Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கடவுளே! தலையிலிருந்த "பேனால்" ஒரு குடும்பமே சீரழிந்த சம்பவம்! அம்மா, பாட்டி ஜெயிலில்! வினோத நிகழ்வு

Subscribe to Oneindia Tamil

நியூயார்க்: தலையில் இருக்கும் பேனால் ஒரு குடும்பமே சீரழிந்த கதை தெரியுமா? ஆம் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் அப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளது.

பேன் தொல்லை உலகம் முழுக்க ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் பலருக்கும் ஏற்படும். அப்படித்தான் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் டுக்சன் என்ற பகுதியில் வசித்த வந்த சிறுமி ஒருவர்.. எனக்கு தலையை அரிக்கிறது என்று அடிக்கடி புகார் கொடுத்துள்ளார்.

இவரின் தாயார் பெயர் சான்ட்ரா, பாட்டி பெயர் எலிசபெத்.

 ரத்த சோகை

ரத்த சோகை

அந்த சிறுமிக்கு பிறந்ததில் இருந்து ரத்த சோகை பிரச்சனை இருந்துள்ளது. ரத்த சோகை காரணமாக அந்த சிறுமி கடுமையாக அவதிப்பட்டு இருக்கிறார். அந்த சிறுமிக்கு 9 வயது ஆன நிலையில் ரத்த சோகை மோசமான நிலையை அடைந்து உள்ளது. ஆனால் சிறுமிக்கு சிகிச்சை பார்க்க பாட்டி, அம்மா இருவரும் மறுத்துள்ளனர். சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்துள்ளனர்.

சிகிச்சை இல்லை

சிகிச்சை இல்லை

இந்த நிலையில்தான் கடந்த இரண்டு வருடமாக அந்த சிறுமிக்கு பேன் தொல்லை ஏற்பட்டுள்ளது. தலை முழுக்க பேன் நிரம்பி உள்ளது. இதில் தலையில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு, அதில் இன்பெக்சன் ஏற்பட்டுள்ளது. இதனால் முகத்திலும் அந்த இன்பெக்சன் பரவி, முகம் முழுக்க பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் அவர் முகத்தை பார்க்கவே முடியாத நிலைக்கு மோசமாகி உள்ளது.

 இன்பெக்சன்

இன்பெக்சன்

ஆனால் அந்த சிறுமியின் தாயார் சான்ட்ரா, சிறுமியை மருத்துவமனை அழைத்து செல்லவில்லை. மாறாக இவர் தனது பாய் பிரண்ட்டுடன் வேறு வீட்டில் வசித்து வந்து இருக்கிறார். சிறுமியின் பாட்டி எலிசபெத்தும், சிறுமி உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தும், எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளார். இது தொடர்பான வாட்ஸ் ஆப் சாட்டுகளும் வெளியாகி உள்ளன.

வாட்ஸ் ஆப் சாட்

வாட்ஸ் ஆப் சாட்

அதன்படி.. சான்ட்ரா தனது பாய் பிரண்டிடம்.. என் மகளுக்கு தலை முழுக்க பேன். முகம் மோசமாகிவிட்டது. ஆனால் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல முடியாது. எனக்கு நேரமில்லை. அந்த தலையோடு அவளை அழைத்துக்கொண்டு யார் மருத்துவமனை செல்வார் என்று சான்ட்ரா குறிப்பிட்டுள்ளார். இன்னொரு சாட்டில் பாட்டி எலிசபெத்தும் இதே போல குறிப்பிட்டு இருக்கிறார். இரண்டு பேரும் சிறுமியின் உடல் நிலை மோசமாகிறது என்று தெரிந்தும் சிறுமியை மருத்துவமனை அழைத்து செல்லவில்லை.

மரணம்

மரணம்

இந்த நிலையில், முகம் முழுக்க இன்பெக்சன் பரவிய நிலையில்.. முகம் வீங்கி.. அந்த சிறுமி சமீபத்தில் வாந்தி எடுத்துள்ளார். அவர் ரத்த வாந்தி எடுத்து வயிற்று போக்கால் அவதிப்பட்டு இருக்கிறார். உடல்நிலை மோசமான நிலையில் வீட்டிலேயே அவர் பலியாகிவிட்டார். இந்த நிலையில் உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தப்பட்டது.

விசாரணை அம்பலம்

விசாரணை அம்பலம்

பிரேத பரிசோதனையில், தலையில் இருந்த அதிகபட்ச பேன், அதனால் ஏற்பட்ட காயம், இன்பெக்சன், ரத்த சோகை ஆகியவை மரணத்திற்கு காரணம் என்று உறுதி செய்யப்பட்டது. அதோடு வாட்ஸ் ஆப் சாட்டுகள் மூலம், அந்த சிறுமியின் அம்மா, பாட்டி இருவரும் விஷயம் தெரிந்தும் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து செல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு. அவர்கள் மீது முதல் டிகிரி கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. தலையில் இருக்கும் பேன் மொத்தமாக அந்த குடும்பத்தையே உடைத்து போட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+