டைம் டிராவலா?.. 2023ல் புறப்பட்டு 2022ல் தரையிறங்கிய விமானம்.. அலறிய பயணிகள்.. கடைசியில் ட்விஸ்ட்
நியூயார்க்: 2023 புத்தாண்டில் புறப்பட்ட விமானம் ஒன்று 2022-ம் ஆண்டு பின்னோக்கி சென்று தரையிறங்கி இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான்.
புத்தாண்டை ஆரவாரமாக கொண்டாடி விட்டு விமானம் ஏறிய பயணிகள், 2022-ம் ஆண்டில் தரையிறங்கப்படுகிறது என அறிவிப்பு வெளியானதும் சற்று ஆடிதான் போய்விட்டனர்.
என்ன இது.. நாம் டைம் டிராவலிங் செய்துவிட்டோமோ என நினைத்து பலர் அதிர்ச்சியாகிய நிலையில், கடைசியில் செம ட்விஸ்ட் அவர்களுக்கு காத்திருந்தது.

புத்தாண்டு 'பூமர்' ஜோக்ஸ்
புத்தாண்டு வந்துவிட்டாலே அனைவரும் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றுவிடுவார்கள். கடந்த வருடத்தில் நாம் செய்த தவறுகளை இந்த ஆண்டும் செய்துவிடக் கூடாது, கடினமாக உழைக்கக் கூடாது, மது அருந்தக்கூடாது என்பன போன்ற உறுதிகளை பலர் எடுத்துக்கொள்வார்கள். மறுபுறம், சில 'பூமர் அங்கிள்' குரூப்கள் அதர பழைய புத்தாண்டு ஜோக்குகளை யாரிடம் சொல்லலாம் என அலைந்து கொண்டிருக்கும். அதுபோன்ற ஜோக்குகளில் ஒன்றுதான், "டேய்.. இனி நாம அடுத்த வருஷம்தான்டா பார்க்க முடியும்" என்ற ஜோக். அதாவது, டிசம்பர் 31-ம் தேதிக்கு அடுத்த நாள் புது வருஷமாம். அதை நகைச்சுவையாக கூறுகிறார்களாம். ஆனால், இந்த "அடுத்த வருஷம்" ஜோக்குகளை போல அல்லாமல் உண்மையான தெறி சம்பவம் ஒன்று தென் கொரியாவில் நடந்திருக்கிறது.

புத்தாண்டில் புறப்பட்ட விமானம்
தென் கொரியாவில் நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு 2023 புத்தாண்டு பிறந்துள்ளது. இதனை அங்கிருந்த மக்கள் உற்சாகமாக கொண்டாடி இருக்கிறார்கள். இந்நிலையில், அங்குள்ள சியோல் நகரில் இருந்து அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரத்துக்கு 'தி யுனைட்டெய் ஏர்லைன்ஸ் போயிங் 777300' என்ற விமானம் நள்ளிரவு 12.30-க்கு புறப்பட்டுள்ளது. அதாவது புத்தாண்டு பிறந்து அரை மணிநேரம் கழித்து இந்த விமானம் புறப்பட்டுள்ளது.

2022-இல் தரையிறக்கம்
இதையடுத்து, 9 மணிநேரம் 42 நிமிடங்கள் பயணித்த இந்த விமானம் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் தரையிறங்கிக் கொண்டிருந்தது. அப்போது வழக்கமாக விமானத்தில் அறிவிக்கப்படுவது போல, எந்த தேதி, எந்த மணியில் சான் பிரான்சிஸ்கோ நகரில் நாம் தரையிறங்க போகிறோம் என அறிவிக்கப்பட்டது. இதை கேட்ட பயணிகள் அதிர்ச்சியடைந்தனர். ஏனெனில், 2022-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி மாலை 5 மணிக்கு இந்த விமானம் தரையிறங்கியதாக விமானத்தில் அறிவிக்கப்பட்டது.

டைம் டிராவலா?
இந்த அறிவிப்பை கேட்ட விமானப் பயணிகள் பலர் குழப்பம் அடைந்தனர். இன்னும் சிலர், ஹாலிவுட் படங்களில் வருவதை போல விமானம் 'டைம் டிராவலிங்' செய்துவிட்டதாக நினைத்து அலறியுள்ளனர். பயணிகளின் இந்தக் குழப்பத்தை உணர்ந்த விமானக் குழுவினர், "தென் கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே 23 மணிநேரம் வித்தியாசம் உள்ளது. அதாவது, தென் கொரியாவை விட அமெரிக்கா 23 மணிநேரம் பின்தங்கியுள்ளது. அதனால்தான், தற்போது 2022 டிசம்பர் 31-ம் தேதி நாம் தரையிறங்கி இருக்கிறோம்" என தெளிவுப்படுத்தினர். அதன் பிறகே பயணிகள் குழப்பத்தில் இருந்து வெளியே வந்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications