• search
மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

”பிரதமர் அலுவலகமும் பாஜகவும் என் பின்னால் நிற்கின்றன” நம்பிக்கையாக இருந்த நுபுர் ஷர்மா - ஆனால்..?

Google Oneindia Tamil News

மும்பை: நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் ஷர்மா, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், பாஜக தன் பின்னால் நிற்பதாக கடந்த 31 ஆம் தேதி பேட்டியளித்து இருப்பது வைரலாகி வருகிறது.

சர்ச்சைக்குரிய பேச்சுக்களால் புகழ்பெற்ற பாஜக செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா, அண்மையில் தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

 அதிர்ச்சியில் பொதுமக்கள்! ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ஸ்ட்ரைக்!அரசு முக்கிய ஆக்ஷன் அதிர்ச்சியில் பொதுமக்கள்! ரேஷன் கடை ஊழியர்கள் இன்று முதல் 3 நாட்களுக்கு ஸ்ட்ரைக்!அரசு முக்கிய ஆக்ஷன்

அதில் பேசிய நுபுர் ஷர்மா இறைத்தூதரான நபிகள் நாயகம் குறித்து அவதூறாக பேசினார். இதனை பாஜக நிர்வாகி நவீன் ஜிண்டால் ட்விட்டரில் பகிர்ந்தார்.

மும்பை போலீஸ்

மும்பை போலீஸ்

இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் மும்பையில் நுபுர் ஷர்மா மீது 2 பிரிவுகளின் போலீசார் வழக்குகள் பதிவு செய்து உள்ளனர். இந்த நிலையில் நுபுர் ஷர்மாவிடம் விசாரணை நடத்த மும்பை போலீசார் முடிவு செய்து இருக்கின்றனர். இதுகுறித்து மும்பை காவல் ஆணையர் சஞ்சய் பாண்டே தெரிவித்துள்ளதாவது, "நுபுர் ஷர்மா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ள நிலையில், அவரை விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்ப உள்ளோம். அவர் அளிக்கும் விளக்கத்தை பதிவு செய்வோம்." என்றார்.

கலவரம்

கலவரம்

இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நுபுர் ஷர்மாவின் பேச்சை கண்டித்தும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கடையடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அங்கு இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் புகழ்பெற்ற பராத்தே என்ற சந்தையில் கடைகளை அடைக்க மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

போலீஸ் எச்சரிக்கை

போலீஸ் எச்சரிக்கை

இதனால் இரு பிரிவினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் வெடித்தது. இது தொடர்பாக 1,500 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. ஏராளமானோரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களின் வீடுகள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்தனர்.

Recommended Video

  Nupur Sharma Comment On Muhammad | முகமது நபிகள் பற்றி நுபுர் சர்மா.. என்ன நடக்கிறது? | *Politics
  அரபு நாடுகள்

  அரபு நாடுகள்

  இந்த நிலையில் நுபுர் ஷர்மாவின் சர்ச்சைக்குறிய பேச்சு அரபு நாடுகளிலும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி கொந்தளிப்பை ஏற்படுத்தியது. குவைத், கத்தார், ஓமன் ஆகிய நாட்டு அரசுகள் இந்தியாவில் நடக்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்தும், பாஜக பிரமுகரின் பேச்சுக்கும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தனர். அரபு நாட்டு மக்கள் ட்விட்டரில் #Boycott India என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்து வந்தனர்.

  பாஜக நடவடிக்கை

  பாஜக நடவடிக்கை

  இந்த நிலையில் பாஜக தேசிய செயலாளர் அருண் சிங் வெளியிட்ட அறிக்கையில், மத அடிப்படையில் இழிவுபடுத்துவது பாஜகவின் கொள்கைகளுக்கு எதிரானது என்றும், தங்கள் கட்சி அனைத்து மதங்களையும் மதிக்கிறது எனவும் கூறினார். இதனை தொடர்ந்து சர்ச்சைக்குறிய கருத்தை தெரிவித்த நுபுர் ஷர்மா கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளார். அக்கட்சியை சேர்ந்த நவீன் குமார் ஜிண்டால் ஆகியோர் கட்சியிலிருந்தே நீக்கப்பட்டு உள்ளனர்.

  நுபுர் ஷர்மாவின் நம்பிக்கை

  நுபுர் ஷர்மாவின் நம்பிக்கை

  ஆனால், நுபுர் ஷர்மா தன் மீது எந்த நடவடிக்கையையும் கட்சித் தலைமை எடுக்காது என்ற நம்பிக்கையிலேயே இருந்திருப்பது அவர் கடந்த வாரம் அளித்த பேட்டியின் வாயிலாக தெரியவந்துள்ளது. யூடியூப் சேனல் ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், தனது பேச்சைத் தொடர்ந்து மிரட்டல்கள் வந்ததாகவும், ஆனால் பயப்பட வேண்டாம் என்று கூறி, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், பாஜக தலைமை என் பின்னால் நிற்கின்றன. மகாராஷ்டிரா முன்னாள் முதலமைச்சர் எனக்கு தொடர்புகொண்டு ஆதரவு தெரிவித்தார். எனது பாதுகாப்பு குறித்து அவர்கள் அக்கறை காட்டினார்கள். இவ்வாறு அவர் அந்த பேட்டியில் தெரிவித்தார். இந்த பேட்டி வெளியான சில நாட்களிலேயே அவர் மீது கட்சித் தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது. அரபு நாடுகளின் அழுத்தம் காரணமாகத்தான் இதுபோன்ற நடவடிக்கையை பாஜக எடுத்திருக்கிறது என்பதை இது சுட்டிக் காட்டுகிறது என்று எதிர்க்கட்சியினர் விமர்சிக்கின்றனர். அதேநேரம், நுபுர் பாதுகாப்பு விஷயத்தில்தான் மத்திய அரசு உறுதிகாட்டியதே தவிர சர்ச்சை கருத்துக்காக ஆதரவு காட்டவில்லை என்கிறார்கள் பாஜக தரப்பினர்.

  English summary
  PM office, HMO, BJP head are rallying behind me and concerned about me - Nupur sharma
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X