மும்பை மேயர் பதவிக்கு குறி.. சோனு சூட் அல்லது மிலிந்த்தை முன்னிறுத்த காங்கிரஸ் கட்சி திட்டமா?
மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில் மேயர் வேட்பாளராக நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அல்லது மிலிந்த் சோமன் அல்லது சோனு சூட் ஆகியோரில் ஒருவரை முன்னிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட பட்டியலில் இவர்கள் மூவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.
மகாராஷ்டிராவில் ஆட்சியில் உள்ள சிவசேனாவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணியில் இருக்கிறது. இந்த நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தல் காங்கிரஸ் தனித்து போட்டியிடுமா அல்லது சிவசேனாவுடன் கூட்டணியை தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தல்கள் அடுத்த வருடம் நடக்க உள்ளன. ஆனாலும் இப்போதே அங்கு இந்த தேர்தல் தொடர்பான ஆலோசனைகள் நடக்க தொடங்கிவிட்டன.
மும்பை மாநகராட்சியில் 227 இடங்கள் உள்ளன. இங்கு பெரும்பான்மை பெற 115 இடங்கள் தேவை. தற்போது மேயர் பதவியை கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் சிவசேனா தக்க வைத்துள்ளது.

எப்படி
இந்த நிலையில் மும்பை மாநகராட்சி தேர்தலில் புதியவர்களை, பிரபலமானவர்களை வேட்பாளராக முன்னிறுத்த காங்கிரஸ் ஆலோசனை செய்து வருகிறது முன்னாள் மகாராஷ்டிரா முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக்கின் நடிகர் ரித்தேஷ் தேஷ்முக் அல்லது நடிகர் மிலிந்த் சோமன் அல்லது நடடிகர் சோனு சூட் ஆகியோரில் ஒருவரை மகன் மேயர் வேட்பாளராக முன்னிறுத்துவது குறித்து காங்கிரஸ் கட்சி ஆலோசனை செய்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் திட்ட பட்டியலில் இவர்கள் மூவரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி
இந்த திட்ட அறிக்கை காங்கிரஸ் கட்சியின் மும்பை மாநகர செயலாளர் கணேஷ் யாதவ் மூலம் உருவாக்கப்பட்டது ஆகும். இதை மாநில காங்கிரஸ் கட்சி முன் விரைவில் அவர் சமர்பிக்க உள்ளார். அதன்பின் இந்த பட்டியலில் இருந்து ஒருவரின் தேர்வு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும். சமயங்களில் மூன்று பேரின் பெயரும் மேயர் வேட்பாளராக தேர்வு செய்யப்படாமல் நிராகரிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது. இன்னும் இதில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை.

பேட்டி
இது தொடர்பாக கணேஷ் யாதவ் அளித்துள்ள பேட்டியில், மாநகராட்சி தேர்தலில் காங்கிரஸ் இப்போதில் இருந்தே கவனம் செலுத்த வேண்டும். மக்கள் மத்தியில் நல்ல பிரபலமாக இருக்கும் நபரை தேர்தலில் முன்னிறுத்த வேண்டும். முக்கியமாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களை முன்னுறுத்த வேண்டும். சமூக சேவகர்கள், இளைஞர்கள், பிரபலங்கள் ஆகியோருக்கு நாம் தேர்தலில் வாய்ப்பு கொடுக்க வேண்டும்.

சிவசேனா காங்கிரஸ் கூட்டணி
அதோடு சிவசேனாவுடன் மேயர் தேர்தலிலும் கூட்டணி தொடருமா என்று காங்கிரஸ் முடிவு செய்ய வேண்டும். சிவசேனாவுடன் கூட்டணி குறித்து இப்போதே காங்கிரஸ் முடிவு எடுக்க வேண்டும். அப்போதுதான் மக்கள் மத்தியில் நம்முடைய நிலைப்பாட்டை, கொள்கைகளை கொண்டு செயல் முடியும். மகாராஷ்டிராவில் மீண்டும் காங்கிரசை வலுப்படுத்த உள்ளாட்சி, நகராட்சி, மாநகராட்சி தேர்தல்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இவர் கொடுத்துள்ள லிஸ்ட் காரணமாக காங்கிரசின் மும்பை மேயர் வேட்பாளர் யார் என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.












Click it and Unblock the Notifications