Isha Singh: கண்களை விரித்து! கையை நீட்டி! புஸ்ஸி ஆனந்தை திட்டிய ஈஷா சிங்! புதுவை உள்துறை அமைச்சர் பாராட்டு
புதுச்சேரி: புதுவையில் நடந்த தவெக தலைவர் விஜய்யின் பொதுக் கூட்டத்திற்கு சிறப்பான பாதுகாப்பு அளித்த காவல் கண்காணிப்பாளர் ஈஷா சிங்கை, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பொன்னாடை போர்த்தி பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
தவெக பொதுக் கூட்டம் புதுவை உப்பளம் துறைமுகம் மைதானத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்தது. இந்த கூட்டத்திற்கு எஸ்.பி. ஈஷா சிங் சிறப்பாக பாதுகாப்பு வழங்கியிருந்தார்.

கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்திற்கு பிறகு 73 நாட்கள் கழித்து புதுவையில் தவெக சார்பில் பொதுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
இந்த பொதுக் கூட்டத்திற்கு 5000 பேருக்கு மட்டுமே அனுமதி என சொல்லப்பட்டது. அது போல் கியூஆர் கோடுடன் கூடிய பாஸ் இருப்போருக்கு மட்டுமே அனுமதி என சொல்லப்பட்டது.
ஆனால் தவெக பொதுக் கூட்டத்தில் பாஸ் இல்லாதவர்களையும் உள்ளே விடுமாறு ஆனந்த் கூறிய போது கோபமடைந்த எஸ்பி ஈஷா சிங், "நான் என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் எனக்கு சொல்லித் தருகிறீரா?" என ஆவேசமாக கேட்டார். மேலும் 40 பேர் இறந்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
இவர் புஸ்ஸியை ஆவேசமாக கண்டித்துக் கொண்டிருந்த கேப்பில் உள்ளே நுழைந்தவர்களை பிடித்து வெளியே அனுப்பினார். அது போல் புஸ்ஸி ஆனந்த் கட்சியினர் மத்தியில் மைக்கில் பேசினார். அவர் பேசுகையில், "பொறுமையாக இருங்க எல்லாரையும் அனுப்புறோம்"னு சொன்னுதான் தாமதம், அவரிடம் இருந்து ஈஷா சிங் மைக்கை பறித்துக் கொண்டார்.
ஈஷா சிங், மகாராஷ்டிர மாநிலம், மும்பையை சேர்ந்தவர். இவர் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டு யுபிஎஸ்சி தேர்வு எழுதி ஐபிஎஸ்ஸாக தேர்ச்சி பெற்றார். 2014 ஆம் ஆண்டு பேட்சை சேர்ந்தவர். கல்வி மேம்பாட்டிலும் நிர்வாகத் திறமையிலும் சிறந்தவர். இவர் டெல்லி, அருணாசல பிரதேசம், அந்தமான் நிகோபார் தீவுகள் உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பொறுப்புகளில் வகித்துள்ளார்.
குற்றத் தடுப்பு, சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, பெண்கள் பாதுகாப்பு, போக்குவரத்து உள்ளிட்ட துறைகளிலும் தனது திறமையை காட்டினார். புதுவை எஸ்பியாக நியமிக்கப்பட்ட ஈஷா , பொதுக் கூட்டங்கள், அரசியல் நிகழ்வுகள், கூட்ட நெரிசல் உள்ளிட்டவைகளில் கடுமையான பாதுகாப்பு நடைமுறைகளை அமல்படுத்தியுள்ளார்.
விதிகளை மீறினால் அவர் அதை சகித்துக் கொள்ள மாட்டார். பெண்கள் பாதுகாப்பு, இரவு ரோந்துப் பணிகள், சைபர் குற்றங்களை கட்டுப்படுத்துதல் ஆகியவற்றில் முன்னோடியான நடவடிக்கைகள் எடுத்து வருகிறார்.
ஈஷா பெங்களூரில் 2018 ஆம் ஆண்டு சட்டம் படித்தார். தற்போது பொது நல வழக்குகளில் வழக்கறிஞராக வாதாடி வருகிறார். செப்டிக் டேங்க் சுத்தப்படுத்தும் பணியில் இறந்த ஊழியர்களின் மனைவிகளுக்கு தனது வாத திறமையால் வாதாடி ரூ 10 லட்சம் இழப்பீடு பெற்றுத் தந்தார். ஒரு அதிகாரியால் போலியாக ஜோடிக்கப்பட்ட ஒரு வழக்கில் கைதாகி சிறையில் இருந்த பெண்ணுக்கு ஜாமீன் பெற்றுக் கொடுத்தார் ஈஷா சிங். எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் நீதியை நிலைநாட்டும் வகையில் ஈஷா செயல்பட்டு வருகிறார்.
-
சஞ்சய் 4 வருஷமாக படும்பாடு.. விஜய் நிஜ ஹீரோ இல்ல, தந்தையாக தோற்று விட்டார்! பிரபலம் ஆதங்கம் -
போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு -
ஒவ்வொரு தொகுதியிலும் உங்க விஜி! தவெக லிஸ்ட்டில் இதை கவனிச்சீங்களா? ’விஜய்’ பெயரில் 17 வேட்பாளர்கள்! -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்! -
புற்றுநோய்க்கு ஜோதிடம்தான் தீர்வு! அரிய கருத்தை சொன்னவருக்கு சீட் கொடுத்த விஜய்! சரியா போச்சு போங்க -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
குழந்தையை விட்டு வந்துருக்கோம் எங்க வேதனை புரியுமா..வில்லிவாக்கத்தில் விஜய்யை திட்டி தீர்த்த பெண்கள் -
சென்னையில் விஜய் பிரசாரம் திடீர் ரத்து.. வில்லிவாக்கம் செல்லாமல் வீடு திரும்புகிறார் -
மீண்டும் மீண்டுமா? விஜய்யை பார்க்க டிரான்ஸ்ஃபார்மர் மீது ஏற முயன்ற தவெகவினர்! அசம்பாவிதம் தவிர்ப்பு -
"அன்புதானே எல்லாம்" ராமதாஸுக்கே அறிவுரை கூறிய பெரம்பூர் பாமக வேட்பாளர்! யார் இந்த திலகபாமா? -
என்ன விஜய் இதெல்லாம்? கம்பத்தில் கதி கலங்கிய தவெக! 'சாதி வெறியன்' என அறிவித்துக்கொண்டவருக்கு சீட்! -
என் மகிழ்ச்சி இதுதான்! இறுதியாக ஒரே ஊரில் சேர்ந்து விட்டோம்! திரிஷாவின் பீலிங் ஆன போஸ்ட்! இதுதான் பதிலடியா?












Click it and Unblock the Notifications