யாரு சாமி இது? ஆட்டோவையே நடைமேம்பாலத்தில் ஏற்றிய ஓட்டுநர்; மகாராஷ்டிராவில் நடந்த சம்பவம்
மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க ஆட்டோ ஓட்டுநர் தனது ஆட்டோவை நடை மேம்பாலத்தில் ஏற்றி இறக்கிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் வேகமாக பரப்பப்பட்டு வருகிறது.
Recommended Video
பால்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு பயணிகள் நடை மேம்பாலத்தில் இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

நெடுஞ்சாலையின் இடையே தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பதால் அதை கடக்க நீண்ட தூரம் சுற்ற வரவேண்டும். எனவே இதனை தவிர்க்க ஓட்டுநர் இந்த ஐடியோவை பின்பற்றியுள்ளார்.
இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் கணிசமானோர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். இந்த விபத்துகளுக்கு அடிப்படையாக இருப்பது போக்குவரத்து விதி மீறல்களே. இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை பயணிகள் நடை மேம்பாலத்தில் ஏற்றி இறக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.
மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தின் விரார் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விவரங்களை அறிய வீடியோவை ஆய்வு செய்து வருகிறோம் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர். வீடியோவில், ஆட்டோ ஓட்டுநர் நெடுஞ்சாலையை கடக்க முயன்று என்ன செய்வதென்று தெரியாமல் நின்றிருக்கிறார். பின்னர் பயணிகள் நடைமேடையில் தனது ஆட்டோவை ஏற்றத் தொடங்கியுள்ளார்.
ஆட்டோவை மேலே ஏற்றி அதேபோல கீழே இறக்கியுள்ளார். இது இதர பயணி ஒருவரால் செல்போனில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சாகசங்களை செய்வது போக்குவரத்து சட்டத்தை மீறுவதாகும் என்று உள்ளூர் காவல் அதிகாரி எச்சரித்திருக்கிறார். இந்த நடை மேம்பாலத்தில் பயணிகள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் படிக்கட்டுகள் இல்லாததே இது போன்ற சம்பவங்கள் நடைபெற காரணமாக இருப்பதாக உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் சாலை விபத்துக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கடந்த 2014ல் 3,931 பேர் சாலை விபத்துக்களில் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை 2021ல் 5,081 ஆக அதிகரித்துள்ளது. அதாவது 2014-2021 இடைப்பட்ட காலகட்டங்களில் விபத்து எண்ணிக்கை 29 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது. நடப்பாண்டின் முதல் 5 மாதங்களில் சாலை விபத்துக்கள் சுமார் 7 சதவிகிதம் வரை அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளன. இப்படியான விபத்துக்களுக்கு போக்குவரத்து விதி மீறல்கள்தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications