முக்கிய டெக்னாலஜி! சிக்கினா போச்சு! கடலில் மூழ்கிய ஒரு விமானத்தை மீட்க.. முட்டிமோதும் சீனா அமெரிக்கா
நியூயார்க்: அமெரிக்காவிற்கு சொந்தமான மிக முக்கியமான போர் விமானமான F-35C போர் விமானம் தென் சீன கடல் எல்லையில் மூழ்கி உள்ளது. இந்த விமானத்தை மீட்க அமெரிக்கா - சீனா இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
அமெரிக்காவில் நிறைய ஸ்டெல்த் வகை விமானங்கள் உள்ளன. பொதுவாக விமானங்கள் பறக்கும் போது அவை ரேடார் கருவிகளில் சிக்கும். ரேடார் அலைகள் விமானங்களின் உடலில் படுவதால் எதிரி நாட்டு ரேடாரிடம் போர் விமானங்கள் சிக்குவது வழக்கும்.
ஆனால் அமெரிக்காவிடம் ரேடாரிடம் சிக்காத சில வகை விமானங்கள் உள்ளன. குறிப்பிட்ட உடல் அமைப்பை கொண்ட இந்த ஸ்டெல்த் விமானங்கள் ரேடார் கதிர்களை சிதறடிக்கும் திறன் கொண்டது. இந்த குறிப்பிட்ட வகை ஸ்டெல்த் விமானங்களை உருவாக்க உலக நாடுகள் கடுமையாக போராடிக் கொண்டு இருக்கின்றன.

அமெரிக்கா விமானம்
முக்கியமாக ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் இந்த விமானங்களை உருவாக்க கடுமையாக முயன்று கொண்டு இருக்கின்றன. அமெரிக்காவுடன் இதே தொழில்நுட்பம் கொண்ட ஹெலிகாப்டர்களும் உள்ளன. பாகிஸ்தானில் ஒசாமாவை கொல்ல சென்ற போது MH-60 Black Hawk helicopter என்ற ஹெலிகாப்டர் விபத்திற்கு உள்ளானது. கடைசியில் இந்த ஹெலிகாப்டரில் தொழில்நுட்பம் பாகிஸ்தானுக்கு கிடைக்க கூடாது என்பதால் உடனே அந்த இடத்திலேயே அமெரிக்க வீரர்கள் இதை வெடி வைத்து தகர்த்தனர்.

ஸ்டெல்த்
அப்போது பாகிஸ்தானுக்கு அவசரமாக வந்த சீனா சிதைந்த பொருட்களை வைத்து அமெரிக்காவின் இந்த ஸ்டெல்த் தொழில்நுட்பத்தை கண்டுபிடிக்க முடியுமா என்று ஆராய்ச்சி செய்து, அதில் தோல்வி அடைந்தது. இந்த நிலையில்தான் இதே ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட அமெரிக்காவின் F-35C போர் விமானம் தென் சீன கடல் எல்லையில் விழுந்து நொறுங்கி உள்ளது. இது சர்வதேச கடல்பகுதியாகும். கடலில் எங்கே இருக்கிறது என்று தெரியாத விமானத்தை கண்டுபிடிக்க சீனா, அமெரிக்கா இரண்டும் தீவிரமாக போட்டிபோட்டுக்கொண்டு இருக்கின்றன.

தென் சீன கடல்
தென் சீன கடல் பகுதியை சீனா மொத்தமாக உரிமை கொண்டாடி வருகிறது. இந்த நிலையில் அமெரிக்காவின் USS Carl Vinson என்ற கடற்படை தளம் அங்கு போர் விமானங்களை வைத்திருக்கும் இடமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இங்கிருந்து ரோந்து பணிக்காக புறப்பட்ட F-35C போர் விமானம்தான் தற்போது தென் சீன கடல் எல்லையில் விழுந்து நொறுங்கி உள்ளது. விமானத்தில் இருந்த 10 பேரும் பாராசூட் உதவியுடன் தப்பித்தனர். ஆனால் விமானம் கடலுக்குள் மூழ்கியது.

USS Carl Vinson
இது ஸ்டெல்த் தொழில்நுட்பம் கொண்ட விமானம் ஆகும். இதில் 6 ஏவுகணைகள் இருந்துள்ளன. 1200 மைல்கல் வேகத்தில் செல்லும் திறன் கொண்டது இது. அதோடு விமானம் பறக்கும் போதே முக்கிய தகவலைகளை டிரான்ஸ்பர் செய்யும் வசதி கொண்டது. எந்த உலக நாடுகளிடமும் இல்லாத பல நவீன தொழில்நுட்பங்கள் இதில் உள்ளன. அதேபோல் இதோடு சேர்ந்து மூழ்கிய ஏவுகணையின் தொழில்நுட்பமும் மற்ற உலக நாடுகளிடம் இல்லை. இந்த F-35C போர் விமானத்தை பறக்கும் கணினி என்றுதான் அழைப்பார்கள்.

US salvage ship
போர் கப்பல்கள், கடற்படை தளங்களில் இருந்து மிக சிறிய ரன்வேயில் கூட எடுக்கக்கூடிய ஆற்றல் கொண்டவை இந்த விமானம் ஆகும். இதன் மதிப்பு 100 மில்லியன் டாலர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்த விமானத்தை கைப்பற்ற அமெரிக்காவின் US salvage ship செல்ல இருக்கிறது. விபத்து நடந்த பகுதிக்கு இந்த கப்பல் செல்ல 10 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் விபத்து நடந்த பகுதிக்கு அருகில் சீனாவின் போர் கப்பல் இருப்பதாக கூறப்படுகிறது.

சீனா திட்டம்
இதனால் சீனா இதை முன்பே கைப்பற்றும் திட்டத்தில் உள்ளது. ஆனால் வெளிப்படையாக சீனா இதை ஒப்புக்கொள்ளாமல் மறுத்துள்ளது. எங்களுக்கு அந்த போர் விமானத்தை கைப்பற்றும் எண்ணம் இல்லை என்று சீனா கூறியுள்ளது. ஆனால் உண்மையில் சீனாவின் டிரோன் விமானங்கள் இந்த போர் விமானத்தை கைப்பற்ற தீவிரமாக முயன்று கொண்டு இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் மிகப்பெரிய சீக்ரெட் ஆகும் இது.

அமெரிக்கா பிளான்
இதை கைப்பற்றினால் சீனாவிடம் புதிய வகை ஸ்டெல்த் தொழில்நுட்பம் கிடைக்கும். அதனால் இதை எப்படியாவது கைப்பற்ற சீனா முயன்று வருகிறது. சீனாவிற்கு முன்பாக அந்த விமானத்தை அமெரிக்கா கண்டுபிடிக்கும் பட்சத்தில் அதை அமெரிக்கா தூக்கி அங்கிருந்து எடுத்து செல்லும். எடுத்து செல்ல முடியாத நிலையில் இருந்தால் அங்கேயே குண்டு வைத்து விமானத்தை சீனா மொத்தமாக தகர்க்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அடுத்த சில நாட்கள் தென் சீன கடல் எல்லை மிகவும் பரபரப்பாக காணப்படும்.












Click it and Unblock the Notifications