ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேரை தேடி தேடி வந்து கொத்திய பாம்பு.. அதிரும் கிராம மக்கள்!
பாட்னா: பீகார் மாநிலம் பவானிபூரில் பாம்பு கடித்து இறந்த தனது அண்ணனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த தம்பியும் பாம்பு கடித்து இறந்த சோகம் ஏற்பட்டுள்ளது.
பீகார் மாநிலம் பவானிபூர் கிராமத்தை சேர்ந்தவர் அரவிந்த் மிஸ்ரா (38). இவர் பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். இவரது இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள கோவிந்த் மிஷாரா (22) வந்துள்ளார்.
இரவில் இவர் தூங்கிக் கொண்டிருந்த போது இவரை பாம்பு கடித்தது. இதனால் இவரும் உயிரிழந்தார். அத்துடன் அதே வீட்டில் இருந்த உறவினர்களில் ஒருவரான சந்திரசேகர் பாண்டேவையும் (22) பாம்பு கடித்துள்ளது.

மருத்துவமனை
இதையடுத்து பாண்டே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவரது நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அரவிந்த் மிஷாராவின் இறுதிச் சடங்குகளில் கலந்து கொள்ள வந்த கோவிந்த் மிஸ்ரா, சந்திரசேகர் பாண்டே ஆகிய இருவரும் பஞ்சாப் மாநிலம் லூதியானாவிலிருந்து வந்தனர்.

ஜென்மம்
பொதுவாக தன் ஜோடியை கொன்றவர்களின் குடும்பத்தை பாம்புகள் ஜென்மம் ஜென்மமாக கடிக்கும் என சினிமாக்களில் பார்த்துள்ளோம். ஆனால் தற்போது பீகார் விவகாரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாம்பு கடியால் இறந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உலக சுகாதார நிறுவனம்
இதுகுறித்து உலக சுகாதார நிறுவனம் கூறுகையில் 81 ஆயிரம் முதல் 1,38,000 மரணங்கள் பாம்புக் கடிகளால் ஆண்டுதோறும் ஏற்படுகிறது. இவற்றில் பாதி இறப்பு இந்தியாவில் இருந்து ஏற்படுகிறது. பாம்பு கடித்து சிகிச்சை பெற இயலாதவர்கள், மருத்துவர்களை அணுகாமல் அனுபவமில்லாதோரை வைத்து சுய வைத்தியம் செய்து இறந்தோரின் எண்ணிக்கை இந்த கணக்கில் கொண்டு வரப்படவில்லை.

90 சதவீதம்
இந்தியாவில் 90 சதவீதம் பாம்புக் கடி 4 பெரிய பாம்புகளால் மட்டுமே நிகழ்கிறது. அவை காமன் கிரைட், இந்தியன் கோப்ரா, ரஸ்ஸல் வைபர் மற்றும் சா ஸ்கேல்டு வைபர் ஆகியவை ஆகும். பாம்பு கடித்தால் விஷம் உடல் முழுவதும் பரவாமல் தடுப்பது எப்படி என்பது குறித்து விழிப்புணர்வு இருந்தால் பாம்பு கடி மரணங்கள் இந்தியாவில் குறையும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications