எச். ராஜா மீதான ரூ4 கோடி பதுக்கல் புகார்- காரைக்குடியில் பாஜக பிரதிநிதி விசாரணை- சரமாரி புகார்கள்!
காரைக்குடி: பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான எச். ராஜா மீதான ரூ4 கோடி தேர்தல் செலவு பணத்தை பதுக்கிய விவகாரம் தொடர்பாக பாஜகவின் அமைப்பு செயலாளர் கேசவ விநியாகம் இன்று காரைக்குடியில் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையின் போது எச். ராஜா, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
சட்டசபை தேர்தலில் காரைக்குடி தொகுதியில் போட்டியிட்டு எச். ராஜா தோல்வி அடைந்தார். ஏற்கனவே லோக்சபா தேர்தலிலும் போட்டியிட்டு எச். ராஜா தோல்வி அடைந்தார்.

நிர்வாகிகள் மீது புகார்
தமது தேர்தல் தோல்விக்கு பா.ஜ.க. நிர்வாகிகள் மீதே எச்.ராஜா குற்றம்சாட்டினார். இதனை நிராகரித்த சிவகங்கை மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள், எச். ராஜாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கூண்டோடு கட்சி பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ரூ4 கோடி தேர்தல் பணம் பதுக்கல்
மேலும் சட்டசபை தேர்தல் செலவுக்கு கட்சி மேலிட கொடுத்த பணத்தில் ரூ4 கோடியை எச். ராஜா பதுக்கிக் கொண்டார்; இந்த பணத்தில்தான் எச்.ராஜா தற்போது வீடு கட்டி வருகிறார் என்றும் ராஜினாமா செய்த பா.ஜ.க. நிர்வாகிகள் புகார் பட்டியல் வாசித்தனர்.

எச். ராஜா மீது விசாரணை
எச்.ராஜா மீதான இந்த புகார்கள் டெல்லி பாஜக மேலிடம் வரை சென்றது. இதனால் வேறுவழியே இல்லாமல் எச்.ராஜா மீதான புகார்கள் குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர் எல். முருகன் தெரிவித்திருந்தார்.

காரைக்குடியில் விசாரணை
இந்நிலையில் பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவ விநியாகம் காரைக்குடிக்கு சென்றார். தமிழக பாஜக தலைமை உத்தரவுப்படி எச்.ராஜா மீதான புகார் குறித்து விசாரணை நடத்தினார். குறிப்பாக ரூ4 கோடி பணம் பதுக்கியது தொடர்பாக கட்சி நிர்வாகிகளிடம் அவர் கேட்டார்.

ஆதாரங்களுடன் புகார்கள்
இந்த விசாரணையின் போது எச்.ராஜா மீது ஏராளமான புகார்களை பா.ஜ.க. நிர்வாகிகள் சரமாரியாக அடுக்கி இருக்கின்றனர். இதற்கான ஆதாரங்களையும் பா.ஜ.க. நிர்வாகிகள், கேசவ விநாயகத்திடம் கொடுத்தனர். ஆனால் இன்றைய விசாரணையில் எச்.ராஜா பங்கேற்கவில்லை.

எச். ராஜாவிடம் விளக்கம் கேட்கப்படும்
அனைத்து புகார்களையும் கேட்டுக் கொண்டார் கேசவ விநாயகம். இதனடிப்படையில் எச்.ராஜாவிடம் விளக்கம் கேட்கப்பட இருக்கிறது. இதன்பின்னரே எச். ராஜா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? இல்லையா என்பது தெரியவரும் என்கின்றனர் பாஜக நிர்வாகிகள்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம் -
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்!












Click it and Unblock the Notifications