நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

என்னுடைய ஃபாலோயர்ஸ் குறைஞ்சிட்டே போறாங்க.. என்ன நடக்குது? டிவிட்டர் ஜாக்கிடம் டிரம்ப் புகார்!

டிவிட்டரில் தன்னுடைய பின்தொடர்பாளர்கள் குறைவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் நிறுவனர் ஜாக்கிடம் இன்று புகார் அளித்தார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: டிவிட்டரில் தன்னுடைய பின்தொடர்பாளர்கள் குறைவது குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் டிவிட்டர் நிறுவனர் ஜாக்கிடம் இன்று புகார் அளித்தார்.

உலகில் உள்ள சில முக்கிய அரசியல் தலைவர்கள் டிவிட்டரில் மிகவும் தீவிரமாக இயங்கி வருவது வழக்கம். இந்தியாவில் பிரதமர் மோடியும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தீவிர டிவிட்டர் பயன்பாட்டாளர்கள்.

அதேபோல் அமெரிக்க அதிபர் டிரம்ப் மிக தீவிரமாக டிவிட்டர் பயன்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரின் @realDonaldTrump கணக்கு உலகம் முழுக்க வைரல்.

அண்ணாந்து பார்த்தா ஸ்டார்களுக்கு நடுவுல விளம்பரம்.. ரஷ்யாவின் அடடா ஐடியா!அண்ணாந்து பார்த்தா ஸ்டார்களுக்கு நடுவுல விளம்பரம்.. ரஷ்யாவின் அடடா ஐடியா!

என்ன சொல்வார்

என்ன சொல்வார்

இந்த நிலையில் டிரம்ப் தொடர்ச்சியாக டிவிட்டர், பேஸ்புக், வாட்ஸ் ஆப் மீது நிறைய புகார்களை தெரிவித்து வருகிறார். இந்த சமூக வலைத்தளங்கள் அதீத சுதந்திரத்துடன் செயல்படுகிறது. இது மக்களிடையே பிரச்சனையை உண்டாக்குகிறது. நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக இதை பயன்படுத்துகிறார்கள் என்று குறிப்பிட்டு இருந்தார்.

இழந்தார்

இழந்தார்

இந்த நிலையில்தான் டிரம்ப் திடீர் என்று டிவிட்டரில் 2 மில்லியன் பின்தொடர்பாளர்களை இழந்தார். ஒரு வாரத்தில் அவர் இத்தனை மில்லியன் பாலோயர்களை இழந்தது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவருக்கு தற்போது ஏறக்குறைய 60 மில்லியன் பாலோயர்கள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சந்தித்தார்

சந்தித்தார்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று டிவிட்டர் நிறுவனர் ஜாக்கை சந்தித்தார். இவர்கள் சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது. சுமார் 20 நிமிடம் இவர்கள் பேசினார்கள். அமெரிக்காவில் நடைபெற உள்ளது 2020 தேர்தல், இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களை இவர்கள் விவாதித்தார்கள்.

புகார் அளித்தார்

புகார் அளித்தார்

இந்த நிலையில் டிவிட்டரில் தன்னுடைய பின்தொடர்பாளர்கள் குறைவது குறித்து இந்த சந்திப்பில் டிரம்ப் ஜாக்கிடம் புகார் அளித்தார். இதற்கு பின் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இதற்கு பின் சதி இருக்கிறதா என்று ஆராய வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஜாக் இது குறித்து செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார்.

English summary
Trump complained about his follower count decent to Twitter CEO Jack Dorsey.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X