ராமநாதபுரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யாழ்ப்பாணத்தில் பாக். தூதர்.. நடுக்கடலில் இலங்கை தீவிர ரோந்து- ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு!

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: கச்சத்தீவு அருகே பாரம்பரியமான மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து இலங்கை கடற்படை விரட்டியடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக மீனவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக பாரம்பரிய மீன்பிடி பகுதிகளில் மீன்பிடித்து வருகின்றனர். ஆனால் கச்சத்தீவு இலங்கைக்கு தாரை வார்க்கப்பட்டது முதல் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டுவதாக அபாண்டமாக குற்றம்சாட்டுகிறது இலங்கை.

இலங்கையின் அட்டூழியம் தொடருகிறது- கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது! இலங்கையின் அட்டூழியம் தொடருகிறது- கச்சத்தீவு அருகே மீண்டும் தமிழக மீனவர்கள் 6 பேர் கைது!

மீனவர்கள் படுகொலை

மீனவர்கள் படுகொலை

எல்லை தாண்டி மீன்பிடித்தார்கள் என்ற ஒற்றை காரணத்துக்காக 800 தமிழக மீனவர்களை சுட்டுப் படுகொலை செய்துள்ளது இலங்கை. தமிழக மீனவர்களின் நூற்றுக்கணக்கான மீன்பிடி படகுகளை பறிமுதல் செய்துள்ளது. தற்போது வரை தமிழக மீனவர்களை கைது செய்து இலங்கை சிறையில் அடைப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது இலங்கை. இதனை எந்த ஒரு மத்திய அரசும் இதுவரை தட்டி கேட்டது இல்லை.

கச்சத்தீவு அருகே விரட்டியடிப்பு

கச்சத்தீவு அருகே விரட்டியடிப்பு

இந்த நிலையில் கச்சத்தீவு அருகே இன்று ராமேஸ்வரத்தை சேர்ந்த 2,500 மீனவர்கள் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். இது தமிழரின் பாரம்பரிய மீன்பிடி பகுதி. தமிழக மீனவர்களை கண்டதும் சுற்றி வளைத்தது இலங்கை கடற்படை. மேலும் தமிழக மீனவர்களின் வலைகளை அறுத்து அப்பகுதியில் இருந்து மீனவர்களையும் விரட்டியடித்தது. இதனால் உயிரை கையில் பிடித்தபடி ராமேஸ்வரம் மீனவர்கள் கரை திரும்பினர்.

இலங்கை வடக்கில் பாக். தூதர் முகாம்

இலங்கை வடக்கில் பாக். தூதர் முகாம்

இதனிடையே இலங்கை கடற்படையின் இந்த அட்டூழியம் தொடர்பாக விசாரித்த போது அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. அதாவது இலங்கையில் ஈழத் தமிழர்களின் தாயகப் பகுதியான வட மாகாணத்தை வளைக்கும் நோக்கில் சீனாவை தொடர்ந்து பாகிஸ்தானும் களமிறங்கி உள்ளது. இலங்கைக்கான பாகிஸ்தான் தூதர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கி, யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் ஆய்வு நடத்தினார். யாழ்ப்பாணம் பொதுநூலகத்தையும் அவர் பார்வையிட்டார். யாழ்ப்பாணத்துக்கு இரண்டு நாள் பயணமாக உமர் பாரூக் புர்கி சென்றுள்ளார். யாழ்ப்பாணம் கடற்பரப்பில் இருந்து இந்திய கடற்பரையும் புர்கி கண்காணித்தார் எனவும் கூறப்படுகிறது.

பாக். ஆதரவு கெத்தில் தாக்குதல்?

பாக். ஆதரவு கெத்தில் தாக்குதல்?

மேலும் புர்கியின் இந்த பயணத்தை முன்னிட்டே வழக்கத்தைவிட கூடுதலான கடற்படை மன்னார் வளைகுடாவில் களமிறக்கப்பட்டு ரோந்து பணியில் ஈடுபட்டது. சீனா, பாகிஸ்தான் ஆதரவு தங்களுக்கு இருக்கிறது என்ற மமதையில் இலங்கை கடற்படை, தமிழக மீனவர்களைக் கண்டதும் விரட்டியடித்தும் வலைகளை அறுத்தும் அட்டூழியத்தில் ஈடுபட்டிருக்கிறது.

முதல்வர் ஸ்டாலின் கடிதம்

முதல்வர் ஸ்டாலின் கடிதம்

அண்மையில்தான் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், 98 மீன்பிடி படகுகள் இலங்கையின் கட்டுப்பாட்டில் இருப்பதால் ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. பாக் ஜலசந்தியில் பாரம்பரிய உரிமைகள் மீறப்படுவது, இந்திய மீனவர்களின் பாதுகாப்புக்கு தொடர்ச்சியான அச்சுறுத்தலாக உள்ளது. இந்திய மீனவர்கள் வளைகுடா பகுதியில் மீன்பிடிக்கும் போது அச்சுறுத்தலை எதிர்கொள்ளாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

English summary
Rameswaram Fishermen alleged they were chased away by the Sri Lankan Navy near Katchatheevu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X