2024-ம் ஆண்டு தேர்தலில் நீங்கள்தான் பிரதமர் வேட்பாளரா?.. பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஓபன் டாக்!
பாட்னா: வரும் 2024-ம் ஆண்டு தேர்தலில் பாஜனதா கூட்டணியை எதிர்த்து போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் நீங்கள் தானா? என்ற நிருபர் கேள்விக்கு பீகார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் பதிலளித்துள்ளார்.
பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் பாஜகவுடன் கூட்டணி அமைத்து வெற்றியும் பெற்று ஆட்சியையும் தக்க வைத்துகொண்டது.
இதையடுத்து அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்டார். எனினும் ஆட்சி அமைத்ததில் இருந்தே, பாஜகவுடன் நிதிஷ் குமாருக்கு மனக்கசப்பு இருந்து வந்ததாகவே தெரிகிறது. மேலும் எப்போது வேண்டுமானாலும் கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் விலகக்கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

பாஜகவுக்கு எதிராக மெகா கூட்டணி
அதேபோல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், பாஜக அரசு எங்கள் கட்சியை உடைக்க முயற்சிக்கிறது என கூறியதோடு மட்டுமல்லாமல், பாஜக உடனான கூட்டணியை முறித்துக்கொள்கிறோம் என்றும் நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாகவும் நிதிஷ் குமார் அறிவித்தார். அதற்கேற்ப ஆளுநர் மாளிகைக்கு சென்று பாகு சவுகானிடம் ராஜினாமா கடிதத்தையும் அவர் அளித்தார். தொடர்ந்து பீகார் மாநிலத்தில் ஜேடியு, ஆர்ஜேடி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் அடங்கிய மெகா கூட்டணி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இந்த மெகா கூட்டணியின் தலைவராக நிதிஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

8-வது முறையாக முதல்வர்
அடுத்தடுத்து நடந்த இந்த நிகழ்வை தொடர்ந்து ஜேடியூ-ஆர்ஜேடி-காங்கிரஸ் கூட்டணி அரசின் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றார். பீகார் மாநிலத்தில் 8-வது முறையாக முதல்வர் பதவியை ஏற்ற நிதிஷ்குமாருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதேபோல, ஆர்ஜேடி தலைவர் தேஜஸ்வி யாதவ் துணை முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பீகார் முதல்வர் நிதிஷ் குமாரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். இக்கேள்விகளுக்கு பதிலளித்த நிதிஷ் குமார் கூறியதாவது; -

ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கக்கூடாது?
''தேஜஸ்வி யாதவ் கூறியது சரியானதே. இளைஞர்களுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கி கொடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறோம்" என்றார். அப்போது துணை முதல்வர் தேஜஸ்வி யாதவிற்கு இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டதை பாஜக விமர்சிக்கிறதே என்று நிதிஷ் குமாரிடம் கேள்விகள் எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த நிதிஷ் குமார், அவர்கள்( பாஜக) ஏன் ஆட்சேபம் தெரிவிக்கிறார்கள்? தேஜஸ்வி யாதவ் துணை முதல்வர். அவருக்கு ஏன் இசட் பிளஸ் பாதுகாப்பு அளிக்கக்கூடாது? பாஜகவினர் முட்டாள்தனமாக பேசுகின்றனர். அவர்களின் பேச்சு பயனற்றது.

அனைவருக்கும் பணியாற்றுவதே
தங்களின் கட்சி நலனுக்காக எனக்கு எதிராக குற்றம் சாட்டி பேசி வருகின்றனர். அவர்களது சொந்த கட்சியால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டவர்கள் எனக்கு எதிராக பேசி வருகின்றனர். எனக்கு எதிராக பேசினால்தான் அவர்களுக்கு ஏதாவது பதவி கிடைக்கும்" என்றார். அப்போது வரும் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் நீங்கள்தான் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவீர்களா? என்று கேள்வி எழுப்பிய போது, "எனக்கு அது போன்ற எந்த எண்ணமும் கிடையாது என இருகரங்களையும் கூப்பி உங்களிடம் சொல்லிக்கொள்கிறேன். அனைவருக்கும் பணியாற்றுவதே எனது பணியாகும். அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைந்து செயல்பட வைக்க முயற்சிப்பேன். எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து வந்தால் அது சிறப்பானதாக இருக்கும்" என மழுப்பலாக பதிலளித்து விட்டார்.

பாசிட்டிவ் ஆன பணிகளை
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் உங்கள் பங்கு என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பிய போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க நாங்கள் விரும்புகிறோம். நான் பாசிட்டிவ் ஆன பணிகளை செய்து வருகிறேன். எனக்கு நிறைய போன் கால்கள் வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க அனைத்து பணிகளையும் செய்வேன். ஆனால் முதலில் எனது பணியை இங்கு (பீகார்) தான் செய்வேன்" என்றார்.

பாசிட்டிவ் ஆன பணிகளை
தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையில் உங்கள் பங்கு என்னவாக இருக்கும் என்று கேள்வி எழுப்பிய போது, அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒருங்கிணைக்க நாங்கள் விரும்புகிறோம். நான் பாசிட்டிவ் ஆன பணிகளை செய்து வருகிறேன். எனக்கு நிறைய போன் கால்கள் வருகின்றன. எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்க அனைத்து பணிகளையும் செய்வேன். ஆனால் முதலில் எனது பணியை இங்கு (பீகார்) தான் செய்வேன்" என்றார்.
-
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
'அதிக பிரசங்கித்தனம்' சிபிஎம் கண்டனம் குறித்த கேள்விக்கு பிரவீன் சக்கரவர்த்தி கொடுத்த ரியாக்சன்! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
'We the Leaders' தொடக்கம்.. தமிழ்நாட்டில் புதிய சக்தியாக உருவெடுக்கும் அண்ணாமலை! -
“அதிகப் பிரசங்கித்தனம்”.. காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி பதிவால் டென்ஷன் ஆன சிபிஐஎம்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
என் குழந்தையின் முக ஜாடையை தப்பா பேசுறாங்க! முக்தார், சூர்யா சிவா மீது அலிஷா அப்துல்லா புகார் -
தன் பதவியையே காப்பாற்ற முடியாத ஜோதிடர்.. விஜய்க்கு வழிகாட்டுகிறாராம்! விளாசிய மா.கம்யூ., சண்முகம் -
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே!












Click it and Unblock the Notifications