என்னா ஸ்பீடு என்னா ஸ்பீடு.. ராகுல் காந்தி வேகமாக பேச.. அதை விட அதிவேகமாக மொழிபெயர்த்த தங்கபாலு!
தங்கபாலு, எச்.ராசா ஆங்கில மொழிபெயர்ப்புக்கான வித்தியாசம் இதுதான்
நாகர்கோவில்: அப்படீன்னா.. இவ்ளோ நாளா இதுதான் மொழிபெயர்ப்புன்னு நாமதான் ஏமாந்துட்டோம் போல!
பொதுவாக தேசிய தலைவர்கள், அல்லது வேறு மாநில தலைவர்கள் தமிழக பொதுக்கூட்டங்களுக்கு வந்தால், அவர்களின் உரையை மொழிபெயர்ப்பது வழக்கம்! தாய் மொழியிலேயே தலைவர்களின் கருத்துக்களை மக்கள் புரிந்து கொள்ளட்டுமே என்பதற்காக இந்த ஏற்பாடு.
இது காலகாலத்துக்கும் அன்றிலிருந்து நடந்து வரும் ஒரு சாதாரண சமாச்சாரம்தான். ஆனால் இதை கூட ஒருவர் வைரலாக்கினார் என்றால் அது நம் எச்.ராஜாதான்!!

ஆங்கிலம்
மொழிபெயர்ப்பு வரலாற்றை திரும்பி பார்த்தால் நம் கண்முன் வந்து நிற்பதும் எச்.ராஜாதான்! இதற்கு காரணம் அவருக்கு ஆங்கில புலமை இல்லை என்பது அர்த்தமல்ல.. நன்றாக சரளமாக ஆங்கிலம் பேசக்கூடியவர்தான் எச்.ராஜா. ஆனால் அவசரம் அல்லது ஆர்வ கோளாறினால் ஏற்பட்ட தவறான மொழிபெயர்ப்புகள்தான் சர்ச்சையாகிவிட்டன.

சிறுநீர் பாசனம்
குறிப்பாக சொட்டு நீர் பாசனம் என்பதை சிறுநீர் பாசனம் என்று சொன்னதை இன்னமும் நம்மால் மறக்க முடியாது! நாம் மறந்தாலும் அமித்ஷா மறக்க மாட்டார்! அப்படியே எச்.ராஜாவின் மொழிபெயர்ப்பு எதுவாக இருந்தாலும், அதில் ஒரு இன்ட்ரஸ்ட் இருக்காது.. மக்களை சுண்டி இழுக்காது! காதை மூடிக் கேட்டால் நல்லா உறக்கம் வரும்.. சுகானுபவமான மொழிபெயர்ப்பு அது!

களை கட்டியது
ஆனால் இன்று தங்கபாலு போட்டார் பாருங்க ஒரு போடு.. அடடா அடடா.. தூக்கமெல்லாம் ஓடிப் போச்சு. அவர் அடிச்ச ஸ்பீடுக்கு ராகுலும் பிட்ச்சை உயர்த்தே பிறகென்ன களை கட்டியது ராகுல் காந்தியின் பேச்சும், அதற்கு தங்கபாலுவின் மொழிபெயர்ப்பு வீச்சும். ராகுல்காந்தி மேடையில் பேசபேச அதை மூத்த காங்கிரஸ் தலைவர் தங்கபாலு மொழிபெயர்க்கிறார். அந்த மொழிபெயர்ப்பில்தான் அவ்வளவு வேகம்.. அவ்வளவு மாடுலேஷன்ஸ்!

சுவாரஸ்யம்
ராகுல் முழுசா பேசுவதற்கு முன்னேயே அவரது வாயையே பார்த்துப் பார்த்து டக்கு டக்குன்னு மொழிபெயர்த்தார் தங்கபாலு! பார்க்கவே செம சுவாரஸ்யமாக இருந்தது. சோர்வாகி கிடப்பவர்களை நிமிர்ந்து உட்கார வைத்தது.

பக்குவம்
ராகுல் மட்டும் என்ன சும்மாவா, கையில் ஒரு குறிப்பு இல்லை, எதையும் எழுதி வைத்து கொள்ளவும் இல்லை.. சரளமாக மனதில் பட்டதை தெளிவாக, அதே சமயம் பக்குவமாக பேசினார். பிரதமர் மோடியே மானிட்டர் பார்த்து பார்த்துதான் படிப்பார். ஆனால் பிரதமரை விட வயதில் குறைந்த, அதுவும் பப்பு என்று கிண்டல் செய்யப்பட்ட ராகுல் இன்று சரளமாக மேடையில் பேசியதும், அதை அதி வேகமாக தங்கபாலு மொழி பெயர்த்ததும்.. என குமரிக் கடலே ஆடிப் போய் விட்டது.

நமஸ்கார்
ஆனால் என்ன ஒன்று ஆர்வத்தில் ராகுல் காந்தி சொன்னதை முழுமையாக அப்படியே மொழிபெயர்க்கவில்லை தங்கபாலு. ஆங்காங்கே சுருக்கி விட்டார்.. அதை விட செம காமெடி ராகுல் காந்தி முடிக்கும்போது நமஸ்கார் என்றார், இவரும் நமஸ்கார் என்று வாய் தவறி கூறி விட்டார்.. பிறகு சுதாரித்து நன்றி என்றார்.
-
மக்களவையில் டென்ஷன்: சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்! இன்று அரங்கேறும் அக்னிப்பரீட்சை -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர் -
இந்தியாவுக்கு ஆப்பு வைக்கும் ரஷ்யா.. கச்சா எண்ணெய் விலையில் இனி சலுகை இல்லை? நேரம் பார்த்து அடிக்கும் புதின் -
Next CM: தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது யார் தெரியுமா? சித்தர் கணிப்பை பாருங்க! அப்போ விஜய்? -
அல்வா மாதிரி அள்ளிகிட்டு போன அண்ணியார்.. ஏக கடுப்பில் மாஜி மக்கள் நலக் கூட்டணி! திமுகவுக்கு சிக்கல்? -
எடப்பாடி கோட்டையில் திமுகவுக்கு ஷாக்! அதிமுகவுக்கு தாவிய முன்னாள் எம்.எல்.ஏ! -
கூட்டணியில் சொதப்பிய ஆதவ் அர்ஜுனா.. கண் சிவந்த விஜய்.. தவெகவில் உச்சகட்ட மோதல் -
வசமாக சிக்கும் டிரம்ப்.. ஈரான் கப்பல் தாக்கப்பட்ட விஷயத்தில் பெரிய மிஸ்டேக்! ரவுண்டு கட்டும் சட்டம் -
ட்விஸ்ட்! அதிமுக கூட்டணியில் தவெக? 40 சீட் தர எடப்பாடி தயார்! விஜய்க்கு வேற வழியே இல்லையா? -
விசிக முதல் தேமுதிக வரை.. திமுக கூட்டணியில் போர்க்கொடி உயர்த்திய 6 கட்சிகள்.. தொகுதி பங்கீட்டில் இழுபறி












Click it and Unblock the Notifications