நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சுழன்று சுழன்று வேலை பார்த்த திவ்யா.. நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா உறுதி.. மக்கள் சோகம்

நீலகிரி மாவட்ட கலெக்டருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

Google Oneindia Tamil News

ஊட்டி: நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரது முகாம் அலுவலகத்திலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

Recommended Video

    கடைசியில் கலெக்டருக்கும் கொரோனா: தனிமைப்படுத்தி கொண்ட இன்னசென்ட் திவ்யா!

    கடந்த வருடம் நீலகிரியையும் இந்த கொரோனா விட்டு வைக்கவில்லை.. காரணம், ஒரு பக்கம் கேரளா, இன்னொரு பக்கம் கர்நாடகா, என மூன்று மாநில எல்லைகளையும் கொண்டதுதான் இந்த மலை மாவட்டம்... இதனால், எல்லைகள் அனைத்துமே இழுத்து மூடப்பட்டன..

    கடைசி வரை போராடி, மற்ற மாவட்டங்களைவிட பச்சை மண்டலத்துக்கு முதல் மாவட்டமாக மிக வேகமாக முன்னேறியது நீலகிரி... இதற்கு காரணம் சாட்சாத் கலெக்டர் இன்னசென்ட் திவ்யாதான்.

    செம நியூஸ்..! மீண்டும் தொடங்கிய நீலகிரி மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்செம நியூஸ்..! மீண்டும் தொடங்கிய நீலகிரி மலை ரயில் சேவை.. சுற்றுலா பயணிகள் உற்சாகம்

     மார்க்கெட்டுகள்

    மார்க்கெட்டுகள்

    இந்த 2 வருடங்களாகவே தினந்தோறும் ஆய்வுகள் நடத்துவதும், அதிகாரிகளிடம் ஆலோசனை மேற்கொள்வதுமாக இருந்தார்.. பிறகு நேரடியாகவே மார்க்கெட்டுகள், உழவர் சந்தை என மொத்த இடங்களிலும் ஆய்வு செய்தார்... யாரெல்லாம் மாஸ்க் போடவில்லையோ, அவர்களை கூப்பிட்டு சத்தம் போடுவார்.. அப்படி யாராவது மாஸ்க் போடாவிட்டாலும் 200 ரூபாய் ஸ்பாட் ஃபைன் போடுங்க என்று உத்தரவிடுவார்..

     பிளீச்சிங் பவுடர்

    பிளீச்சிங் பவுடர்

    கடைகளுக்கு வெளியே பிளீச்சிங் பவுடரை தெளிக்க சொல்வார்.. இல்லாவிட்டால் அந்த கடையை இழுத்து மூடுங்க என்று உடனிருக்கும் அதிகாரிகளுக்கு ஆர்டர் போடுவார்.. அதனால் கலெக்டர் திவ்யா, தூரமாக வருவதை பார்த்தாலே, விதிகளை மீறிய பலருக்கு நடுக்கம் வந்துவிடும்.. பக்கத்து மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து நீலகிரி மாவட்டத்திற்கு வர இ -பாஸ் கட்டாயமாக்கப்பட்டது..

     முதல்வர் ஸ்டாலின்

    முதல்வர் ஸ்டாலின்

    ஏராளமான பழங்குடி கிராமங்களுக்கு சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன.. இறுதியில், இந்தியாவிலேயே அனைத்து பழங்குடியின மக்களும் 100 சதவீதம், வேக்சின் போட்டுக்கொண்ட ஒரே மாவட்டமாக நீலகிரி கெத்து காட்டி உள்ளது.. முதல்வர் ஸ்டாலின் இதற்கு பாராட்டு தெரிவித்து, கலெக்டருக்கு விருதும் தந்து ஊக்கப்படுத்தினார். இப்போது நீலகிரியில் நாளுக்கு நாள் தொற்று பாதிப்பு எண்ணிக்கையும் குறைந்து கொண்டிருக்கிறது.

    தளர்வுகள்

    தளர்வுகள்

    கடந்த சில நாட்களாகவே கொரோனா கேஸ்கள் 20 என்ற அளவிலேயே உள்ளது... தொற்று பரவல் குறைந்துள்ளதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு, சுற்றுலா தலங்கள் அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன... இதனால் விடுமுறை நாட்களில் சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் ஊட்டியில் அலைமோதி கொண்டிருக்கிறது. இதனிடையே, இன்னசென்ட் திவ்யா கடந்த சில நாட்களாக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார்.

     தொற்று உறுதி

    தொற்று உறுதி

    தமிழக ஆளுநர் ஆர்என் ரவி சென்னை திரும்பிய போதுகூட, அவரை வழியனுப்பவும் கலெக்டர் வரவில்லை. அவரது மகனுக்கு கொரோனா உறுதியானதால், அவர் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கவில்லை என்று காரணம் சொல்லப்பட்டது.. ஆனால், இப்போது கலெக்டருக்கே தொற்று உறுதியாகி உள்ளது... தொற்று உறுதியானதையடுத்து பிங்கர்போஸ்ட் அருகே உள்ள அவரது முகாம் அலுவலகத்தில் அவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.

    English summary
    Nilgiris collector Innocent Divya tested positive for corona virus
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X