நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்.. 264 வாக்குகளுடன் வெற்றியை நெருங்கிய பிடன்.. தோல்வியை நோக்கி டிரம்ப்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் வெற்றியை நெருங்கி வருகிறார். பிடன் வெற்றியை இன்னும் சில மணி நேரங்களில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளார்.

தற்போது வெளியாகி இருக்கும் முடிவுகளின் படி ஜோ பிடன் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.

எத்தனை

எத்தனை

அமெரிக்காவில் மொத்தம் 538 எலக்டர்ஸ் உள்ளனர். இதில் 270 வாக்குகளை அதிபர் வேட்பாளர் பெற வேண்டும். தற்போது பிடன் வெற்றிபெற இன்னும் 6 எலக்டரல் வாக்குகளே தேவை. அமெரிக்க அதிபர் தேர்தலில் மிச்சிகன், விஸ்கான்சின் மாகாணங்களில் பிடன் வென்றதால் பிடன் முன்னிலை வகிக்கிறார். அதேபோல் பென்சில்வேனியா, நெவாடா, ஜார்ஜியாவிலும் பிடன் முன்னிலை வகிப்பதால் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளது.

எப்படி நடக்கும்

எப்படி நடக்கும்

அமெரிக்காவில் எந்த வேட்பாளர் அதிக எலக்ட்ரல் வாக்குகளை பெறுகிறார் என்பதை பொறுத்தே தேர்தல் முடிவுகள் எடுக்கப்படும். அமெரிக்காவில் மக்கள் வாக்குகளை விட.. எலக்ட்ரல் வாக்குகள்தான் அதிபரை தேர்வு செய்யும். அமெரிக்காவில் ஒவ்வொரு மாகாணத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் எலக்டர்ஸ் இருப்பார்கள். அந்த மாகாணத்தில் இருக்கும் செனட் மற்றும் பிரநிதிகள் எண்ணிக்கையின் கூட்டுத்தொகையை பொறுத்து எலக்டர்ஸ் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும்.

உதாரணம்

உதாரணம்

உதாரணமாக தற்போது கலிபோர்னியாவில் 53 பிரநிதிதிகள் மற்றும் 2 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். இதனால் அங்கு மொத்தம் 55 எலக்டர்ஸ் உள்ளனர். மொத்தமாக ஒரு மாகாணத்தில் எந்த வேட்பாளருக்கு அதிக மக்கள் வாக்கு வருகிறதோ.. அங்கு இருக்கும் அனைத்து எலக்டர்ஸ் வாக்குகளும் அந்த குறிப்பிட்ட அதிபர் வேட்பாளருக்கே வழங்கப்படும். உதாரணமாக கலிபோனியாவில் பிடன் 51% மக்கள் வாக்குகளை வென்று டிரம்ப் 49 % வாக்குகளை வென்றால்.. மொத்தமாக கலிபோனியார்னியாவில் உள்ள 55 எலக்டர்ஸ் வாக்குகளும் பிடனுக்கே வழங்கப்படும்.

வெற்றி

வெற்றி

பெரும்பாலும் மக்கள் அதிகம் வாக்களிக்கும் வேட்பாளருக்கே எலக்ட்ரல் வாக்குகளும் அதிகம் விழும். இந்த வகையில்தான் முக்கியமான மாகாணங்களில் பிடன் வென்று, தற்போது வெற்றியை நெருங்கி வருகிறார். மொத்தமாக 538 எலக்ட்ரல் வாக்குகளில் 270 யாருக்கு கிடைக்கிறதோ அவர்தான் வெற்றிபெறுவார். பிடன் வெற்றிபெற இன்னும் 6 வாக்குகளே தேவை.

English summary
US Presidential Election 2020: Biden may win soon as he won 264 votes against Trumps 214
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X