நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

10 முதல் 15 முறை கத்திக்குத்து.. வென்டிலேட்டரில் சல்மான் ருஷ்டி.. ஒரு பார்வையை இழக்கும் அபாயம்?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்கில் கத்திக்குத்துக்குள்ளான எழுத்தாளர் சல்மான் ருஷ்டிக்கு பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

Recommended Video

    யார் இந்த Salman Rushdie? அவருக்கு என்ன நடந்தது? The Satanic Verses காரணமா? | *World

    இந்தியாவில் பிறந்த எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988 ஆம் ஆண்டு தி சாத்தானிக் வெர்சஸ் (சாத்தானின் கவிதைகள்) என்ற புத்தகம் அவரது உயிருக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை தந்தது. இவர் ஏறக்குறைய பல ஆண்டுகளாக சுதந்திரமாக நடமாட முடியாத நிலையில் பல மிரட்டல்கள் இருந்து வந்தனர்.

    இந்த புத்தகம் முஸ்லீம் மதத்திற்கு எதிராக இருப்பதாக கூறி பல நாடுகள் சல்மான் ருஷ்டியின் புத்தகத்திற்கு தடை விதித்தன. பல முஸ்லீம் நாடுகளில் உள்ள மக்களுக்கு இந்த புத்தகம் கோபத்தையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியது.

    சீனாவுக்கு செம்ம பீதி... உத்தரகாண்ட் எல்லையில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி சீனாவுக்கு செம்ம பீதி... உத்தரகாண்ட் எல்லையில் இந்தியா- அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி

     ஈரான்

    ஈரான்

    ஈரானைச் சேர்ந்த மதகுருவான ஆயத்துல்லா ருஹோலா என்பவர் சல்மான் ருஷ்டியை முஸ்லீம்கள் பார்த்த இடத்தில் கொன்று விடுங்கள் என வெளிப்படையாகவே அறிவித்தார். இதனால் சல்மான் ருஷ்டி அச்சததுடனேயே வாழ்ந்து வரும் சூழல் இருந்தது. இந்த நிலையில் நியூயார்க்கில் உள்ள சாட்டகுவா நிறுவனத்தில் நேற்றைய தினம் ஒரு நிகழ்ச்சி நடந்தது.

    எழுத்தாளர்

    எழுத்தாளர்

    இந்த நிகழ்ச்சியில் எழுத்தாளர் சல்மான் ருஷ்டி கலந்து கொண்டார். அப்போது அவரை பத்திரிகையாளர் ஒருவர் பேட்டி எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது சல்மான் ருஷ்டியை அடையாளம் தெரியாத நபர் மேடைக்கு சென்று மறைத்து வைத்திருக்கும் கத்தியால் குத்தினார். இதை பார்த்த பார்வையாளர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர்.

    ரத்தவெள்ளம்

    ரத்தவெள்ளம்

    உடனே மேடையில் இருந்தவர்கள் அந்த நபரை தடுத்தனர். சல்மான் ருஷ்டிக்கு கழுத்து, கைகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். பின்னர் அந்த நிகழ்ச்சிக்கு பார்வையாளராக வந்தவர்களில் மருத்துவர் இருந்ததால் அவர் ருஷ்டிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து உடனடியாக விமான ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    கண் பார்வை இழக்க நேரிடும்

    கண் பார்வை இழக்க நேரிடும்

    அவரது உடல்நிலை மோசமாக பாதிக்கப்பட்டதை அடுத்து அவருக்கு நீண்ட நேரம் அறுவை சிகிச்சை நடந்தது. இந்த நிலையில் சல்மான் ருஷ்டிக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் கூறுகையில் சல்மான் ருஷ்டிக்கு ஒரு கண்பார்வை பறிபோவதற்கு வாய்ப்புகள் உள்ளன. கழுத்து, கை நரம்புகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அவர் தொடர்ந்து வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ளார்.

    24 வயது நபர் கைது

    24 வயது நபர் கைது

    அவருக்கு கல்லீரலிலும் கத்திக்குத்து ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளது என மருத்துவர்கள் தெரிவித்தனர். சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்திய நபர் கைது செய்யப்பட்டார். அவரது பெயர் ஹாதி மதார் என்றும் 24 வயதாகிறது என்றும்,அவர் நியூ ஜெர்சியை சேர்ந்த ஃபேர்வியூ பகுதியை சேர்ந்தவர் என்றும் தெரிய வந்தது. எங்கிருந்தோ மேடைக்கு வந்த மதார், ருஷ்டியை 10 முதல் 15 முறை கத்தியால் குத்தியதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

    English summary
    Indian Novelist Salman Rushdie is on ventilator and he may lose his eye sight.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X