பாட்னா அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சிராக் பாஸ்வான் மூலம் நடந்த துரோகம்.. கோபத்தில் ஜேடியூ.. ஆர்ஜேடியுடன் கை கோர்த்து ஷாக் தருமா?

Google Oneindia Tamil News

பாட்னா: பீகார் சட்டசபை தேர்தல் க்ளைமாக்ஸ் நிமிடத்துக்கு நிமிடம் எகிறிக் கொண்டே போகிறது. பீகாரின் அரசியல் சூழ்நிலையில் எந்த ஒரு நிகழ்வும் எப்போதும் நடக்கலாம் என்கிற நிலையே உள்ளது.

பீகாரில் திடீரென தேர்தல் இறுதி முடிவுகளை தேர்தல் ஆணையம் வேகமாக அப்டேட் செய்து வருகிறது. இன்னமும் 97 தொகுதிகளின் முடிவுகள்தான் அறிவிக்கப்பட வேண்டும்.

தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மோசடி.. தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டு.. 10 தொகுதிகள் 'டார்கெட்'தேர்தல் முடிவுகளை அறிவிப்பதில் பெரும் மோசடி.. தேஜஸ்வி பகீர் குற்றச்சாட்டு.. 10 தொகுதிகள் 'டார்கெட்'

ஜேடியூவை விட பாஜக அதிகம்

ஜேடியூவை விட பாஜக அதிகம்

146 தொகுதிகளின் முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் பாஜக-41; ஜேடியூ 27 இடங்களில் வென்றுள்ளன; பீகாரில் நினைத்ததைப் போலவே ஜேடியூவைவிட அதிக இடங்களைக் கைப்பற்றிவிட்டது பாஜக.

சிராக் பாஸ்வான் மூலம் சாதித்த பாஜக

சிராக் பாஸ்வான் மூலம் சாதித்த பாஜக

ஜேடியூவின் முதுகில் பாஜக குத்திதான் பாஜக இந்த வெற்றியை அறுவடை செய்திருக்கிறது. தமது கூட்டணி கட்சிகளில் ஒன்றாக சிராக் பாஸ்வானையே ஜேடியூவுக்கு எதிராக போட்டியிட வைத்துதான் பாஜக தேர்தல் வெற்றியை சாதித்திருக்கிறது. இதனை ஜேடியூவும் உணராமல் இல்லை.

பாஜகவுக்கு ஜேடியூ பதிலடி?

பாஜகவுக்கு ஜேடியூ பதிலடி?

இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சிக்கு பதிலடி தரும் வகையில் ஜேடியூ எந்த நிமிடத்திலும் தடலாடி முடிவு எடுக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகளுடன் ஜேடியூ திடீரென கைகோர்த்து பாஜகவை பழிவாங்கவும் வாய்ப்புகள் உண்டு என்பதை மறுக்க முடியாது.

பழைய கூட்டணிதான்..

பழைய கூட்டணிதான்..

2015 சட்டசபை தேர்தலை ஆர்ஜேடி-காங்கிரஸுடன் இணைந்து எதிர்கொண்டதுதான் ஜேடியூ. 2 ஆண்டுகளுக்குப் பின்னர் முரண்பாடுகளால்தான் பாஜகவின் தயவை நாடியது ஜேடியூ. ஆனால் பாஜகவோ ஜேடியூவை நம்பவைத்து சிராக் பாஸ்வான் மூலம் கழுத்தறுவிட்டது என்பதை கேசி தியாகி போன்ற ஜேடியூ தலைவர்கள் குமுறலாக வெளிப்படுத்துவதால் ஜேடியூ தடாலடி எதனையும் மேற்கொள்ளக் கூடும் என்கிற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

English summary
JDU may join hands with RJD-Cong lead allinace after the Bihar Assembly Election Results.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X