நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குறித்து வச்சுக்கோங்க.. மனித குலத்திற்கே இது ஆபத்தா முடிய போகுது.. எலான் மஸ்க் பரபர வார்னிங்! போச்சே

Google Oneindia Tamil News

நியூயார்க்: மனித குலத்திற்கே ஆபத்தாக முடிய கூடிய விஷயம் ஒன்றை பற்றி எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க் பொதுவாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பதில் வல்லவர். தனக்கு மனதில் தோன்றியதை எல்லாம் அப்படியே பேச கூடியவர் எலான் மஸ்க்.

தான் பேசுவது என்ன விளைவு ஏற்படும், என்ன பிரச்சனை ஏற்படும் என்பதை பற்றியெல்லாம் இவர் கவலையே பட மாட்டார்.

பல சமயங்களில் இப்படி சர்ச்சைக்குரிய விஷயங்களை எலான் மஸ்க் பேசி உள்ளார். இதனால் விமர்சனங்களையும் சந்தித்துள்ளார்.

'ஒப்பந்தத்தை மீற சாக்கு போக்கு கூறுகிறார் எலான் மஸ்க்'. . விட்டு விளாசும் ட்விட்டர்!'ஒப்பந்தத்தை மீற சாக்கு போக்கு கூறுகிறார் எலான் மஸ்க்'. . விட்டு விளாசும் ட்விட்டர்!

என்ன ஆச்சு?

என்ன ஆச்சு?

இந்த நிலையில்தான் மனித குலத்திற்கே ஆபத்தாக முடிய கூடிய விஷயம் ஒன்றை பற்றி எலான் மஸ்க் பேசி உள்ளார். உலகம் முழுக்க மக்கள் தொகை பிரச்சனை கடந்த சில வருடங்களுக்கு முன் வரை அதிகமாக இருந்தது. மக்கள் தொகை வேகமாக உயர்கிறது என்று புகார்கள் வைக்கப்பட்டன. ஆனால் இப்போது திடீரென மக்கள் தொகை குறைவு ஏற்பட்டுள்ளதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. சீனாவில் கூட இரண்டு குழந்தை முறை கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு உள்ளது.

ஏன் தளர்வு

ஏன் தளர்வு

சீனாவில் இனி மக்கள் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்வதற்கான அதிகாரபூர்வ அனுமதியை அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை அங்கு இரண்டு குழந்தைகளுக்கு மட்டும் பெற்றுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு இருந்த நிலையில் தற்போது இந்த விதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. . மக்கள் தொகை கட்டுப்பாடு அந்த நாட்டின் மனித வள பலத்தை குறைத்தது. அந்த நாட்டிற்கே இது எதிராக திரும்ப தொடங்கியது. ஆம் அங்கு வயதானவர்கள் அதிகமானார்கள். ஆனால் இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்தது.

மோசமான நிலை

மோசமான நிலை

ஜப்பான் போல சீனாவும் கொஞ்சம் கொஞ்சமாக இளைஞர்கள் குறைந்து கஷ்டப்படும் நிலைக்கு சென்றது. இதையடுத்து சீனா புதிய குடும்ப கட்டுப்பாட்டு விதிகளை கொண்டு வந்தது. அதேபோல் ரஷ்யாவும் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். 10 குழந்தைகளை பெற்றுக்கொண்டால்.. கடைசி குழந்தைக்கு 14 லட்சம் ரூபாய்க்கு வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. மக்கள் தொகை வேகமாக குறைவது தற்போது பல நாடுகளுக்கு பிரச்சனை ஆகி உள்ளது.

எலான் மஸ்க்

எலான் மஸ்க்

எலான் மஸ்க் இதே பிரச்சனையை சுட்டிக்காட்டி உள்ளார். அதில், குறைந்த பிறப்பு விகிதம் காரணமாக மக்கள் தொகை குறைவது என்பது இந்த மனித குலத்திற்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும். காலநிலை மாற்றத்தை விட மிக பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். காலநிலை மாற்றம் பெரிய ரிஸ்க்தான். ஆனால் நான் சொல்வதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள், என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். மக்கள் தொகை குறைவால் பிரச்சனை ஏற்படும் என்று அவர் எச்சரித்துள்ளார்.

 மக்கள் தொகை

மக்கள் தொகை

உலகம் முழுக்க காலநிலை மாற்றம் வேகமாக ஏற்பட்டு வருகிறது. நினைத்ததை விட இதன் பாதிப்புகள் அதிகமாகிக்கொண்டே செல்கிறது. காலநிலை மாற்றம் காரணமாக இனி எல்லா வருடமும் இயற்கை பேரிடர்கள் ஏற்படும். இனி வாழ்க்கையே இயற்கை பேரிடர்களுக்கு இடையில்தான் இருக்க போகிறது என்று ஐநாவின் ஐபிசிசி அறிக்கை எச்சரிக்கை விடுத்து இருந்தது. இனி உலகின் வெப்பநிலை வேகமாக உயரும், எதிர்பாராத மழை, வெள்ளம் ஏற்படும், பனிப்பாறை உருகும், கடல் நீர் மட்டம் அதிகரிக்கும், காட்டுத்தீ ஏற்படும்.. மனித வாழ்க்கை இனி முன்பு போல இருக்காது என்று ஐபிசிசி எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனாலும் மக்கள் தொகை குறைவால் பிரச்சனை ஏற்படும் என்று எலான் மஸ்க் எச்சரித்துள்ளார்.

English summary
This is the biggest problem for the civilization says Elon Musk. மனித குலத்திற்கே ஆபத்தாக முடிய கூடிய விஷயம் ஒன்றை பற்றி எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X