பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'பீகாரில் கொரோனா 3வது அலை ஏற்கனவே தொடங்கிவிட்டது..' முதல்வர் நிதீஷ் குமார் பரபர பேச்சு

Google Oneindia Tamil News

பாட்னா: பீகாரில் கொரோனா 3ஆம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு தொடர்ந்து குறைந்தே வந்தது. கொரோனா வேக்சின் பணிகளும் வேகமாக நடைபெற வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் வந்தது,

Covid third wave has begun in Bihar, says CM Nitish Kumar

இந்தச் சூழ்நிலையில், ஓமிக்ரான் பாதிப்பு கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியாவுக்குள் நுழைந்தது. அதன் பிறகு நாட்டின் பல மாநிலங்களிலும் வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது.

கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 9,195 பேருக்குப் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நேற்றைய தினம் 6,358 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்ட நிலையில், இன்றைய தினம் வைரஸ் பாதிப்பு 44% அதிகரித்துள்ளது.

இந்தச் சூழ்நிலையில், பீகாரில் கொரோனா 3ஆம் அலை ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அம்மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரே நாளில் பீகாரில் 47 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் நிதீஷ் குமார் இப்படிக் கூறியுள்ளார்.

Recommended Video

    ஓமிக்ரான் அச்சம்.. பொதுஇடங்களில் நியூ இயர் கொண்டாட்டம் வேண்டாம்… அமைச்சர் வேண்டுகோள்!

    முன்னதாக, கடந்த டிசம்பர் 25ஆம் தேதி, செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் நிதீஷ் குமார் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்பில்லை எனக் குறிப்பிட்டார். தற்போதைய சூழ்நிலையில் இரவு ஊரடங்கு தேவையில்லை என்று அவர் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bihar Chief Minister Nitish Kumar has said the third wave of the Covid-19 pandemic has already begun in Bihar. This comes after the state recorded 47 new Covid cases in the last 24 hours.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X