நல்லவேல கொரோனா இல்ல .. கணவருக்கு நன்றி சொன்ன கரீனாகபூர்..!
மும்பை: கொரோனா பரிசோதனையில் தனக்கு தொற்று இல்லை என அறிக்கை வந்துள்ளது என அறிக்கை வெளியிட்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர், தனது குடும்பத்தினரை பார்த்துகொண்டதற்காக சகோதரி கரிஷ்மா கபூருக்கும் , பொறுமையாக இருந்ததற்காக சையிப் அலிகானுக்கும் நன்ரி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
சமீபத்தில் பிரபல பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹர் தனது இல்லத்தில் ப்ரைவேட் பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். இதில் பாலிவுட் நடிகை கரீனா கபூர், அம்ரிதா அரோரா உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டனர். இந்த பார்ட்டி நடந்த ஒரு வாரத்துக்குப் பிறகு கடந்த ஞாயிறு அன்று கரீனா கபூர், அம்ரிதா அரோரா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரீனா கபூர், அம்ரிதா அரோரா இருவருடனும் பார்ட்டியில் கலந்துகொண்ட 30க்கும் அதிகமான நபர்களைக் கண்டறிந்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள் அவர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொண்டனர். பார்ட்டியை ஏற்பாடு செய்திருந்த கரண் ஜோஹருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா நெகட்டிவ்
கரீனா கபூர், அம்ரிதா அரோரா இருவருக்குமே லேசான அறிகுறிகள் தென்பட்டதால் அவர்களைத் தங்களது வீட்டுக்குள்ளேயே தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்திய மும்பை மாநகராட்சி அதிகாரிகள், பாந்த்ரா பகுதியில் உள்ள அவர்களது அபார்ட்மெண்ட் வீடுகளுக்கு சீல் வைத்தனர். இந்நிலையில் அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டபோது ரிசல்ட் நெகட்டிவ் என வந்துள்ளதாக கரீனா கூறியுள்ளார்.

ஓமிக்ரான் இல்லை
முன்னதாக கரீனா கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அவருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உள்ளதா என கண்டறிய சோதனை மாதிரிகள் ஜீன் வரிசைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டது. அந்த சோதனையில் கரீனாகபூருக்கு சோதனை முடிவு நெகட்டிவ் என வந்துள்ள நிலையில் தற்போது கொரோனாவில் இருந்தும் மீண்டுள்ளார். இதனை தனது சமூக வலைதள கணக்கில் ஸ்டேட்டஸ்ஸாக வைத்துள்ளார் பாலிவுட் நடிகை கரீனா கபூர். இந்த தகவலை பாந்த்ரா முனிசிபல் கார்ப்பரேசனும் உறுதி செய்துள்ளது.

குழந்தைகளுக்கு முத்தம்
இந்நிலையில், தனது குழந்தைகளான தைமூர் மற்றும் ஜெஹ் ஆகியோரை 'முன்பைப் போல' முத்தமிடப் போவதாக குறிப்பிட்டுள்ள கரீனா, எனக்கு கோவிட்-19 சோதனை எதிர்மறையாக உள்ளது எனவும், மூலம் கடுமையான காலகட்டத்தில் தங்கள் குடும்பத்தினருக்கு பாதுகாப்பாய் இருந்த சகோதரி கரிஷ்மாவுக்கும், தோழி அம்ரிதா, எனது அன்பான நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர், என் பூனி, நைனா, மற்றும் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.

கணவருக்கு நன்றி
கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வந்த தான் தனது ரசிகர்கள் மற்றும் மருத்துவர் அவினாஷ் பாத்கே லேப்ஸ் ஆகியோருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாக கூறியுள்ள கரீனா கபூர், கடைசியாக குடும்பத்தில் இருந்து விலகி ஹோட்டல் அறையில் அடைத்து வைக்கப்பட்ட போதும் பொறுமையாக இருந்ததற்காக தனது அன்பான கணவர் சயிப் அலிகானுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், அனைவருக்கும் கிறிஸ்துமஸ், வாழ்த்துக்கள் பத்திரமாக இருக்கவும், ஓகே பாய் என் குழந்தைகளுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முத்தம் கொடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
-
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு?












Click it and Unblock the Notifications