• search
நாகர்கோவில் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எதையெல்லாமோ காட்டி எங்களை சீரழித்தான்.. மோசம் போன பெண்கள் கதறல்.. கொஞ்சம் கூட பதறாத காசி!

நாகர்கோயில் காசியை 3 நாள் விசாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
Google Oneindia Tamil News

நாகர்கோவில்: "எதையெல்லாமோ காட்டி எங்களை சீரழித்தான்" என்று புலம்புகிறார்கள் நாகர்கோயில் காசியால் ஏமாற்றப்பட்ட பெண்கள்.. காசியுடன் அரசியல் பிரமுகர்கள், விஐபிக்கள் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக கூறப்படுகிறது.. காம கொடூரன் காசியை இந்த 3 நாளில் போலீசார் விசாரிக்க போகிறார்களாம்.. அதனால் காசியுடன் நெருக்கத்தில் இருந்த அரசியல் புள்ளிகளுக்கு அடிவயிற்றில் கலக்கம் ஏற்பட்டுள்ளதாம்.

Recommended Video

  nagercoil court kasi crime Archives | கோர்ட் வளாகத்தில் ஹார்ட் சிக்னல்... கொஞ்சம் கூட பதறாத கா

  நாகர்கோயில் காசி படித்து முடித்துவிட்டு தன்னுடைய அப்பாவின் கோழிப்பண்ணையை கவனித்து வந்தார்.. சுஜி என்ற செல்ல பெயரும் உண்டு.. 26 வயசுதான்.. சின்ன வயசில் இருந்தே ஆடம்பர வாழ்க்கை இவருக்கு தானாக அமைந்தது.

  இப்போது அவரால் ஏமாற்றப்பட்ட பெண்கள் ஒவ்வொருவராக புகார் தர ஆரம்பித்தனர். படிக்கிற காலத்தில் இருந்தே பெண்களை மயக்கி, ஏமாற்றி தன் விலை விழ வைத்து, அந்த ஆபாச வீடியோவை காட்டியே லட்சக்கணக்கில் பணம் பறித்துள்ளார் காசி.

  சொத்துக்கள்

  சொத்துக்கள்

  4 மாடிக்கு வீடு கட்டி உள்ளார்.. நிறைய சொத்துக்களை வாங்கி போட்டுள்ளார்.. முதன்முதலில் காசியால் ஏமாற்றப்பட்ட ஒரு பெண் டாக்டர் புகார் தரவும்தான் விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது. ஜிம் பாடி போட்டோக்களை காட்டி காட்டியே ஏகப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண்களை விழ வைத்துள்ளார்.. பெண்ணியம் கருத்துக்களை சொல்லி டிக்டாக் வீடியோவும் பதிவிட, அதன்மூலமும் பல பெண்கள் விழுந்துள்ளனர்.

  புகார்

  புகார்

  "காசிக்கு பெரிய கும்பலுடன் தொடர்பு இருக்கு.. அவங்களை விட்டுடாதீங்க.." என்பதுதான் புகார் சொல்லும் பெண்களின் குரலாக உள்ளது. இவர்கள் எல்லாம் யார் என்று தெரியவில்லை. ஏற்கனவே அரசியல் பிரமுகர்களுடன் காசிக்கு தொடர்பு இருப்பதாக சொல்லப்பட்டது.. பாண்டிச்சேரி, சென்னை அருகே அவர்களுக்கு சொந்தமாக ரிசார்ட், ஹோட்டல்கள் இருப்பதாகவும், ஏமாற்ற போகும் பெண்களை அந்த ரிசார்ட்டுகளுக்குதான் காசி அழைத்து வந்து நாசம் செய்திருப்பதாகவும் செய்திகள் கசிந்தன. ஆனால் அந்த கட்சி பிரமுகர்கள் யார் என்றெல்லாம் இன்னும் உறுதியாக தெரியவில்லை.

  விஐபிக்கள்

  விஐபிக்கள்

  காசிக்கு வயது 26தான் ஆகிறது.. அதற்குள் இத்தனை விஐபிக்களுடன் தொடர்பா? இவ்வளவு சொத்துக்களை வாங்கி குவிக்க முடியுமா என்பது ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் உள்ளது.. பாடகி சின்மயி"காசி ஒரு காமக்கொடூரன்... ஸ்கூல் மாணவிகளை பலாத்காரம் செய்துள்ளார்... அவர்களில் ஒரு மாணவி, சப்இன்ஸ்பெக்டரின் மகள் ஆவார்" என்றும் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்ல, ஏற்கனவே நான் காசியை பற்றி சொல்லியிருந்தேன்.. ஆனால் யாரும் அதை பெரிசா எடுத்துக்கலை என்றும் கூறியுள்ளார். ஒருவேளை சின்மயி தெரிவித்தபோதே காசிக்கு செக் வைத்திருந்தால் சில பெண்களை காப்பாற்றி இருக்கலாம் என்றே தெரிகிறது.

  அனுமதி

  அனுமதி

  காசியிடம் உள்ளது எல்லாமே காஸ்ட்லி செல்போன்கள், லேப்டாப்கள்.. 2 ஹார்ட் டிஸ்க்கள்.. இவைகள் அத்தனையும் இப்போது போலீசாரின் பிடியில் உள்ளது.. அரசியல் நெருக்கம் காசிக்கு இருந்ததால்தான் பண மோசடி, நிலமோசடி, கந்துவட்டி, என ஏகப்பட்ட விஷயங்களை அசால்ட்டாக செய்துள்ளார் என்கிறார்கள்.. நேற்று காசிக்கு 3 நாள் போலீஸ் காவல் அனுமதி தந்துள்ளது நாகர்கோவில் மகிளா கோர்ட்.. விஷயம் பெரிதாகும் என்பதால் விசாரிக்க 10 நாள் தேவை என்று கேட்டிருக்கிறார்கள், ஆனால் கோர்ட் 3 நாள்தான் தந்துள்ளது.

  மாணவிகள்

  மாணவிகள்

  இந்த 3 நாளில் காசியிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கும் என்றே தெரிகிறது.. அந்த விஐபிக்கள் யார், ஏமாற்றிய நடிகரின் மகள் யார், சீரழிந்த சப்இன்ஸ்பெக்டரின் மகள் யார், போட்டோக்களில் உள்ள அந்த பிரபலங்கள் யார், என்றெல்லாம் இனிமேல்தான் விசாரணையில் தெரியவரும்... இப்போதைக்கு முதல்கட்டமாக கோவையில் இருந்து விசாரணை ஆரம்பமாகும் என்று தெரிகிறது.. காரணம் கோவையில் காலேஜ் படித்த மாணவிகளை காசி ஏமாற்றியுள்ளதால், அங்கு சென்று போலீசார் விசாரணை நடத்த உள்ளனர்.

  விஐபிக்கள்

  விஐபிக்கள்

  இந்த கோவை சம்பவங்களில்தான் கட்சி பிரமுகர்களின் தொடர்பு நிறைய இருக்கிறதாம்.. அதனால்தான் காசிக்கு நெருக்கமான விஐபிக்கள், அரசியல் புள்ளிகள் கலக்கத்தில் உள்ளனர்.. கட்சியில் ஒரு முக்கியமான பதவிக்குகூட காசி ஆசைப்பட்டானாம்.. ஆனால் சூழலும், நிலைமையும் சரியில்லாததால் அந்த வாய்ப்பு தள்ளி போயுள்ளது..அதற்கு பிறகுதான் அரசியல் பிரமுகர்களின் நட்பால் பாண்டிச்சேரி கெஸ்ட் அவுஸ்களில் லீலைகள் ஆரம்பமாகி உள்ளன.

  ஹார்ட் சிம்பிள்

  ஹார்ட் சிம்பிள்

  இதில் என்ன ஒரு ஹைலைட் என்றால், கோர்ட்டில் ஆஜராக நேற்று காசி வந்தபோது, செய்தியாளர்கள் அவரை போட்டோ எடுத்தனர்.. பொதுவாக இப்படி யாராவது போட்டோ எடுத்தால், குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைகளால், துணியால் முகத்தை வெட்கப்பட்டு கொண்டு மறைத்து கொள்வார்கள்.. ஆனால் காசி அப்படி இல்லை.. எல்லா செய்தியாளர்களையும் பார்த்து தன்னுடைய 2 கைகளால் ஹார்ட் சிம்பல் காண்பித்தார்... இத்தனைக்கும் கையில் விலங்கு, பக்கத்தில் போலீசார் என குழுமி இருந்தபோதே இந்த சிம்பலை காட்டினார்.

  விஐபிக்கள்

  விஐபிக்கள்

  காசி சமாச்சாரமும் பொள்ளாச்சி சம்பவம் போலவே உள்ளது.. காசி பெண்களுக்கு வலை வீசும்போது, அதில் பெண்களே மயங்கி விழுந்துள்ளனர்.. இதுதான் காசிக்கு வசதியாக போயுள்ளது.. இப்படித்தான் பொள்ளாச்சி விஷயத்தில் நூற்றுக்கணக்கான ஆபாச வீடியோக்கள் கைப்பற்றப்பட்டதாக சொல்லப்பட்டது.. அதெல்லாம் என்னவாயிற்று என்றே தெரியவில்லை.. என்ன கடினமான தண்டனை அந்த குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்டது? பொள்ளாச்சி விஷயத்தில் உடந்தையாக இருந்த விஐபிக்கள் பிடிபட்டார்களா? என்பது இதுவரை உறுதியாக தெரியவில்லை.. ஆனால் இது காசி விஷயத்திலும் நடந்துவிடக் கூடாது என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்!!

  English summary
  police gets 3 days custody of nagarcoil kasi over sexual harassment and cheating case issue
   
   
   
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X