மும்பை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

போலி என்கவுண்டர் வழக்கு: பல்டியடித்த சாட்சியங்களை விட்டுவிடாதீர்கள்- சுப்ரீம் கோர்ட்டில் சிபிஐ வாதம்

Google Oneindia Tamil News

மும்பை: சொராபுதீன் ஷேக் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் மீதான போலி என்கவுண்டர் வழக்கு மற்றும் கவுசர் பீ மீதான பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை வழக்கு ஆகியவற்றில் இறுதி வாதங்களை சிபிஐ இன்று எடுத்துவைத்தது. சாட்சிகள் பல்டியடித்ததை வைத்து குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்ய கூடாது என்று சிபிஐ வழக்கறிஞர் வாதிட்டார்.

2005 நவம்பர் 25ம் தேதி, குஜராத்தை சேர்ந்த சொராபுதீன் ஷேக் அவரது மனைவி கவுசர் பீ மற்றும் துளசிராம் பிரஜாபதி ஆகியோர் குஜராத் தீவிரவாத தடுப்பு படை போலீசாரால், மகாராஷ்டிராவில் இருந்து கடத்தப்பட்டனர்.

Sohrabuddin case: CBI to open arguments on Monday

2005ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி துளசிராம் ராஜஸ்தான் போலீசாரால் கைது செய்யப்பட்டு உதய்பூர் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டார். 2005ஆம் ஆண்டு நவம்பர் 26ம் தேதி அகமதாபாத் மற்றும் காந்தி நகர் நடுவே சொராபுதீன் ஷேக் போலீசாரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். இது போலி என்கவுண்டர் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால், தீவிரவாத எதிர்ப்புப் படையினர் லஷ்கர் இ தொய்பா தீவிரவாத அமைப்புடன் தொடர்பு உள்ளவர் என்றும், மூத்த அரசியல் தலைவர்களை கொலை செய்வதற்கு அவர் திட்டமிட்டிருந்தார் என்றும், என்கவுண்டரில்தான் கொல்லப்பட்டார் என்றும் தெரிவித்தனர். அப்போது, குஜராத் மாநில முதல்வராக இருந்தவர் தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி. உள்துறை அமைச்சராக பதவி வகித்தவர் தற்போதைய பாஜக தலைவரான அமித்ஷா.

இதனிடையே 2005ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பனஸ்கந்தா மாவட்டத்தில் கவுசர் பீ பலாத்காரம் செய்யப்பட்டு கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டார். 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் தேதி அம்ரேலி மாவட்டத்தில் துளசிராம் போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். குஜராத் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி விட்டு ராஜஸ்தானுக்கு அழைத்துச் சென்றபோது காவல்துறை வாகனத்தில் இருந்து தப்பி ஓடியதாகவும், அப்போது கொல்லப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

ஆனால் இவை அனைத்துமே திட்டமிட்ட செயல்கள் எனக் கூறி வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. குஜராத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணை மும்பை மாற்றப்பட்டது.

2014ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி இந்த வழக்குகளை விசாரித்து வந்த சிபிஐ சிறப்பு நீதிபதி லோயா மர்மமான முறையில் உயிரிழந்தார். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாக கூறப்பட்டாலும் விஷம் கொடுத்து கொலை செய்யப்பட்டதாக கூறி மகாராஷ்டிரா உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு நடைபெற்று வருகிறது. 2014ஆம் ஆண்டு டிசம்பர் 30-ஆம் தேதி இந்த வழக்கில் இருந்து அமித்ஷா விடுவிக்கப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணை மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. சொராபுதீன் ஷேக் என்கவுண்டர் வழக்குகில் தொடர்பு உள்ளவர் என்று சிபிஐ விசாரணை அதிகாரி அமிதாப் தாகூர் சிபிஐ நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார். கட்டுமான நிறுவன அதிபர்கள் பட்டியல் சகோதரர்களிடம் அமித்ஷா 70 லட்சம் லஞ்சம் வாங்கினார் ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் அவர் பலன் பெற்றார் என்று அவர் தெரிவித்தார்.

இதேபோல துளசிராம் பிரஜாபதி போலி என்கவுண்டர் வழக்கில் முக்கியமான ஒரு சதிகாரர் என்று 2006ம் ஆண்டு இந்த வழக்கை விசாரித்த சிபிஐ விசாரணை அதிகாரி சந்தீப் தம்காட்ஜ், தெரிவித்திருந்தார்.

இன்று சிபிஐ தனது இறுதி வாதத்தை எடுத்து வைத்ததுசிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.ஜே.ஷர்மா முன்னிலையில், சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.பி.ராஜு வாதத்தை முன் வைத்தார். அவர் கூறுகையில், முக்கியமான பல சாட்சிகள் பிறழ்சாட்சிகளாகியது துரதிருஷ்டவசமானது. சிபிஐயிடமும், மாஜிஸ்திரேட் நீதிமன்றங்களிலும், கொடுத்த வாக்குமூலத்திற்கு முரணமாக அவர்கள் சாட்சியளித்துள்ளனர்.

இதை வைத்து, குற்றம்சாட்டப்பட்டவர்களை விடுவித்துவிட கூடாது. உச்ச நீதிமன்றம் இதற்கு முன்பாக பல வழக்குகளில், பிறழ் சாட்சியங்கள் ஏற்கனவே கூறிய வாக்குமூலத்தின் தன்மையை பார்த்து கருத்தில் எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. எனவே, பிறழ்சாட்சியங்களின் முழு, சாட்சியத்தையும், நீதிமன்றம் புறக்கணித்துவிட கூடாது. அதிலும் குறிப்பாக, சிபிஐக்கு நதுபா ஜடேஜா மற்றும் குர்தயால் சிங் ஆகியோர் வழங்கிய சாட்சியங்களை இந்த கண்ணோட்டத்தில்தான் பார்க்க வேண்டும். அவர்கள் சாட்சியம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றது. இவ்வாறு ராஜு வாதிட்டார்.

சிபிஐ வாதம், செவ்வாய்க்கிழமையும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

English summary
The Central Bureau of Investigation (CBI) on Monday will open final arguments in the two reported fake encounters of Sohrabuddin Shaikh and Tulsiram Prajapati and the rape and murder of Kausar Bi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X