"ஸோம்பியாக" மாறிய நாய்கள்.. தேடி தேடி மனிதர்களை வேட்டையாடிய கொடூரம்! அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு
பாட்னா: பீகார் மாநிலத்தில் மனிதர்களை தொடர்ந்து தாக்கி கொன்று வந்த தெருநாய்களை சுட்டு கொல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து இப்பணியில் சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். தற்போது வரை 30 தெரு நாய்கள் கொல்லப்பட்டுள்ளன.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தின் பச்வாரா பகுதியில் கடந்த சில நாட்களாகவே தெருநாய்களின் தொல்லை தொடர்ந்து அதிகரித்து வந்திருக்கிறது. இதனை எவ்வளவோ கட்டுப்படுத்தியும் முற்றிலுமாக ஒழிக்க முடியவில்லை. இந்த நாய்கள் தாக்கியதால் தற்போது வரை 9 பெண்கள் உயிரிழந்துள்ளனர். பெண்கள் வயலில் வேலை செய்யும்போது கூட்டமாக வந்து தாக்கியுள்ளன. இதனால் அவர்கள் தப்பி செல்ல முடியாமல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிடுகின்றனர்.
இந்த பிரச்னை மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும் என்று பெகுசராய் மாவட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த தெரு நாய்கள் மனிதர்களை மட்டுமல்லாது ஆடு மாடு போன்ற கால் நடைகளையும் தாக்கி கொன்றுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த நெருக்கடியை கணக்கில் கொண்டுதான் தெரு நாய்களை சுட்டு கொல்ல மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

மாற்றம்
இப்பிரச்னை கடந்த சில மாதங்களாக இருந்து வந்துள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த நாய்கள் இறைச்சிக்காக மனிதர்களை தாக்குவதில்லை. அதேபோல கும்பலாகவும் தாக்குதலை நடத்துவதில்லை. பொதுவாக யாராவது ஒருவரை வெளியூர் நபரை ஒரேயொரு நாய் மட்டும் கடித்து வைக்கும். இதனால் பாதிக்கப்பட்ட நபர் அரசு மருத்துவமனையில் ரேபிஸ் தடுப்பூசி செலுத்திக்கொள்வார். உயிரிழப்பு பெரும்பாலும் ஏற்படுவதில்லை. எப்போதாவது ஒன்றிரண்டு ஏற்படும். ஆனால் சமீபக நாட்களாக இந்த நாயின் குணாதிசயங்கள் மாறி வந்திருக்கின்றன. இவைகள் தற்போது குழுவாக சேர்ந்து வேட்டையாட தொடங்கியுள்ளன.

வேட்டை
இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "இந்த தெரு நாய்களை யாரும் பராமரிக்க மாட்டார்கள். அதனால் இவைகள் கிடைப்பதை தின்று வாழும். எங்கள் கால்நடைகள் உயிரிழந்துவிட்டால் வசதி இருப்பவர்கள் அதனை புதைப்பார்கள். ஆனால் பலரும் கால்நடைகளை காட்டு பகுதியில் வீசிவிடுவார்கள். இந்த கால்நடைகளின் பிணத்தை தின்றுதான் இந்த தெருநாய்கள் வளர்ந்துள்ளன. தற்போது கிராமத்தில் கால் நடைகள் எண்ணிக்கையும் குறைவு. அப்படி இருக்கையில் தினமும் எப்படி தெருநாய்களுக்கு தீனி கிடைக்கும்? ஆகவே நாய்கள் தங்களுக்காக வேட்டையில் இறங்கிவிட்டன.

உயிரிழப்பு
இதுதான் இத்தனை உயிரிழப்புகளுக்கு காரணம். இவ்வாறு வேட்டையில் ஈடுபடும் நாட்கள் பெரும்பாலும் தனியாக இருக்கும் மனிதர்களையே குறி வைத்து தாக்கும். குறிப்பாக வயல் வேலைக்கு செல்லும் பெண்கள், இரவில் தனியாக நடந்து வரும் பெண்கள்தான் இந்த நாய்களின் டார்கெட். குறி வைக்கப்பட்ட மனிதர்களை தாக்கி அங்கேயே கொன்று உடலை முடிந்த வரை இவைகள் திண்றுவிடுகின்றன. சில நேரங்களில் இந்த தாக்குதல் அக்கம் பக்கத்தினருக்கு தெரிய வந்தால் அவர்கள் போய் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு கொண்டுவருவார்கள். அப்படி கொண்டு வந்தாலும் மருத்துவமனையில் இவர்கள் உயிரிழந்துவிடுவார்கள்" என்று கூறியுள்ளனர்.

30 தெருநாய்கள்
இந்த சம்பவத்தையடுத்து மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறையினர் ஆலோசனை மேற்கொண்டனர். பின்னர் நாய்களை முற்றிலுமாக ஒழித்துக்கட்டுவது என்று முடிவு செய்தனர். அதன்படி இந்த நாய்கள் அழிக்க துப்பாக்கிச்சுடும் வீரர்கள் களத்தில் இறக்கப்பட்டனர். தற்போது வரை 30 தெருநாய்கள் சுட்டு கொல்லப்பட்டுள்ளன. இதனால் ஓரளவு கிராம மக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். இருப்பினும் இவைகள் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டால்தான் நிம்மதியடைய முடியும் என்று கூறியுள்ளனர்.
-
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை! -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ!












Click it and Unblock the Notifications