நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

புதிய வினையூக்கிகளை கண்டுபிடித்து சாதனை.. வேதியியலுக்கான நோபல் பரிசு.. இருவருக்கு பகிர்ந்தளிப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன், ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் ஆகிய வேதியியல் அறிவியலாளர்களுக்கு வேதியலுக்கான 2021ம் ஆண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

2021ம் ஆண்டுக்கான நோபல் பரிசு தினமும் ஒவ்வொரு பிரிவுகளில் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொருளாதாரம், அமைதி, இலக்கியம் , மருத்துவம், இயற்பியல், வேதியியல் ஆகிய பிரிவுகளில் சாதனை படைத்தவர்களுக்கு, புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்படும்.

வேலையை காட்டிய தாலிபான்: நடு வீதியில் கிரேன்களில் கொன்று தொங்க விடப்பட்ட 3 ஆண்கள்.. காரணம் தெரியுமா?வேலையை காட்டிய தாலிபான்: நடு வீதியில் கிரேன்களில் கொன்று தொங்க விடப்பட்ட 3 ஆண்கள்.. காரணம் தெரியுமா?

இந்த நிலையில் இன்று வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன், ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் ஆகியோருக்கு நோபல் பரிசு பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது.

யாருக்கு?

யாருக்கு?

Photo Credit : Wikimedia
புதிய வகை வினையூக்கிகளை இவர்களை கண்டுபிடித்தனர். asymmetric organocatalysis என்ற புதிய வகை வினையூக்கிகளை கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது தனித்துவமான வினையூக்கிகள். வினையூக்கிகள் என்பது வேதிப்பொருட்களுக்கு இடையிலான வினையை வேகப்படுத்தும் சாதனம் ஆகும்.

வினையூக்கி

வினையூக்கி

இதுவரை உலகில் உலோகங்கள் மற்றும் நொதிகள் என்ற இரண்டு வகையான வினை யூக்கிகளே இருந்ததாக நம்பப்பட்டு வந்தது. ஆனால் இவர்கள் தங்கள் ஆராய்ச்சியின் மூலம் புதிதாக தனித்துவமான வினையூக்கிகளை உருவாக்கினார்கள். இதன் காரணமாக புதிதாக மூலக்கூறுகளை உருவாக்க முடியும், புதிய முறையில் மூலக்கூறுகளை உருவாக்க முடியும். வேதியியல் துறையில் இதுவரை இல்லாத மாபெரும் மாற்றத்தை இந்த ஒற்றை கண்டுபிடிப்பு நிகழ்த்தி உள்ளது.

முக்கியம் ஏன்?

முக்கியம் ஏன்?

அதாவது இதுவரை அறிவியல் உலகம் வினையூக்கிகள் குறித்து அறிந்து வைத்து இருந்த அனைத்தையும் இந்த ஒற்றை கண்டுபிடிப்பு புரட்டி போட்டு இருக்கிறது. இதன் காரணமாகவே அமெரிக்காவின் டேவிட் மேக்மில்லன், ஜெர்மனியின் பெஞ்சமின் லிஸ்ட் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வினையூக்கிகளை மருந்துகள் தயாரிப்பில் பயன்படுத்த முடியும். இதனால் எளிமையாக தனித்துவமான மூலக்கூறுகளை உருவாக்க முடியும்.

தனித்துவமான மூலக்கூறு

தனித்துவமான மூலக்கூறு

இது மருத்துவ துறையில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும். மருந்துகளை எளிமையாக உருவாக்கவும், கடினமான மூலக்கூறு கட்டமைப்பை எளிதாக உருவாக்கவும் இந்த வினையூக்கிகள் உதவும் என்பதால் இந்த நோபல் பரிசு இவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது. 1.1 மில்லியன் டாலர் இவர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
Two scientists were awarded the 2021 Nobel Prize in Chemistry for their work on new kind of catalyst invention.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X