கள்ளக்குறிச்சி விவகாரம்: வாட்ஸ் ஆப் குழு மூலம் போராட்டத்திற்கு ஆள் சேர்ப்பு-ஆலங்குடியில் 6 போ் கைது
புதுக்கோட்டை : கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டம் நடத்த வாட்ஸ் ஆப் குழு அமைத்து, ஆள் சோ்த்ததாக புதுக்கோட்டை ஆலங்குடி பகுதியைச் சோ்ந்த 6 இளைஞா்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்த மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்ட நபர்கள், மாணவி படித்த தனியார் பள்ளியை கடந்த 17ம் தேதி சூறையாடினர். வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தினர். இதனால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. வீடியோ ஆதாரத்தைக் கொண்டு வன்முறையில் ஈடுபட்ட 200-க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், மாணவியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு தொடர்ந்து போராட்டம் நடத்த ஆர்ப்பாட்டக்காரர்கள் வாட்ஸ் அப் மூலம் குழு மூலம் ஒருங்கிணைந்து, பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். அவர்களை போலீசார் அடையாளம் கண்டு உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர். எனினும், வாட்ஸ் அப் மூலம் குழு அமைத்து, பல்வேறு மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் ஒருங்கிணைந்து வருவது, காவல்துறைக்கு கடும் சவாலாக உள்ளது.
இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து, வாட்ஸ் அப் குழு அமைத்து, அதில் 510 பேரை உறுப்பினர்களாக சேர்த்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவியின் உயிரிழப்புக்கு நீதிகேட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் அணி திரள்வோம் என்றும் அந்த வாட்ஸ் அப் குழுவில் பகிர்ந்துள்ளனர். இதுகுறித்த தகவல், புதுக்கோட்டை மாவட்ட போலீசாருக்கு தெரியவந்ததை தொடர்ந்து, ஆலங்குடி காவல் நிலைய ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியை சேர்ந்த மனிராஜ் மற்றும் சுந்தரராஜ் ஆகியோர், அந்த வாட்ஸ் அப் குழுவின் அட்மின் ஆக செயல்பட்டு, அவதூறு பதிவுகளை தொடர்ந்து பகிர்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களுக்கு ஐயப்பன் என்பவரும் உறுதுணையாக இருந்துள்ளார் என்பதும் தெரியவந்தது.
இதனையடுத்து, வாட்ஸப் குழுவின் அட்மினாக செயல்பட்ட மணிராஜ், அவருக்கு உடந்தையாக இருந்த சுந்தரராஜ், அய்யப்பன் உள்ளிட்ட வாட்ஸ் அப் குழுவில் உறுப்பினராக இருந்த 15 பேரை போலீசார் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கள்ளக்குறிச்சி சம்பவத்தை மையமாக வைத்து கலவரத்தை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், சட்டவிரோத போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
ஆலங்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜ், சிக்கப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மணிராஜ், மேல பொன்னன் விடுதி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன், மாங்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன், கட்ராம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் மற்றும் மாங்கோட்டை மேலப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 17 வயது சிறுவன் உட்பட ஆறு பேரை கைது செய்தனர். இதில் 17 வயது சிறுவனை மட்டும் திருச்சி சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்த போலீசார், மற்ற ஐந்து பேரையும் ஆலங்குடி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி அவர்களை புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர்.
Recommended Video
கள்ளக்குறிச்சி சம்பவத்தின் எதிரொலியாக வாட்ஸ் ஆப் தளம் உருவாக்கி கலவரத்தை தூண்ட முயன்றதாக, ஆலங்குடி பகுதியைச் சேர்ந்த ஆறு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications