நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

27 மணி நேரம்.. சாலை டிராபிக் ஜாமில் மாட்டிய அமெரிக்க செனட்டர்.. காரணத்தை கேட்டா ஆடி போயிடுவீங்க!

Google Oneindia Tamil News

நியூயார்க்; அமெரிக்காவை சேர்ந்த செனட்டர் டிம் கெய்ன் 27 மணி நேரம் சாலை டிராபிக் ஜாமில் மாட்டி திணறிய சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பின் இருக்கும் காரணம்தான் இன்னும் அதிர்ச்சி அளிக்க கூடியது.

அமெரிக்காவில் விர்ஜினியா மாகாணத்தை சேர்ந்த செனட்டர் டிம் கெய்ன் எப்போது கார் மூலம் வாஷிங்டனில் இருக்கும் கேபிடல் அலுவலகத்தில் செல்வது வழக்கம். ஜனநாயக கட்சியை சேர்ந்த இவர் கடந்த 4 நாட்களுக்கு முன் இதே போல விர்ஜினியாவில் இருக்கும் தனது வீட்டில் இருந்து காரில் புறப்பட்டு இருக்கிறார்.

கிடைத்தது 4 வாரம் ஜாமீன்.. சிறையிலிருந்து ரிலீசாகிறார் ராஜேந்திர பாலாஜி.. உச்சநீதிமன்றம் உத்தரவு கிடைத்தது 4 வாரம் ஜாமீன்.. சிறையிலிருந்து ரிலீசாகிறார் ராஜேந்திர பாலாஜி.. உச்சநீதிமன்றம் உத்தரவு

எப்போது இவர் காரில் சென்றாலும் சரியாக 2 - 2.30 மணி நேரத்தில் வாஷிங்டன் சென்றுவிடுவார். கொஞ்சம் டிராபிக் இருந்தால் மூன்று மணி நேரம் ஆகும்.

ஆனால் என்ன நடந்தது

ஆனால் என்ன நடந்தது

ஆனால் அன்று டிம் கெய்ன் வாஷிங்டன் செல்ல 27 மணி நேரம் ஆகியுள்ளது. ஆம் 1 நாளுக்கும் மேலாக விர்ஜினியா - வாஷிங்டன் இடையிலான 95 சாலையில் சிக்கி திணறி இருக்கிறார் டிம் கெய்ன். அவருக்கு எதிராக சாலையில் போராட்டம் எல்லாம் எதுவும் நடக்கவில்லை மக்களே.. மாறாக பனிப்பொழிவு காரணமாக இவர் 27 மணி நேரம் டிராபிக்கில் சிக்கி இருக்கிறார். அங்கு திடீரென பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

பனிப்பொழிவு

பனிப்பொழிவு

அதோடு பனி புயல் ஏற்பட்டு இருக்கிறது. இதனால் சாலை முழுக்க பனிக்கட்டிகள் நிரம்பி பாதைகள் மூடி உள்ளன. வெளியே இறங்கியும் நடக்க முடியாது. சுற்றிலும் வெள்ளை நிறத்திலும் பனி சூழ்ந்து எங்கே இருக்கிறோம் என்பதே தெரியாத அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. இந்த இடத்தில் கிட்டத்தட்ட 1000 வாகனங்கள் வரிசையில் நின்று மிக மிக மெதுவாக ஊர்ந்து சென்று இருக்கின்றன.

சாலைகள் மூடப்பட்டது

சாலைகள் மூடப்பட்டது

பனி காரணமாக ஒரு பக்கம் மொத்தமாக சாலைகள் மூடப்பட்டது. அதேபோல் இன்னொரு பக்கம் பனி புயலால் மரங்கள் கார்கள் மீது விழுந்து சேதாரம் ஏற்பட்டு இருக்கிறது. அங்கு வெப்பநிலை மைனஸில் இருந்த நிலையில் மக்கள் காரை விட்டு வெளியே செல்ல முடியாமல் முடங்கி உள்ளனர். ஹீட்டர் செயல்பட வேண்டும் என்பதால் பல மணி நேரமாக காரை இவர்கள் ஆன் செய்து வைத்துள்ளனர்.

 ஹீட்டர்

ஹீட்டர்

ஆனால் ஒரு நாளுக்கும் மேலாகும் கார் ஆனில் இருந்ததால் பலருக்கு எரிபொருள், பேட்டரி தீர்ந்து அங்கேயே கார் முடங்கி உள்ளது. அதோடு பலர் உணவு இன்றி கஷ்டப்பட்டு உள்ளனர். வடபழனி சிக்னலில் ஒரு நாள் முழுக்க காத்திருந்தால் எப்படி இருக்கும் என்று நினைத்து பாருங்கள் புரியும். அந்த அளவிற்கு மோசமான டிராபிக் ஜாம் ஏற்பட்டுள்ளது. பின்னர் 27 மணி நேரத்திற்கு பின் ஒருவழியாக டிம் கெய்ன் உள்ளிட்ட பலரும் டிராபிக் ஜாமில் இருந்து தப்பித்து வாஷிங்டன் சென்றுள்ளனர்.

காரணம்

காரணம்

எதிர்பார்க்காத அதிக அளவிலான பனிப்பொழிவு மற்றும் பனிப்புயல்தான் இதற்கு காரணம் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். காலநிலை மாற்றம்தான் இதற்கு முக்கிய காரணம் என்ற அதிர்ச்சி காரணத்தையும் வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். உலகம் முழுக்க ஒவ்வொரு பகுதியும் காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு பகுதியின் வெப்பநிலை மாறி வருகிறது. பல நாடுகளில் மோசமான மழை, பனி, குளிர் ஏற்பட்டு வருகிறது.

தமிழ்நாடு

தமிழ்நாடு

இந்தியாவிலும் அடிக்கடி வெள்ளம், புயல் ஏற்பட தொடங்கி உள்ளது. சென்னையிலும் சமீபத்தில் கணிக்க முடியாத அளவிற்கு மழை பெய்தது. அதேபோல்தான் அமெரிக்காவில் இப்படி கணிக்க முடியாத அளவிற்கு கடும் பனி பெய்து இருக்கிறது. மீண்டும் சரி செய்யவே முடியாத தவறுகளை நாம் செய்து வருகிறோம். இது மனித குலத்திற்கான "கோட் ரெட்" எச்சரிக்கை மணி.இனி நாம் இயற்கை பேரிடர்களுக்கு மத்தியில் வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். என்று கடந்த சில நாட்களுக்கு முன்தான் ஐநா அமைப்பு வெளியிடப்பட்ட Intergovernmental Panel on Climate Change எனப்படும் காலநிலை மாற்ற அறிக்கை குறிப்பிட்டது. அவர்கள் எச்சரித்தது போலவே இப்போது காலநிலை மாற்றம் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்க தொடங்கி உள்ளது.

English summary
Climate change leads to heavy traffic in Washington: Senator struck in the road in Virginia.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X