பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பீகார்.. வேகமெடுக்கும் பாஜக.. பெரும்பான்மைக்கு தேவையான பலத்தை தாண்டி மீண்டும் முன்னிலை

இன்று வெளியாகிறது பீகார் தேர்தல் முடிவுகள்

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபைத் தேர்தலில் ஐக்கிய ஜனதாதளம் பாஜக கூட்டணி 124 தொகுதிகளிலும், ஆர்ஜேடி காங்கிரஸ் கூட்டணி 107 தொகுதிகளிலும் முன்னிலை வகுத்து வருகின்றன. மற்ற கட்சிகள் 12 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. சற்று பின்தங்கிய நிலையில் இருந்த பாஜக, தற்போது மீண்டும் வேகமெடுத்து, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்து வருகிறது பாஜக!

Recommended Video

    Bihar Election வாக்கு எண்ணிக்கை ! Congress உஷார் | Oneindia Tamil

    பீகாரில் நிதிஷ்குமார் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது... கடந்த 15 வருஷமாகவே நிதிஷ் குமார் முதல்வராக இருக்கிறார்.. அவரது பதவிக்காலம் வரும் 29ம் தேதி முடிவடைய உள்ளதையொட்டி, தேர்தல் நடந்தது.

    மொத்தமுள்ள 243 தொகுதிகளுக்கும் கடந்த அக்டோபர் 28, நவம்பர் 3, 7 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் நடந்து முடிந்தது.. இந்த வாக்கு எண்ணிக்கைதான் இன்று நடக்கிறது.. மொத்தம் 38 மாவட்டங்களில் உள்ள 55 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணும் பணி தொடங்கியது.

    பீகார்: ரிசல்ட் பரபரப்புக்கு நடுவே பிறந்த நாள் கொண்டாடிய தேஜஸ்வி யாதவ்! பீகார்: ரிசல்ட் பரபரப்புக்கு நடுவே பிறந்த நாள் கொண்டாடிய தேஜஸ்வி யாதவ்!

    வாக்குகள்

    வாக்குகள்

    வழக்கம்போல், முதலில் தபால் ஓட்டுக்கள் எண்ணி முடிக்கப்படும்.. அதற்கு பிறகு மற்ற வாக்குகள் எண்ணப்பட உள்ளன... அதனால், வாக்கு எண்ணும் மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரிகையாளர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்காக தலா 2 கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன... எல்லா வாக்கு எண்ணிக்கை மையங்களிலும், மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளன... துணை ராணுவப்படை, பீகார் காவல்துறை, வெளிமாவட்ட காவல்துறை ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

     மையங்கள்

    மையங்கள்

    வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு வரும் அதிகாரிகள், கட்சி முகவர்கள் மாஸ்க் அணிவது வருவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்றும், கிருமிநாசினி பாட்டில்கள், கை கழுவ தேவையான தண்ணீர் உள்ளிட்டவை தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்றும் தேர்தல் ஆணையம் ஏற்கனவே தெரிவித்திருந்தது.

    முடிவுகள்

    முடிவுகள்

    மேலும் ஒவ்வொரு சுற்று முடிவுகளும் மைய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள டிஜிட்டல் திரையில் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

     அடுத்த முதல்வர்

    அடுத்த முதல்வர்

    அடுத்த முதல்வர் யார் என்ற எதிர்பார்ப்பு அந்த மாநில மக்களை மட்டும் இல்லாமல், இந்தியாவையே பற்றிக் கொண்டுள்ளது.. தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்து கணிப்புகளில், தேஜஸ்வி யாதவ் தலைமையிலான மெகா கூட்டணிக்கே அதிக வெற்றி வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்டது.. அந்த கணிப்புகள் இன்று பொய்யாகுமா? அல்லது தேஜஸ்வி வெற்றி பெறுவாரா என்று இன்று தெரிந்துவிடும்.

    காங்கிரஸ்

    காங்கிரஸ்

    இந்த தேர்தல் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்டுகளுக்கும் மிக முக்கியமான தேர்தல்.. ஒருவேளை இதில் வெற்றி பெற்றுவிட்டால், இரு கட்சிகளுமே புத்துணர்ச்சி பெறும்.. அந்த வெற்றி வாய்ப்பு வருங்காலத்தில் இக்கட்சிகளின் பலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக இருக்கும்.

    English summary
    Bihar Assembly Election Results 2020 Live Updates in Tamil
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X