ஆன்லைன்ல சரக்கு ஆர்டர் பண்ணினேன்.. ஆனால் என்னை 'இப்படி' ஏமாத்திட்டாங்களே.. புலம்பும் பாலிவுட் நடிகை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மதுபானம் டெலிவரி செய்யும் ஆன்லைன் நிறுவனம் ஒன்று தன்னை ஏமாற்றிவிட்டதாக எனப் பிரபல பாலிவுட் நடிகை ஷபனா அஸ்மி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாலிவுட் உலகில் மூத்த நடிகை ஷபனா அஸ்மி. 70 வயதான அவர், லிவிங் லிக்விட்ஸ் என்ற தளத்தில் தான் ஆன்லைனில் மதுபானத்தை ஆர்டர் செய்ததாகவும் இருப்பினும் அவர்கள் மதுபானத்தை டெலிவரி செய்யாமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் ட்விட்டர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Actor Shabana Azmi Alleges Alcohol Delivery Platform Cheated Her

இது குறித்து ஷபனா அஸ்மி தனது ட்விட்டரில், "நான் லிவிங் லிக்விட்ஸ் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டேன். அவர்களிடம் நான் ஆர்டர் அளித்திருந்தேன். அதற்கான பணத்தையும் முன்கூட்டியே செலுத்திவிட்டேன். இருப்பினும் அவர்கள் மதுபானத்தை டெலிவரி செய்யவில்லை. எனது அழைப்புகளையும் எடுப்பதில்லை. ஜாக்கரதையாக இருங்கள்" என ட்வீட் செய்துள்ளார்.

மேலும், எந்த வங்கிக் கணக்கிற்குத் தான் பணம் அனுப்பியுள்ளேன் என்பதையும் அவர் தனது ட்வீட்டில் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் ஏமாற்றப்பட்ட தொகை மற்றும் போலீசாரிடம் புகார் அளித்த விவரங்களை அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.

பாலிவுட் பிரபலங்கள் ஆன்லைனில் ஏமாற்றப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஏற்கனவே, பாலிவுட் பிரபலங்களான அக்‌ஷய் கன்னா, நர்கிஸ் ஃபக்ரி மற்றும் கரண் சிங் குரோவர் ஆன்லைன் மோசடிகளில் தங்கள் பணத்தை இழந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+