• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

அழகு சிகிச்சைக்கு வந்த பெண்கள்... நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை

|
  பெண்களை நிர்வாண படம் எடுத்து ரசித்த டாக்டர் கைதாகி ஜாமீனில் விடுதலை- வீடியோ

  மும்பை: உடலை அழகு படுத்தும் சிகிச்சைக்கு வரும் பெண்களை நிர்வாணமாக படம் எடுத்து ரசித்துள்ளார் ஒரு டாக்டர். விபரம் அறிந்து செல்போனில் படம் எடுத்த மாடலை மிரட்டிய டாக்டர் மீது புகார் அளிக்கப்பட்டதை அடுத்து இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த பெண் டாக்டர் சில நாட்களிலேயே ஜாமீனில் வெளிவந்து விட்டார்.

  அந்தேரி பகுதியில் உள்ள லோகாண்ட்வாலா காம்ளக்ஸ் பகுதியில் டாக்டர் சிம்பிள் அகர் கிளினிக் உள்ளது. சரும அழகூட்டல், உடல் எடை குறைப்பு செய்யப்படுகிறது. இந்த கிளினீக்கிற்கு ஹேர் ரிமூவல் சிகிச்சைக்காக சென்ற பெண் மாடல் ஒருவர் தனது ஆடைகளை களைந்து விட்டு நிர்வாண நிலையில் படுக்க வைக்கப்பட்டார். சிகிச்சை நடந்து கொண்டிருந்த போது தலைக்கு மேலே ஒரு லைட் ஒளிர்வதை பார்த்த அவருக்கு சந்தேகம் வந்தது.

  Andheri doc arrested for voyeurism granted bail

  அது குறித்து சிகிச்சை அளித்த பெண்ணிடம் கேட்டதற்கு அது தீ பிடிப்பது பற்றி புகையை உணர்த்தும் கருவி என்று கூறி சமாளித்துள்ளார். ஆனாலும் அந்த பெண்ணிற்கு நம்பிக்கை ஏற்படவில்லை. உடனடியாக ஆடைகளை அணிந்து கொண்ட அந்த பெண், தனது செல்போன் மூலம் புகைப்படம் எடுத்துக்கொண்டு சென்று விட்டார்.

  இந்த விசயம் பற்றி அறிந்த அந்த கிளினிக்கின் டாக்டரிடம் இருந்து அந்த மாடலுக்கு போன் வந்தது. சிகிச்சைக்கு வந்த நீ ஏன் செல்போனில் படம் எடுத்தாய் என்று எடுத்த எடுப்பிலேயே மிரட்டும் தொனியில் பேசினார். நடந்த சம்பவங்களை வெளியில் சொன்னால் தொலைத்து விடுவேன் என்றும் எச்சரித்துள்ளார். இதனால் அந்த மாடலின் சந்தேகம் அதிகரித்தது.

  ஹலோ போலீஸ் ஸ்டேசனா... பொண்டாட்டியை கொன்னுட்டேன் ப்ளீஸ் என்னை கைது பண்ணுங்க

  கிளினிக்கில் தவறு நடக்கிறது என்பதை உறுதியாக நம்பிய அந்தப் பெண் இது பற்றி ஓஷிவாரா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். வழக்குப் பதிவு செய்த போலீசார், அகர் கிளினிக்கிற்கு சென்று சோதனை செய்தனர். அங்கு ரகசிய கேமரா பல பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். கிளினிக்கை நடத்திய டாக்டரை கைது செய்த போலீசார், கிளினிக்கை சீல் வைத்தனர். மும்பை அந்தேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அந்த டாக்டருக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. தன் மீதான புகார் பொய்யானது என்றும் இதிலிருந்து தான் மீண்டு வந்து உண்மையை நிரூபிப்பேன் என்றும் அந்த டாக்டர் கூறி வருகிறார்.

  பல மருத்துவர்கள் இதே போல புகாரில் சிக்கி கைதாகியுள்ளனர். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்தேரி பகுதியில் டாக்டர்கள் கிளப்பிற்கு சென்ற பெண் டாக்டர் மீது தொடக்கூடாத இடத்தில் தொட்டு நடனமாடிய ஆண் டாக்டர் மீது பெண் டாக்டர் அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

  இதே போல கடந்த ஆண்டு மயிலாப்பூரில் கிளினிக் நடத்தி வந்த 65 வயதான டாக்டர் சிவகுருநாதன் என்பவர் இளம் தம்பதியர் அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டார். நெஞ்சுவலிப்பதாக கூறி சிகிச்சைக்கு வந்த பெண்ணை செல்போன் மூலம் தவறாக படம் பிடித்ததை கணவன் கண்டுபிடித்து புகார் அளித்தார். அதன்பேரில் சிவகுருநாதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  Doctor charged with outraging modesty of a model threatening her.According to the police, in her complaint, the model alleged that when she had recently gone to Dr Simple Aher’s clinic for hair removal treatment, she had spotted a hidden camera.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more