நள்ளிரவில் 'திக்திக்..'பின்னால் இருந்து பாய்ந்த சிறுத்தை..ஸ்டிக்கால் விரட்டி அடித்த துணிச்சல் பாட்டி
மும்பை: மகாராஷ்டிர தலைநகர் கோரேகான் பகுதியில் வெறும் வாக்கிங் ஸ்டிக்கை கொண்டு மூதாட்டி ஒருவர் சிறுத்தையை விரட்டும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
Recommended Video
கடந்த சில ஆண்டுகளாகவே மனிதர்களின் ஆக்கிரமிப்பு காரணமாகக் காட்டுப்பகுதி தொடர்ந்து சுருங்கி வருகிறது. இதன் காரணமாக மனிதர்களுக்கும் காட்டு விலங்குகளுக்கும் இடையேயான மோதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
புலி, சிறுத்ததை போன்ற விலங்குகள் மனிதர்களைக் குறி வைத்துத் தாக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்போது மும்பையில் அதுபோல நடைபெற்ற தாக்குதல் ஒன்றின் வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

நள்ளிரவில் திக்திக்
மகாராஷ்டிர தலைநகர் மும்பையில் உள்ள ஆரே பகுதியில் வசித்து வருபவர் நிர்மலா தேவி சிங். 55 வயதான இவர், இரவு நேரத்தில் தனது வீட்டிற்கு வெளியே வந்துள்ளார். அப்போது அங்குச் சிறுத்தை ஒன்று இருந்துள்ளது. இருப்பினும், நிர்மலா தேவி சிங் அந்த சிறுத்தையைக் கவனிக்கவில்லை. வாக்கிங் ஸ்டிக் உடன் மெல்ல நடந்து வந்த நிர்மலா தேவி சிங், அங்கு அமர்ந்துள்ளார். இதையெல்லாம் மிக அமைதியாக நோட்டமிட்டது. அந்த பெண் அமர்ந்தவுடன் சிறுத்தை திடீரென அவர் மீது பாய்ந்து தாக்க முயன்றது.

வாக்கிங் ஸ்டிக்
திடீர் தாக்குதலால், அந்த பெண் முதலில் சற்று தடுமாறினார். அந்த சிறுத்தை பெண் மீது பாய்ந்து கீழே தள்ளிவிடவும் முயன்றது. இருப்பினும், உடனடியாக சுதாரித்துக் கொண்ட அந்த பெண் தனது கையிலிருந்த வாக்கிங் ஸ்டிக்கை கொண்டே சிறுத்தையை அடித்து விரட்டியுள்ளார். மேலும், அந்த பெண் உதவி கேட்டுச் சத்தமிடவே, அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு வந்தனர். இதனால் சிறுத்தை அங்கிருந்து ஓடியது. சிறுத்தை தாக்குதலால் அந்த பெண்ணுக்குச் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

வைரல் வீடியோ
இது தொடர்பான வீடியோ வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. வெறும் வாக்கிங் ஸ்டிக் உடன் துணிச்சலாகச் சிறுத்தையை விரட்டிய அந்த பெண்ணை பலரும் பாராட்டி வருகின்றனர். அதேநேரம் ஆரே காலணியில் கடந்த சில மாதங்களாகவே சிறுத்தை நடமாட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு வசிக்கும் பொது மக்களைச் சிறுத்தை தாக்கும் சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து வருவதால் குடியிருப்பு வாசிகள் கடும் அச்சத்தில் உள்ளனர்.

தாக்குதல்
முன்னதாக 2 நாட்களுக்கு முன் இதே ஆரே பகுதியில் 4 வயது சிறுவன் ஒருவனைச் சிறுத்தை தாக்கியது. வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த அந்த சிறுவனைத் தாக்கி, சிறுத்தை இழுத்த செல்ல முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து சிறுவனை மீட்டதாகக் கூறப்படுகிறது. இப்படி சிறுத்தை தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் இந்த விவகாரத்தில் வனத்துறையினர் உடனடியாக தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை அதிகரித்துள்ளது.

ஆரே காட்டுப்பகுதி
மும்பையில் தற்போது இருக்கும் ஒரே காட்டுப்பகுதியாக ஆரே உள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஆரே காட்டுப் பகுதியில் இருக்கும் மரங்களை வெட்டிவிட்டு அங்கு, மெட்ரோ நிலைய கார் நிறுத்தும் இடத்தை கட்ட அப்போதைய மராட்டிய பாஜக அரசு முடிவு செய்தது. இருப்பினும், இதற்கு எதிர்ப்புகள் அதிகரித்து போராட்டங்கள் அதிகரிக்கவே இந்த முடிவு கைவிடப்பட்டது.












Click it and Unblock the Notifications