்றொரு திட்டத்தை ரகசியமாக தீட்டியுள்ளனர். அதன்படி, இவர்களே அசோக் பலேராவை கொலை செய்துள்ளனர். பின்னர் தாங்கள்தான் அவரது உறவினர் எனக்கூறி காவல் நிலையத்தை அணுகி அதற்கான சான்றிதழை பெற்றுள்ளனர்.
இதனை வைத்து இன்சூரன்ஸ் நிறுவனத்தை அணுகி ரூ.4 கோடியை பெற்று அதனை பங்கிட்டுள்ளனர். அசோக் பலேராவின் சகோதரர் கொடுத்த பட்டியலில் உள்ள நபர்களின் வங்கி கணக்கை பரிசோதித்ததில் எங்களுக்கு இந்த உண்மை தெரிய வந்தது. இதனையடுத்து அவர்களை கைது செய்துள்ளோம்" என்று காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். தன்னுடைய இன்சூரன்ஸ் தொகைக்கு ஆசைப்பட்டு தன்னை ஒருவர் பலி கொடுத்துள்ள சம்பவம் மகாராஷ்டிராவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
கடலூரில் முகம் சிதைத்த நிலையில் கிடந்த இளம்பெண் சடலம்.. கொலையாளி யார்? போலீஸ் தீவிரம் -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
இந்தியாவை தாக்க பெரிய சதி.. பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்பில் இருந்த 9 பேர் கைது.. பகீர் பின்னணி -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக்












Click it and Unblock the Notifications