புதுச்சேரி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சாவர்க்கர் யார் தெரியுமா.. 10 ஆண்டு சிறை வரலாறு.. எதையும் எதிர்கொள்வேன்.. ஆளுநர் தமிழிசை அதிரடி!

Google Oneindia Tamil News

புதுச்சேரி: சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை தியாக சுவரில் பொறித்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று தமிழிசை செளந்தரராஜன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Recommended Video

    சாவர்க்கர் யார் தெரியுமா.. 10 ஆண்டு சிறை வரலாறு - ஆளுநர் தமிழிசை

    ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவடைகிறது. இதை கோலாகலமாகக் கொண்டாட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
    இதற்காக பல்வேறு நிகழ்ச்சிகளை மத்திய அரசு ஏற்பாடு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி கடற்கரை சாலையில் உள்ள தியாக சுவரில் சவார்க்கர் பெயர் பொறித்த கல் பதிக்கப்பட்டது. இதற்கு அம்மாநில முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி எதிர்ப்பு தெரிவித்தார். மேலும் பல்வேறு சமூக அமைப்பினர் துணைநிலை ஆளுநரின் உருவப்படத்தை எரித்து போராட்டம் நடத்தினர்.

    சாவர்க்கர் ஒன்றும் தியாகி அல்ல.. அவர் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படிக்க வேண்டும்..நாராயணசாமி அதிரடி! சாவர்க்கர் ஒன்றும் தியாகி அல்ல.. அவர் சுயசரிதையை ஆளுநர் தமிழிசை படிக்க வேண்டும்..நாராயணசாமி அதிரடி!

    தமிழிசை செளந்தரராஜன் கருத்து

    தமிழிசை செளந்தரராஜன் கருத்து

    இதனைத்தொடர்ந்து புதுச்சேரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தராரஜன், சாவர்க்கர் ஒன்றும் கள்ளக் கடத்தல் செய்து சிறையில் இருந்தவர் இல்லை. அவர் நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர். அவர் மீது சிலருக்குக் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். எனக்கும் கூடத் தான் சில தலைவர்கள் மீது கருத்து வேறுபாடுகள் இருக்கிறது.

    சாவர்க்கர்

    சாவர்க்கர்

    ஆனால், அவர்கள் விடுதலைக்காகப் பாடுபட்டவர்கள். அதனால் கருத்து வேறுபாடுகளை மறந்து, நாட்டின் விடுதலைக்காக அவர்கள் செய்த நல்லதை மட்டுமே எடுத்துக் கொண்டேன். சாவர்க்கர் நாட்டின் சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட ஒரு வீரர். இதை நான் மட்டும் சொல்லவில்லை. வரலாற்று ஆவணங்களையும் பார்த்தாலே இது நமக்குத் தெரியும் என்று தெரிவித்தார்.

    நாராயணசாமி எதிர்ப்பு

    நாராயணசாமி எதிர்ப்பு

    இதற்கு புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி, சாவர்க்கர் ஒன்றும் தியாகி அல்ல. தமிழிசை செளந்தரராஜன் அவரின் சுயசரிதையை படிக்க வேண்டும் என்று பதிலளித்தார். இதனால் இருவருக்கும் வார்த்தை மோதல் ஏற்பட்டது.

    இந்த நிலையில் புதுச்சேரி அருகே வில்லியனூர் பகுதியில் உள்ள தனியாத் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 12வது பட்டமளிப்பு விழாவில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கலந்துகொண்டு மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கினார்.

    எதிர்கொள்ளத் தயார்

    எதிர்கொள்ளத் தயார்

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்து தமிழிசை செளந்தரராஜன் கூறுகையில், நாட்டிற்காக போராடிய சாவர்க்கர் 10 ஆண்டுகள் தனிமை சிறையில் இருந்துள்ளார். சுதந்திரத்திற்காக ஒருநாள் போராடினால் கூட அவர்களை கொண்டாட வேண்டும். சாவர்க்கர் பெயர் பொறித்த கல்லை புதுச்சேரியில் உள்ள தியாக சுவரில் பதித்ததில் எந்த தவறும் இல்லை.

    இதை யாரும் அரசியலாக்க வேண்டாம். அப்படி அரசியலாக்கினால் கூட எதிர்கொள்ள தயார். தேசத்தை பற்றி தெரியாதவர்கள் சாவர்க்கரை எதிர்ப்பவர்கள். நாட்டிற்காக போராடியவர்களை கொச்சைப்படுத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

    English summary
    Governor Tamilisai soundarrajan has appealed not to politicize the issue of carving the stone with Savarkar's name on the sacrificial wall.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X