நீலகிரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மூர்க்கத்தனமாக ‘மூர்த்தி’.. மிரளவிட்ட ‘முதுமலை’! இனிமே ரெஸ்ட் தான்! கண்ணீர் மல்க கிடைத்த கவுரவம்!

Google Oneindia Tamil News

நீலகிரி : முதுமலையில் சிறந்த கும்கிகளாக பணியாற்றி வந்த 2 வளர்ப்பு யானைகளான மூர்த்தி மற்றும் முதுமலை ஆகிய 2 கும்கி யானைகள் ஓய்வு பெற்றது, ஓய்வு பெற்ற யானைகள் அலங்கரிக்கப்பட்டு மற்ற யானைகளுடன் சிறப்பான உணவுகள் வழங்கி ஓய்வு சான்றிதழ் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

Recommended Video

    மூர்க்கத்தனமாக ‘மூர்த்தி’.. மிரளவிட்ட ‘முதுமலை’! இனிமே ரெஸ்ட் தான்! கண்ணீர் மல்க கிடைத்த கவுரவம்!

    நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள யானைகள் முகாம் நூற்றாண்டு பழமை வாய்ந்தது. ஆங்கிலேயர் காலத்தில் காட்டு யானைகளை பிடித்து பழக்கபடுத்தி வன விலங்குகளை வேட்டையாட யானைகள் பயன்படுத்தபட்டு வந்தது.

    பின்னர் கும்கி யானைகள் விளை நிலங்களை சேதப்படுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டவும், மனித மோதல்களில் ஈடுபடும் யானைகளை பிடிக்கவும் கும்கி யானைகள் பயன்படுத்தி வரபட்டது. இந்நிலையில் முதுமலை தெப்பகாடு வளர்ப்பு யானைகள் முகாமில் 29 வளர்ப்பு யானைகள் பராமரிக்கபட்டு வருகிறது.

     ஆனைக்கட்டி பகுதியில் காயமடைந்த யானை - தேடும் பணியில் வனத்துறை - கும்கி யானைகள்! ஆனைக்கட்டி பகுதியில் காயமடைந்த யானை - தேடும் பணியில் வனத்துறை - கும்கி யானைகள்!

    கும்கி யானைகள்

    கும்கி யானைகள்

    இந்த யானைகளுக்கு கும்கி பயிற்சிகள் அளிக்கப்பட்டு வன பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொள்ளவும், பொது மக்களை அச்சுறுத்தி வரும் காட்டு யானைகளை விரட்டவும், பிடிக்கவும் ஈடுபடுத்தபட்டு வருகிறது. இந்த கும்கி யானைகள் அரசு ஊழியர்களாக செயல்பட்டு வருகிறது. இந்த யானைகளுக்கு 58 வயதானதுடன் பணி ஓய்வும் அளிக்கப்படுகிறது.

    முதுமலை

    முதுமலை

    இந்நிலையில் 1967ம் ஆண்டு முதல் பணியாற்றி வந்த முதுமலை என்ற யானையும், 1998-ம் ஆண்டு கேரளாவில் 10 பேரை கொன்று, தமிழகத்தில் 12 பேர் என 22 பேரை கொன்ற மக்னா யானையை தமிழக வனத்துறையினர் பிடித்து அதனை கும்கியாக மாற்றி முதுமலையில் பணியாற்றி வந்த மூர்த்தி என்ற யானையும் 58 வயதை எட்டியதையடுத்து இன்று முதுமலை தெப்பகாடு முகாமில் பணி ஓய்வு வழங்கபட்டது.

    ஓய்வு

    ஓய்வு

    இரண்டு யானைகளுக்கும் நெற்றி பட்டம் சூட்டி அலங்கரிக்கபட்டு சிறப்பு உணவுகள் வழங்கபட்டது. ஓய்வு பெறும் யானைகளை சுற்றுலா பயணிகள் பார்த்து அவற்றுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். பின்னர் பழங்குடியின மக்கள் பாரம்பரிய இசையை வாசிக்க யானைகள் அழைத்து வரவழைக்கப்பட்டு மைதானத்தில் நிறுத்தி வைக்கபட்டது.

    கெளரவம்

    கெளரவம்

    ஓய்வு பெறும் யானைகளுக்கு முதுமலை கள இயக்குநர் வெங்கடேஷ் சான்றிதழ்களை வழங்கி பாகன்களுக்கு சால்வைகளை அணிவித்து கௌரவித்து யானைகளுக்கு பழங்களை வழங்கினர். அப்போது சக யானைகள் துதிக்கையை தூக்கி பிளறி பிரியா விடை கொடுத்தன. இந்த காட்சிகள் அங்கிருந்தவர்களை நெகிழ வைத்தது. ஓய்வு பெறும் யானைகள் இனிமேல் பணிகளில் ஈடுபடுத்த போவதில்லை, அரசு ஊழியர்களை போல் ஓய்வு பெறும் 2 யானைகளை பார்த்து சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்து சென்றனர்.

    English summary
    Murthy and Mudumalai, 2 domesticated elephants who were working as best kumkis in Mudumalai retired, the retired elephants were decorated and honored with a retirement certificate along with other elephants with special food ; முதுமலையில் சிறந்த கும்கிகளாக பணியாற்றி வந்த 2 வளர்ப்பு யானைகளான மூர்த்தி மற்றும் முதுமலை ஆகிய 2 கும்கி யானைகள் ஒய்வு பெற்றது
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X