நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பறக்கும் தட்டுகள் உண்மைதான்.. 3 வீடியோக்களை வெளியிட்டு உறுதிபடுத்திய அமெரிக்கா!

பறக்கும் தட்டுகள் பற்றிய மூன்று வீடியோக்களை அமெரிக்கா வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க கடல் பகுதியில் பதிவு செய்யப்பட்ட யுஎப்ஓ எனப்படும் பறக்கும் மர்ம பொருட்கள் பற்றிய வீடியோக்களை அந்நாட்டின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended Video

    UFO video released by the Pentagon | America| UFO

    அண்டவெளியில் பூமியைத் தவிர மற்ற கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கிறார்களா இல்லையா என்பது பற்றிய ஆராய்ச்சிகள் நீண்ட காலமாக நடந்து வருகிறது. வேற்றுக்கிரகவாசிகள் இருக்கிறார்கள் என்றும், அடிக்கடி பறக்கும் தட்டுகளில் அவர்கள் பூமிக்கு வந்து செல்கிறார்கள் என்று ஒருதரப்பும், அப்படி எதுவுமே இல்லை என்று மற்றொரு தரப்பும் நீண்டகாலமாக விவாதம் நடத்தி வருகின்றனர்.

    ஆனால் அடிக்கடி வானத்தில் பறந்த மர்ம பொருட்கள் பற்றிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்துவதுண்டு. அடையாளம் தெரியாத அவற்றை யுஎப்ஓ எனவும் தமிழில் பறக்கும் தட்டுகள் எனவும் குறிப்பிட்டு வருகின்றனர்.

    அந்தவகையில் அமெரிக்க கடல்பரப்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்ட யுஎப்ஓ எனப்படும் சில மர்ம பறக்கும் விமானங்களின் வீடியோக்களை அந்நாட்டின் பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ளது.

    மூன்று வீடியோக்கள்

    மூன்று வீடியோக்கள்

    அமெரிக்காவில் புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் கடற்படை மற்றும் விமானப்படை வீரர்களுக்கு ஃபுளோரிடா, வெர்ஜீனியா உள்ளிட்ட கடல்பகுதிகளில் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. அப்படியாக கடந்த 2004 மற்றும் 2005ம் ஆண்டு அப்பகுதியில் கடற்படையால் எடுக்கப்பட்டதாக மூன்று யுஎப்ஓ வீடியோக்கள் சில கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    கட்டுக்கதைகள்

    கட்டுக்கதைகள்

    அப்போது அந்த வீடியோக்களின் நம்பகத்தன்மை குறித்து பல்வேறு விவாதங்கள் இணையத்தில் வைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து மக்களிடையே பல்வேறு கட்டுக்கதைகளும் பகிரப்பட்டன. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய அந்த வீடியோக்கள் குறித்து அப்போது அமெரிக்கா வாய் திறக்கவேயில்லை.

    பெண்டகன் வெளியீடு

    பெண்டகன் வெளியீடு

    இந்நிலையில் கொரோனாவால் ஏறக்குறைய நிலைகுலைந்து போயிருக்கும் அமெரிக்க தற்போது அந்த யுஎப்ஓ வீடியோக்களை வெளியிட்டு மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க பாதுகாப்பு தலைமையகமான பெண்டகன் அந்த வீடியோக்களை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

    வதந்திகளைத் தவிர்க்க

    வதந்திகளைத் தவிர்க்க

    கூடவே, இது தொடர்பாக பெண்டகனில் பேசியுள்ள செய்தி தொடர்பாளர் கோஃப், "தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோக்கள் அனைத்தும் மர்ம விமானம் என்பது உண்மையா பொய்யா என்பது குறித்து பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீரப்பதற்காகவே வெளியிடப்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.

    குழப்பம்

    குழப்பம்

    மேலும் இந்த வீடியோவில் மர்ம விமானங்கள் எந்த பகுதியை சேர்ந்தவை என இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால் இவற்றை UFO எனக் குறிப்பிடாமல் 'unidentified aerial phenomena' என்றே பெண்டகன் குறிப்பிட்டிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

    நெட்டிசன்கள் கேள்வி

    நெட்டிசன்கள் கேள்வி

    எது எப்படியோ, அமெரிக்கா வெளியிட்டுள்ள இந்த வீடியோக்களால் மீண்டும் சமூகவலைதளங்களில் ஏலியன்கள் குறித்த விவாதங்கள் எழுந்துள்ளன. எப்போதோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வீடியோக்களை, தற்போது சம்பந்தமே இல்லாமல் அமெரிக்கா ஏன் வெளியிட்டுள்ளது என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

    திசை திருப்பும் முயற்சி

    கொரோனா தாக்கத்தால் உலகமே பெரும் பாதிப்புகளைச் சந்தித்து வரும் நிலையில், மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்காகவே அமெரிக்கா இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளதா என்ற சந்தேகத்தையும் அவர்கள் பதிவு செய்துள்ளனர். கொரோனாவால் மற்ற நாடுகளை விட அமெரிக்கா தான் அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    The United States Department of Defense has officially released three short videos showing "unidentified aerial phenomena".
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X