அதிகாலையில் வாக்கிங் போன லட்சுமி யானை..மயங்கி விழுந்து மரணம்..மணக்குள விநாயகர் கோவிலில் சோகம்
புதுச்சேரி: மணக்குள விநாயகர் கோவிலில் 25 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்த யானை லட்சுமி திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. லட்சுமி யானைக்கு பக்தர்கள் கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
புதுச்சேரியில் பிரசித்தி பெற்ற மணக்குள விநாயகர் கோவில் உள்ளது. 1995 ஆம் ஆண்டு ஐந்து வயதில் லட்சுமி யானை மணக்குள விநாயகர் கோவிலுக்கு பக்தர் ஒருவரால் வழங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை விநாயகருக்கு சேவை செய்தும், பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் ஆசீர்வாதம் வழங்கி வந்தது. மேலும் புதுச்சேரி மக்களிடமும் பொதுமக்களிடமும் அன்பாக பழகக்கூடியது.
நான்கு கால்களிலும் கொலுசு அணிந்து ஜல் ஜல் என வலம் வரும் அழகை காணவே சிறுவர்களும், பக்தர்களும் வருவார்கள். யானை லட்சுமி பலருக்கும் செல்லப்பிள்ளையாக வலம் வந்தது.

யானை லட்சுமி
பாசத்திற்குரிய பழகுவதற்கு இனிமையான நல் உள்ளம் கொண்ட யானை லட்சுமி வழக்கம் போல் இன்று விடியற்காலை ஈஸ்வரன் கோயில் அருகே உள்ள தனது இருப்பிடத்திலிருந்து நடை பயிற்சிக்காக வெளியே சென்றது. கல்வே காலேஜ் அருகே நடந்து சென்ற போது திடீரென யானை லட்சுமி மயங்கி கீழே விழுந்தது. மருத்துவர்களும், யானை பாகனும்பல முயற்சிகள் எடுத்தும் பலனில்லை. யானை லட்சுமி பறிதாபமாக உயிரிழந்தது.

யானை திடீர் மரணம்
தகவல் அறிந்து விரைந்து வந்த அமைச்சர் லட்சுமிநாராயணன் யானைக்கு அஞ்சலி செலுத்துவதற்காக கிரேன் மூலம் கோவிலுக்கு எடுத்துச்சென்றனர். உயிரிழந்த லட்சுமி யானைக்கு பட்டு சேலை போர்த்தியும் மலர்கள் தூவியும் ஏராளமான பொதுமக்களும், பக்தர்களும் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தி வருகின்றனர்.

கண்ணீர் அஞ்சலி
25 ஆண்டுகளுக்கும் மேலாக மணக்குள விநாயகர் கோவிலில் செல்லப்பிள்ளையாக வலம் வந்த யானை திடீரென உயிரிழந்தது புதுச்சேரியில் பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஏராளமான பக்தர்கள் கண்ணீர்விட்டு அழுது அஞ்சலி செலுத்தினர். எங்கள் குடும்பத்தில் ஒருவரைப்போல வலம் வந்த யானை மரணமடைந்தது மிகப்பெரிய இழப்பு என்று பக்தர்கள் கூறியுள்ளனர். யானை பாகன் உயிரிழந்த லட்சுமியின் அருகிலேயே அமர்ந்து கண்ணீர் விட்டு கதறியது பலரையும்சோகத்தில் ஆழ்த்தியது.

தமிழிசை சவுந்தரராஜன் அஞ்சலி
உயிரிழந்த யானை மணக்குள விநாயகர் கோவில் வாசலில் பக்தர்கள் அஞ்சலி செலுத்த வைக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தினார். யானை பாகனுக்கும் அவர் ஆறுதல் கூறினார். யானை லட்சுமி ஆசி வழங்கியது மட்டுமல்ல நம்மிடம் விளையாடும். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சிசிடிவி காட்சிகள்
இதனிடையே உயிரிழந்த லட்சுமி யானை அதிகாலையில் வாக்கிங் சென்ற போது மயங்கி விழுந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது. உடல் நலம் குன்றியிருந்த யானை நடக்க முடியாமல் திடீரென கீழே விழுந்து உயிரிழந்த காட்சிகள் பதிவாகி உள்ளன.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications