Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜஸ்ட் ஒரு வருடம்தான்.. 2023ம் ஆண்டு மக்கள் தொகையில் சீனாவை முந்தப்போகிறது இந்தியா.. ஐ.நா. தகவல்

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: மக்கள் தொகை பெருக்கத்தில் இந்தியா சீனாவை விரைவில் முந்திவிடும் என ஐநா தெரிவித்துள்ளது. வரும் 2023ம் ஆண்டில் இந்தியா, சீனாவை முந்தி உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக ஐநா கூறியுள்ளது.

சமீபத்தில் உலக மக்கள் தொகை அதிகரிப்பு குறித்து ஐநா சில புள்ளிவிவரங்களை வெளியிட்டது. அதன்படி, நடப்பாண்டு நவம்பர் 15ல் உலகம் முழுவதும் மக்கள் தொகை 800 கோடியை எட்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல 2030ல் 850 கோடி, 2050ல் 970 கோடி, 2080ல் 1,040 கோடி என மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்கும் என ஐநா தெரிவித்துள்ளது. இந்த தகவல்கள் உலக மக்கள் தொகை தினம் கடைப்பிடிக்கப்படும் ஜூலை 11ம் தேதி ஐநா வெளியிட்டது.

India is on course to surpass China as the world’s most populous country in 2023, says UN

மக்கள் தொகை தொடர்ந்து அதிகரிக்க வாய்ப்புள்ள நாடுகளாக இந்தியா, காங்கோ, எகிப்து, எத்தோப்பியா, நைஜீரியா, பாகிஸ்தான் மற்றும் தான்ஜானியா ஆகிய நாடுகள் குறிப்பிடப்பட்டுள்ளன. சீனாவை பொறுத்த அளவில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் அந்நாட்டு மக்கள் தொகை பெருக்கம் சரிவை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல் முன்னதாக இந்தியா 2027ம் ஆண்டில்தான் மக்கள் தொகை அதிகரிப்பில் சீனாவை முந்தும் என கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இது 2023ம் ஆண்டிலேயே சாத்தியமாகும் என ஐநா கூறுகிறது.

குறைவான உயிரிழப்புகள் மற்றும் அதிகரிக்கும் பிறப்பு விகிதம் ஆகியவை சேர்ந்து தெற்கு மற்றும் மத்திய ஆசியாவை உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதியாக 2037ம் ஆண்டுக்குள் மாற்றும். ஆப்ரிக்காவின் துணை-சஹாரா பகுதியானது தொடர்ந்து அதிக மக்கள் தொகை பெருக்கத்தை சந்தித்து வருகிறது. இதன் காரணமாக 2040களின் பிற்பகுதியில் இந்த பகுதியின் மக்கள் தொகை ஏறத்தாழ இரட்டிப்பாக அதிகரிக்கும். அதாவது சுமார் 200 கோடியை கடந்திருக்கும்.

இது இவ்வாறு இருக்க வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் கடந்த 2 ஆண்டுகளில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் பூஜ்ஜியம் என்கிற அளவில் இருந்து வருவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது. இந்தியாவை பொறுத்த அளவில், 2100ம் ஆண்டுக்குள் ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த பிறப்பு விகிதம் 1.69 என்கிற அளவிலிருந்து 1.29 என குறையலாம் என்றும் ஐநா எச்சரித்துள்ளது.

பாலின சமத்துவத்தை பொறுத்த அளவில் தற்போது 50.3 சதவிகிதம் ஆண்களுக்கு 49.7 சதவிகிதம் பெண்களே உள்ளனர். ஆனால் இந்த நிலை 2050ம் ஆண்டுக்குள் சீரடையும். இருவேறு பாலினங்களின் எண்ணிக்கையும் சமநிலையில் இருக்கும் என எதிர்பார்ப்பதாக ஐநா தெரிவித்துள்ளது.

மக்கள் தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்த சிங்கிளாக இருங்கள் என நாகாலாந்து மாநிலத்தின் அமைச்சர் ஒருவர் சமீபத்தில் பேசியிருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+