நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சுழற்றி சுழற்றி அடிக்கும் காற்று.. நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே காட்டுத் தீ பரவும் அபாயம்

கர்நாடக-தமிழக எல்லையில் காட்டு தீ பரவியதால் மரங்கள் எரிந்து கருகின

Google Oneindia Tamil News

ஊட்டி: நாளெல்லாம் சுழட்டி.. சுழட்டி.. அடிக்கும் காற்று காரணமாக நீலகிரி மாவட்டத்தில் ஆங்காங்கே தீ பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஒருவாரமாக நீலகிரியில் பலத்த காற்று வீசி வருகிறது. பருவநிலை மாற்றத்தின் காரணமாக, இந்த காற்று வீசுகிறது. இதனை வறட்சி காற்று என்கிறார்கள். ஏற்கனவே 3 மாதங்களாக உறைபனியில் காய்ந்து போன செடி, கொடிகள் இந்த வறட்சி காற்றின் காரணமாக மேலும் கருகி கிடக்கின்றன.

Forest fire in TN-Karnataka Border

அது மட்டுமல்ல, இது போன்ற நேரத்தில் காய்ந்து கிடக்கும் புல்வெளி பகுதிகளில் ஒரு சிறு தீப்பொறி பட்டாலும் அது பெரிய விபத்தையே ஏற்படுத்தி விடும். நேற்றுகூட முதுமலை ஒட்டிய பந்திப்பூர் வனத்தில் பயங்கர காட்டுத்தீ பரவியது. இந்த வனப்பகுதியில்தான் புலி, யானை உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

திடீரென ஏற்பட்ட தீயை பார்த்ததும் சாலைகளில் போய்க் கொண்டிருந்த மக்கள் எல்லோருமே அலறியடித்து ஓடினார்கள். வனப்பகுதியில் இருந்த மரங்கள், செடிகள், கொடிகள் காய்ந்து இருந்ததால் தீ மளமளவென பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் பந்திப்பூர்-கூடலூர் நெடுஞ்சாலையில் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டுவிட்டது.

நேற்று முழுவதும் இந்த தீயை அணைக்க பெருத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால் வெயில் கொடுமை வந்துவிட்டதால், அதிலிருந்து தப்பித்து நீலகிரி வரும் சுற்றுலா பயணிகள் இந்த காற்றை ரசித்து அனுபவித்து செல்கிறார்கள்.

English summary
Massive Fire spread in Banthipur forest area in Nilgiris
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X