புயல் அலர்ட் 1 வாரம் முன்பே வந்தது.. கப்பல் கேப்டன் மெத்தனமே விபத்துக்கு காரணம்.. என்ஜினீயர் புகார்
மும்பை: புயல் எச்சரிக்கை குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிப்பு வந்த போதிலும், கப்பலின் கேப்டன் மெத்தனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று தலைமை பொறியாளர் ரஹ்மான் ஷேக் கூறியுள்ளார்.
அரபிக்கடலில் உருவான ''டவ் தே' புயல் குஜராத் மாநில கடற்கரையில் கடந்த செய்வாய்க்கிழமை அதிகாலை கரையை கடந்தது.
முன்னதாக இந்த புயல் மகாராஷ்டிரா கடற்கரை பகுதிகள் வழியாக சென்றபோது மும்பையில் சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டி தீர்த்தது. கடலில் பல அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன.

கடலில் மூழ்கிய கப்பல்
அப்போது கடலில் எழுந்த பேரலைகள் காரணமாக நங்கூரம் உடைந்ததால் மும்பையின் தென் மேற்கு பகுதியில் 70 கி.மீ. தொலைவில் 261 ஊழியர்களுடன் எண்ணெய் எடுக்கும் பணியில் ஈடுபட்ட பி-305 என்ற கப்பல் கடலில் மூழ்கியது. அதில் இருந்தவர்கள் லைப் ஜாக்கெட் மூலம் கடலில் குதித்து தத்தளித்தனர். ஐ.என்.எஸ் கொச்சி போர்க்கப்பல், கடற்படைக்கு சொந்தமான மேலும் சில கப்பல்கள் ,விமானப்படை ஹெலிகாப்டர்கள் இதுவரை 188 பேரை உயிருடன் மீட்டுள்ளது.

37 உடல்கள் மீட்பு
இதுவரை 37 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மாயமான 38 பேரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. மீட்கப்பட்ட 188 பேர்களில் கப்பலின் தலைமை பொறியாளர் ரஹ்மான் ஷேக்கும் ஒருவர். மாயமான கப்பலின் கேப்டன் பால்விந்தர் சிங், தொழில்நுட்ப கண்காணிப்பாளர் ராஜேந்திர பிரதாப் ஆகியோரை தேடி வருகின்றனர். இந்த நிலையில் புயல் எச்சரிக்கை குறித்து ஒரு வாரத்துக்கு முன்பே அறிவிப்பு வந்த போதிலும், கப்பலின் கேப்டன் மெத்தனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று தலைமை பொறியாளர் ரஹ்மான் ஷேக் கூறியுள்ளார்.

கேப்டன் மெத்தனம்
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:- சூறாவளி தாக்கப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னரே எங்களுக்கு எச்சரிக்கை வந்தது. பல கப்பல்கள் அருகில் இருந்தன. நான் கேப்டன் பால்விந்தர் சிங்கிடம், நாம் துறைமுகத்திற்கு செல்வோம் என்று கூறினேன். ஆனால் அவர் காற்று 40 கி.மீ வேகத்தில்தான் வீசும். சூறாவளி ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்தில் மும்பையை கடந்து விடும் பிரச்சினையில்லை என்று கூறினார். ஆனால் எதிர்பார்ப்புக்கு மாறாக காற்று 100 கி.மீ வேகத்தில் வேகத்தில் வீசியது.

லைப் ராப்ட்ஸ் பயன்படுத்த முடியவில்லை
பேரலையாலும், கடும் காற்றினாலும் கப்பலின் 5 நங்கூரங்களும் உடைந்தன. கப்பல் தடுமாறியது. பெரிய துளை வழியாக தண்ணீர் வரத் தொடங்கியது. கப்பலில் இருந்த 16 லைப் ராப்ட்ஸை பயன்படுத்த முயற்சித்தோம். ஆனால் அவற்றில் இரண்டு மட்டுமே பயன்படுத்தும் நிலையில் ஏற்கனவே இருந்தது. மற்றவை ஓட்டையாக இருந்தது. இருந்த போதிலும் கடும் அலைகளால், காற்றால் லைப் ராப்ட்ஸ் பக்கம் பார்க்க கூட எங்களால் முடியவில்லை.

அல்லாஹ்வின் அருளால் பிழைத்தேன்
இதனை தொடர்ந்துதான் லைப் ஜாக்கெட் மூலம் கடலில் குதித்தோம். நீரில் அதிக நேரம் இருந்ததாலும், பீதி மற்றும் அதிர்ச்சி காரணமாகவும் பலர் இறந்து விட்டனர். எனக்கும் மரணம் வருவதை அருகில் கண்டேன், ஆனால் அல்லாஹ்வின் அருளால் காப்பாற்றப்பட்டேன்" என்று தலைமை பொறியாளர் ரஹ்மான் ஷேக் தெரிவித்தார். ரஹ்மான் ஷேக் தற்போது முழங்கால் காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
அமெரிக்காவை அசரடித்த அம்பானி.. ரூ.27 லட்சம் கோடி முதலீடு செய்யும் ரிலையன்ஸ்.. டிரம்ப் அறிவிப்பு -
எங்க கொண்டு போய் விட்டுடுச்சி பாருங்க.. கேஸ் தட்டுப்பாட்டால், ஸ்விக்கி, ஜொமோட்டோ டெலிவரி குறைந்தது! -
7 பொதுத்தொகுதி + 2 தனித்தொகுதி.. அதிமுக கூட்டணியில் டிடிவிக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் இதுதான்! -
அமெரிக்கா இனி பிக்பாஸ் இல்லை.. நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. ஐக்கிய அரபு சகாப்தமும் வீழ்ந்தது! -
பிரேமலதாவிற்கு திமுகவின் அடுத்த ‘சர்ப்ரைஸ்'.. தேமுதிகவிற்கு தாராளம் காட்டும் ஸ்டாலின்.. காங்கிரஸ்க்கு அடி -
3 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய்யை வாங்கி குவித்த இந்திய நிறுவனங்கள்! ரஷ்யாவுக்கு கொட்டும் பண மழை! -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
கடலில் இறக்கப்பட்ட கண்ணி வெடி! எக்குத்தப்பாய் வந்து சிக்கிய அமெரிக்கா! வால் ஸ்ட்ரீட் ஜர்னல் வார்னிங் -
ஒருவேளை உண்மையா இருக்குமோ.. என்டிஏ கூட்டணியில் விஜய்! மாஜி அமைச்சர் கடம்பூர் ராஜூ சொன்ன வார்த்தை! -
துணை முதல்வர் எல்லாம் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் வேலை.. 2.5 வருஷம் முதல்வர் பதவி.. பாஜகவிடம் விஜய் டிமாண்ட் -
தமிழகத்தில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் ஸ்டாலின்! 2-வது இடம் யாருக்கு? வெளியான புதிய கருத்துக்கணிப்பு -
சிறகடிக்க ஆசை: முத்து மீனாவுக்கு நடந்த நல்ல விஷயம்! விஜயாவுக்கு இனி தான் பிரச்சனை! ரோகிணியின் அடுத்த பிளான்












Click it and Unblock the Notifications