மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மகாராஷ்டிரா:உத்தவ் தாக்கரே அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் அதிரடி உத்தரவு

Google Oneindia Tamil News

மும்பை: மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கிய நிலையில், உத்தவ் தாக்கரே அரசு நாளை மாலை 5 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று அம்மாநில ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார்.

மகாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா- தேசியவாத காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி அரசு நடைபெற்று வருகிறது. முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அவரது சிவசேனா கட்சியின் 40-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்கள் போர்க்கொடி தூக்கினர். இதனால் உத்தவ் தாக்கரே அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு ஜூன் 30-ல் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவில்லை: ஆளுநர் மாளிகை மகாராஷ்டிரா: உத்தவ் தாக்கரே அரசு ஜூன் 30-ல் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடவில்லை: ஆளுநர் மாளிகை

எம்.எல்.ஏக்க: போர்க்கொடி

எம்.எல்.ஏக்க: போர்க்கொடி

முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக கலகக் குரல் எழுப்பிய எம்.எல்.ஏக்கள் முதலில் பாஜக ஆளும் குஜராத் மாநிலம் சூரத் சென்றனர். இதனைத் தொடர்ந்து பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான அஸ்ஸாமின் குவஹாத்தியில் அனைவரும் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில்போர்க்கொடி தூக்கிய 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய முதல்வர் உத்தவ் தாக்கரே நடவடிக்கை மேற்கொண்டார்.

உச்சநீதிமன்றம் தடை

உச்சநீதிமன்றம் தடை

தங்களை தகுதி நீக்கம் செய்வதை எதிர்த்து 16 எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 16 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ய இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. அதேநெரத்தில் அதிருப்தி எம்.எல்.ஏக்களுக்கு பல்வேறு வகைகளில் சிவசேனா கடும் மிரட்டல் விடுத்தது.

பட்னாவிஸ் டெல்லி டூ மும்பை

பட்னாவிஸ் டெல்லி டூ மும்பை

இதனிடையே மகாராஷ்டிரா அரசியல் நிலவரம் தொடர்பாக அவசர பயணமாக எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் டெல்லி சென்றார். டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் ஆலோசனை நடத்திய பின்னர் உடனே மும்பை திரும்பிய பட்னாவிஸ், ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரியை நேற்று இரவு சந்தித்தார். கொரோனா தொற்று பாதிப்பால் சிகிச்சை பெற்று தற்போதுதான் ஆளுநர் கோஷ்யாரி குணமடைந்தார். அப்போது உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக சிவசேனா எம்.எல்.ஏக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். ஆகையால் உத்தவ் தாக்கரே அரசு பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிட வேண்டும் என்று பட்னாவிஸ் வலியுறுத்தினார்.

பெரும்பான்மை விவகாரம்

பெரும்பான்மை விவகாரம்

இதையடுத்து நேற்று பின்னிரவு, மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தை ஜூன் 30-ந் தேதி காலை 11.30 மணிக்கு கூட்டுவதற்கு ஆளுநர் அழைப்பு விடுத்தார்; உத்தவ் தாக்கரே அரசு தமது பெரும்பான்மையை நிரூபிக்கவும் ஆளுநர் கோஷ்யாரி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார் என தகவல்கள் பரவின. ஆளுநரின் ஜூன் 29-ந் தேதியிட்ட கடிதமும் சமூக வலைதளங்களில் பரவியது. ஆனால் உடனடியாக மகாராஷ்டிரா ஆளுநர் மாளிகை இதனை திட்டவட்டமாக மறுத்தது.

நாளை மாலை வரை கெடு

நாளை மாலை வரை கெடு

இந்நிலையில் நாளை மாலை 5 மணிக்குள் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே அரசு தமது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி உத்தரவிட்டுள்ளார். இதற்காக நாளை காலை மகாராஷ்டிரா சட்டசபையின் சிறப்புக் கூட்டம் நடைபெற உள்ளது.

English summary
Maharashtra Governor Bhagat Singh Koshyari has asked Uddhav Thackeray to prove majority on the floor of the House at 5 pm tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X