"உடல்நலக்குறைவு".. குடியரசு தின விழாவில் பாதியில் கிளம்பிய திமுக எம்பி அப்துல்லா.. நடந்தது என்ன?

குடியரசு தின விழாவில் தேசியக் கொடி ஏற்றுவதற்குள் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லா கிளம்பியதால் பரபரப்பு.

Subscribe to Oneindia Tamil

புதுக்கோட்டை: திமுக மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இருந்து பாதியில் கிளம்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சர்ச்சையை தொடர்ந்து, உடல்நலக்குறைவு காரணமாகவே தான் அங்கிருந்து கிளம்பியதாக திமுக எம்பி அப்துல்லா தெரிவித்துள்ளார்.

இன்று இந்தியாவின் 74வது குடியரசு தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக்கொடி ஏற்றி வைக்கிறார். அதேபோல, மாநில தலைநகர்களில் மாநில ஆளுநர்கள் தேசியக்கொடி ஏற்றுகின்றனர்.

இன்று காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரை தொழிலாளர் சிலை அருகே தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக்கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.

மாவட்ட தலைநகரங்களில்

மாவட்ட தலைநகரங்களில்

ஒவ்வொரு மாவட்ட தலைநகரங்களிலும், அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்துகின்றனர். இந்த நிகழ்வுகளில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரசு அதிகாரிகளும், பார்வையாளர்களும் பங்கேற்கின்றனர். மாவட்டங்களில் நடைபெறும் குடியரசு தின விழாவில் அரசு நடைமுறை விதிகளின்படி மாவட்ட ஆட்சியர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு, எம்.எல்.ஏ, எம்.பி ஆகிய மக்கள் பிரதிநிதிகள், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு இருக்கை ஒதுக்கப்படுவது வழக்கம்

 புறக்கணித்த எம்.பி?

புறக்கணித்த எம்.பி?

இந்த நிலையில் புதுக்கோட்டையில் நடைபெறும் குடியரசு தின விழாவில், தனக்கு இருக்கை முறையாக ஒதுக்கப்படவில்லை என்று கூறி தேசியக் கொடியேற்றும் முன்பாகவே திமுக எம்.பி எம்.எம் அப்துல்லா இந்த குடியரசு விழாவை புறக்கணித்து சென்றதாக பல்வேறு ஊடங்களிலும், சமூக ஊடகங்களிலும் செய்திகள் வந்தன. ஆனால் திமுக எம்பிஅப்துல்லாவிற்கு உடல்நிலை சரியில்லாததே அவர் அங்கிருந்து வெளியேற காரணம் என்று உண்மையான தகவல் வெளியாகி உள்ளது.

 அதிருப்தி அடைந்த எம்.பி

அதிருப்தி அடைந்த எம்.பி

அதன்படி குடியரசு தின விழாவில் கலந்து கொள்வதற்காக தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா புதுக்கோட்டை ஆயுதப்படை மைதானத்திற்கு இன்று காலை வந்தார். அங்கே எம்.எம்.அப்துல்லா சில நிமிடங்கள் இருந்துவிட்டு பின்னர் கொடி ஏற்றுவதற்கு முன்பாக தனது காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டு சென்றார். விழாவில் முழுதாக இல்லாமல் பாதியில் கிளம்பி சென்றார். இதையடுத்து அவர் சீட் பிரச்சனையால் கிளம்பி சென்றதாக பாஜகவினரும், அதிமுகவினரும் இணையத்தில் புகார் வைத்தனர்.

வேறு முக்கிய வேலை

இது தொடர்பாக பாஜக நிர்வாகி நிர்மல் குமார் உள்ளிட்டோர் வைத்த புகாருக்கு எம்பி அப்துல்லா பதில் அளித்துள்ளார். அதில், கண்ணு தெரியலையாப்பா??? கையில ஊன்று கோல் இருப்பது தெரியலையா?? a vascular necrosis ஆல் அதிக நேரம் அமர முடியாது.. எனவே உடல்நலக் குறைவிலும் மரியாதை நிமித்தமாக வந்து தகவல் சொல்லிவிட்டு கிளம்பினேன். உடல் நலக் குறைவு என்பது யாருக்கும் வரும்.. நாளை உனக்கும் வரும் உணர்க, என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+