"எச்சரிக்கிறேன்.." உண்ணாவிரதப் போராட்டத்தை மீண்டும் தொடங்கும் அண்ணா ஹசாரே? பரபர கடிதம்
மும்பை: சமூக சேவகரான அண்ணா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக எச்சரித்துள்ளார்.
கடந்த 2011ஆம் ஆண்டு வலுவான லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும் என்பதை வலியுறுத்தி ஊழலுக்கு எதிரான ஒரு மாபெரும் இயக்கத்தை முன்னெடுத்தவர் அண்ணா ஹசாரே.
அப்போது அவர் முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டம் அரசின் மீதான அழுத்தத்தை அதிகரித்தது. அதன் பின்னரே நாடாளுமன்றத்தில் லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டது.

அண்ணா ஹசாரே
இந்தச் சூழலில் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராக அண்ணா ஹசாரே போராட்டத்தைத் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளார். ஒயின் விற்பனை தொடர்பாக மகாராஷ்டிர அரசு வெளியிட்டுள்ள உத்தரவு உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாகக் கடந்த பிப.3ஆம் தேதியே மகாராஷ்டிர அரசுக்குக் கடிதம் எழுதியதாகவும் இருப்பினும், இதுவரை அதற்கு அரசு பதில் அளிக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மகாராஷ்டிரா
அதாவது மகாராஷ்டிராவில் சூப்பர் மார்க்கெட்கள் உள்ளிட்ட கடைகளில் ஒயின் வகை மதுவை விற்பனை செய்ய அம்மாநில அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அனுமதி அளித்திருந்தது. இந்த புதிய சட்டத்தின்படி 1,000 சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்ட சூப்பர் மார்க்கெட்களில் வைன் மது வகைகளை விற்பனை செய்யலாம். இங்கு விற்பனை செய்யப்படும் வைனில் குறைந்த அளவு ஆல்கஹால் இருக்க வேண்டும் என்றும் இதற்காக ஆண்டுக்கு ரூ 5000 ரூபாய் கட்டணம் செலுத்தி உரிமம் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்தது.

கடிதம்
மகாராஷ்டிர அரசு இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையென்றால் மகாராஷ்டிரா அரசுக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும் என்றும் அண்ணா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் மகாராஷ்டிர அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், "மாநில அரசிடம் இருந்து எந்த பதிலும் வராததால் இந்த நினைவூட்டல் கடிதத்தை அனுப்புகிறேன். சூப்பர் மார்க்கெட் மற்றும் மளிகைக் கடைகளில் மது விற்பனைக்கு அனுமதி வழங்க மாநில அரசு சமீபத்தில் முடிவு செய்தது. இந்த முடிவு அரசுக்குத் துரதிர்ஷ்டவசமானது, வரும் தலைமுறையினருக்கு இது ஆபத்தானது.

துரதிர்ஷ்டவசமானது
இந்த முடிவை எதிர்த்து, காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க முடிவு செய்துள்ளேன். இது தொடர்பாக முதல்வர் மற்றும் துணை முதல்வர் (அஜித் பவார்) ஆகியோருக்கு கடிதம் அனுப்பியிருந்தேன், ஆனால் இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இந்த உத்தரவை ரத்து செய்யவில்லை என்றால் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்க உள்ளேன். போதைக்கு அடிமையானவர்களை அதிலிருந்து குணமடைய வைப்பது தான் அரசின் கடமை. ஆனால், வருமானத்தைக் கருத்தில் கொண்டு அரசு இதுபோன்ற முடிவுகளை எடுத்துள்ளது துரதிர்ஷ்டவசமானது" என்று அவர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்,

பாஜக தாக்கு
அதேபோல அம்மாநில எதிர்க்கட்சியான பாஜகவும் இதைக் கடுமையாகச் சாடியுள்ளது. இது தொடர்பாக அம்மாநில எதிர்க்கட்சி தலைவர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூறுகையில். "சிவசேனா தலைமையிலான அரசு மகாராஷ்டிராவை மத்ய-ராஷ்டிராவாக (மதுபான மாநிலம்) மாற்றும் முயற்சி தான் இது. அவர்களுக்கு மதுபான தொழிலின் மீதான காதலால் தான் இந்த நடவடிக்கை எடுத்துள்ளது. முன்பு மதுவிலக்கு அமலில் இருந்த சந்திரபூர் மாவட்டத்திலும் இவர்கள் மதுவிலக்கை நீக்கியுள்ளனர். கலால் வரியையும் பாதியாகக் குறைத்துள்ளனர்" என்று சாடியிருந்தார்.
-
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications