நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மிக்சிங் குளறுபடி.. குப்பைக்கு போன 1.5 கோடி டோஸ் "கொரோனா வேக்சின்".. ஜான்சன் அண்ட் ஜான்சன் ஷாக்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆய்வகத்தில் ஏற்பட்ட மிக்சிங் குளறுபடி காரணமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் 1.5 கோடி டோஸ் கொரோனா வேக்சின் வீணாகி உள்ளது.

அமெரிக்காவில் தற்போது கொரோனாவிற்கு எதிராக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் வேக்சின் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கிட்டதட்ட ஆக்ஸ்போர்ட் வேக்சின் போலவே செயல்திறன் கொண்ட இந்த மருந்து அரசு மூலம் மக்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின் பால்டிமோரில் உள்ள எமர்ஜெண்ட் நிறுவனத்தில் இந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் வேக்சின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது..

என்ன நடந்தது?

என்ன நடந்தது?

இந்த நிலையில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் வேக்சின் தயாரிப்பில் அமெரிக்காவில் பெரிய குளறுபடி ஏற்பட்டுள்ளது. பால்டிமோரில் உள்ள இந்த உற்பத்தி மையத்தில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் வேக்சினில் தவறுதலாக ஆக்ஸ்போர்ட் பல்கலையின் ஆஸ்டர்செனகா வேக்சின் மூலப்பொருட்களை சேர்த்து உள்ளனர். தவறுதலாக இதை மிக்ஸ் செய்து உற்பத்தி செய்துவிட்டனர்.

எப்படி நடந்தது ?

எப்படி நடந்தது ?

அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் வேக்சின் மற்றும் ஆஸ்டர்செனகா வேக்சின் இரண்டும் இந்த ஒரே தொழிற்சாலையான எமர்ஜெண்ட் தொழிற்சாலையில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. இதன் காரணமாக தவறுதலாக இப்படி மூலக்கூறுகள் மாற்றி உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. அதிக அளவு வேக்சின்களை உருவாக்க வேண்டும் என்று பல புதிய பணியாளர்களை எமர்ஜெண்ட் நிறுவனம் வேலைக்கு அமர்த்தியது.

போச்சு

போச்சு

இந்த புதிய பணியாளர்களுக்கு கடந்த மாதம்தான் பயிற்சி கொடுக்கப்பட்டது. இந்த புதிய பணியாளர்கள் செய்த தவறால் இப்படி மிக்சிங் மாறி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக முறையாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால் பலகோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

எவ்வளவு?

எவ்வளவு?

ஆய்வகத்தில் ஏற்பட்ட இந்த மிக்சிங் குளறுபடி காரணமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் 1.5 கோடி டோஸ் கொரோனா வேக்சின் வீணாகி உள்ளது. இதில் ஆஸ்டர்செனகா வேக்சின் மூலக்கூறுகள் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் இந்த மருந்துகள் எதையும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை விசாரிக்க தனி குழு அமைக்கப்பட்டுள்ளது.

சிக்கல்

சிக்கல்

அமெரிக்காவில் வேக்சின் விற்பனையை வேகப்படுத்தலாம் என்று ஜான்சன் அண்ட் ஜான்சன் திட்டமிட்டது. ஆனால் தற்போது அதில் மிகப்பெரிய அளவில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே உருவாக்கிய ஸ்டாக்கில் இருக்கும் வேக்சின் மற்றும் நெதர்லாந்தில் இருந்து வாங்கிய ஜான்சன் அண்ட் ஜான்சன் வேக்சின்கள் மட்டுமே தற்போது அமெரிக்காவில் விற்கப்பட்டு வருகிறது.

English summary
1.5 Crore dose Johnson and Johnson vaccine ruined due to factory mix up in USA.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X